எந்த முறையிலான வன்முறையும் தீயதே. அப்பாவியான மிருகங்களை கொல்வது அப்பட்டமான மூர்க்க குணத்திற்கு வழி வகுக்கும் என்று பகவான் மனிதன் மிருகத்தனமாக தன் நாக்கின் ருசிக்காக மிருகங்களை கொன்று உண்பதை பற்றி பேசும் போது குறிப்பிட்டார். கலியுகத்தின் உச்சத்தில் மனிதன் தன் மனித தன்மையை மறந்து மிருகம் போல் மாமிசம் உண்ண பழகி விட்டான்.
மெர்சினி என்பவர் மனிதனின் உணவு தட்டை அலங்கரிக்கும் உணவுக்காக கொல்லப்படும் மிருகங்களின் துயரம் பற்றி விவாதிக்கின்றார்.
மெர்சினி என்பவர் மனிதனின் உணவு தட்டை அலங்கரிக்கும் உணவுக்காக கொல்லப்படும் மிருகங்களின் துயரம் பற்றி விவாதிக்கின்றார்.
தாவரங்களுக்கும் மிருகங்களை போன்று உயிர் உள்ளது. ஆனால் மிருகங்களுக்கு நரம்பு மண்டலமும் மனதும் உள்ளது. தாவரங்களுக்கு இவை கிடையாது. பகவான் சத்திய சாயி பாபா அன்பின் அவதாரம். சத்திய சாயி ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்காக நம்மை சைவ உணவுக்கு மாறும் படி வலியுருத்துகின்றார், இதில் மனிதர்கள் உண்ணும் மிருகங்கள் படும் துயரமும், கொடுமையை, பற்றி மட்டும் இந்த கட்டுரையில் குறிப்பிடுகின்றேன்.
இந்த ஒன்று மட்டுமே மாமிசம் உண்பதை தவிர்க்க போதும் என்று குறிப்பிடுகின்றார்.
ஒரு மிருகம் கொல்லப்படும்போது அதற்கு வலி, துன்பம் தீங்கு இழைக்கப்படுகின்றது. படைப்பின் எல்லாவற்றிலும் இறைவன் இருக்கின்றார். நீங்கள் எப்படி அப்படி ஒரு வலியை கொடுக்க இயலும்? ஒரு நாயை யாராவது அடித்தால் அது வலியில் கத்தி அழுகின்றது. பின் கொல்லப்படுவது எந்த அளவு அதிக வலி இருக்கும்.
-ஸ்ரீ சத்திய சாயி பாபாவுடன் உரையாடல் என்ற ஹிஸ்லாப்பின் புத்தகத்திலிருந்து...
பண்ணையில் வளர்க்க படும் மிருகங்களும் மற்றவை போலவே உணர்ச்சி மிக்கவை. மனிதர்களை போலவே பல்வேறு வகையான உணர்வுகள் கொண்டவை. நம்மை போன்று பெறும் துன்பத்தை அனுபவிக்வல்லது. உதாரணமாக, பசு வெளிப்பார்வைக்கு அமைதியாக காணப்பட்டாலும் ரொம்பவும் உணர்ச்சிகரபூர்வமானது. அவைகளிடம் இருந்து பிறந்து சில நாட்களே ஆன கன்று குட்டி பிறிக்கப்படும் போது துன்பப் படுகின்றன. அவைகள் நடத்தப்படும் விதத்தில் பிற பசுக்களிடமும் மனிதர்களிடமும் நட்புணர்வும், காழ்ப்புணர்ச்சியும் வாழ்நாள் முழுவதும் கொள்கிறது. பன்றிகள் புத்திசாலியாகவும் உணர்சிமிக்கதாகவும் பிரியமுடன் பழகுவதாகவும் உள்ளது அறியப்பட்டதே. அவைகளை சுலபமாக பழக்கப்படுத்தலாம். அன்பான குழந்தைகளை நினைவில் கொள்ளும் யாருக்கும் நம்புவதற்கு கடினமானாலும் ஆடு, வெள்ளாடு, வான்கோழியும் இதைப்போன்றே உணர்வுபூர்வமானது ஆச்சரியம் தருபவை.
மீன்களுக்கு வலி இல்லை என்று நம்பினார்கள். அவைகளுக்கும் நரம்புகள் இருப்பதால் அதீதமான வலி உணர்வுகள் மனிதர்களை போன்றே உள்ளது என்று இப்போது தெரிய வந்துள்ளது. தண்ணீரில் இருந்து பிடிக்கப்பட்டு தரையில் வெளிக்காற்றில் விடப்பட்டு இறக்கும் போது அதீதமான வலியை அனுபவிக்கின்றன.
டால்பின்கள் சினேகமானது என்று சொல்லிக்கொள்கிறோம். உண்மையில் டால்பின் குட்டிகள் பெறும் அளவு வலைகளில் சிக்கி இறக்கின்றன. குட்டிகளை தொடர்ந்து தாயும் வலைக்குள் போகின்றது. இறக்கும் தறுவாயில் தாய் டால்பின்கள் குட்டிகளுக்காக இசைப்பத கேட்களாம் என்று மீனவர்கள் சொல்கிறார்கள். மெதுவாக இரண்டும் இறக்கின்றதாம். இறைச்சி தொழிற்சாலை பண்ணைகளில் வளர்க்கப்பட்டு மிருகங்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுவது பற்றி விவரிப்பது மிகவும் மணக்கஷ்டமானது.
மாமிசம் உண்பவர்கள் இருக்கும்வரை மிருகங்கள் கொல்லப் படுவதால் உண்பவர்களுக்கும் அந்த பாவத்தில் பங்கு உண்டு. அசைவம் உண்பவர் இருப்பதால்தான் பலர் மாமிசத்திற்காக கொல்கின்றனர்.
நீங்கள் உண்பதால் அவைகள் கொல்லப்-படுகின்றன. இது பெரிய பாபம். அப்பாவியான மிருகங்களை கொன்று புசிப்பது பாபகரமானது.
-ஸ்ரீ சத்திய சாயி பாபா தெய்வீக சொற்பொழிவுகள். 21-11-1995.
-ஹரே கிருஷ்னா இயக்கத்தை சேர்ந்த Dr. சஹாதேவதாஸ் பதிவு செய்த "பசுவை கொல்" என்ற உண்மை சம்பவம் இதை விளக்கும்.
ஆதாரம்: https://www.theprasanthireporter.org/2014/10/why-be-vegetarians/
எந்த ஒரு உயிர்களுக்கு நாம் தீங்கு செய்தாலும்.. அது மறைமுகமாகவோ நேரடியாகவோ... எந்த வகை தீங்கு செய்தாலும் அந்தக் கொடும்பாவம் நம்மையே பின்தொடரும்... இறை அருள் இதனையே பேரிறைவன் பாபாவும் எடுத்துரைத்து நம்மை எச்சரிக்கிறார்... கொலை செய்தல் பஞ்சமா பாதகம்... மனித உயிர் மட்டுமல்ல பிரபஞ்சத்தில் அனைத்து உயிரும் சமமானதே! யோனி வழி பிறக்கின்ற உயிர்களைக் கொல்வது பாவம் என பகவத்கீதையே வலியுறுத்துகிறது! பிறவற்றுக்கு நாம் எதை கொடுக்கிறோமோ அதை நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிறோம் என்கிறார் பகவான் ரமணர்... ஆக துன்பத்தை விதைத்தால் துன்பத்தையே நாம் அறுவடை செய்ய வேண்டும்! விலங்குகளை அறுத்து உண்டால் தீய வினைகளையே நாம் ஏற்க வேண்டி இருக்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக