தலைப்பு

வெள்ளி, 20 டிசம்பர், 2019

தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்!

மங்களூரை சேர்ந்த பிரபல ஸ்தாபனமான M.S PAI & CO குழுமத்தை சேர்ந்த திரு. பத்மநாப பாய் அவர்களின் அனுபவங்கள்!

ஓம் ஸ்ரீ சாயி சரணாகத வத்சலாய நமஹ.
                   
தன்னை நாடிவந்த பக்தர்களை பாபா ஓடிவந்து துயர் துடைத்த நிகழ்ச்சிகள்
எண்ணில் அடங்கா.

மங்களூர் திரு.பத்மநாப பாய் அவர்களின் வாழ்க்கையும் அது போன்றதே. இந்த கதை திரு.பத்மநாப பாய் அவர்களின் தந்தையான திரு.M.S. பாய் அவர்களிடமிருந்து துவங்குகிறது.

அது 1950 வருடம். ஷீர்டி பாபா பக்தரான M.S.பாய் மிகுந்த மனக் குழப்பத்திலிருந்தார். அவரது தந்தையார் மிகவும் உடல் நலிவுற்றிருந்தார். உயிர் பிழைக்க, அவரது செயலிழந்த ஒரு காலை துண்டிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி விட்டனர்.யாரிடம் முறையிடுவது. மனச் சஞ்சலம் அதிகரித்த நிலையில், யாரோ கூறினார்கள். புட்டபர்த்தி செல்லுங்கள். அங்கு ஷீரடி பாபா அவதாரமென கருதப்படும் சத்ய சாயி பாபா உள்ளார். அவரிடம் முறையிடுங்கள்...

M.S. பாய் அவர்கள் எதையும்  யோசியாமல் தன் நண்பர்கள் சிலருடன். ஒரு காரில் பர்த்திக்கு பயணமானார். 12 மணிநேர பயணத்தில் பர்த்தி வந்தடைந்தார்.



பாபா தரிசனம் கண்டார்.
(நீ என்னை அறியாமல் இருக்கலாம். ஆனால் நான் உன்னை இப்பிறவியில் அதற்கு முன்னரும் அறிவேன் - பாபா)

M.S. பாய் அவர்களை அழைத்த பகவான் அவர் முறையிடும் முன்பே கூறினார்.
"நீ உன் தந்தையின் உடல் நலிவு குறித்து முறையிட வந்துள்ளாய். டாக்டர்கள் ஆலோசனைப்படி சிகிச்சையை மேற்கொள். தந்தை உயிர் பிழைத்து வாழ்வார்." என்று ஆசீர்வதித்து அனுப்பினார். M.S பாய் அவர்களுடன் நிற்கவில்லை. பாபாவின் கருணாப் ப்ரவாகம். அவரது குடும்பத்தினர் அனைவரும் பாபாவின் அன்புக் கரங்களில் அடைக்கலமானார்கள்.

M.S.பாய் அவர்களின் மைந்தர் திரு. பத்மநாப பாய் எவ்வாறு பாபா அவர்களின் பரிபூரண அனுக்கிிரகம் பெற்று உய்ந்தார்? அவரது அனுபவம்...

பத்மநாப பாய் தனது இளங்கலை படிப்பில் சற்றே குறைந்த மதிப்பெண் பெற்றதால் அவர் விரும்பிய பொறியியல்  பட்டப் படிப்பில் சேர முயலவில்லை. ஆனால் பாபா கூறியதால் விண்ணப்பித்தார். ஐயனது ஆசியால் பொறியியல் சேர்ந்து பட்டம் பெற்றார். பிறகு அமெரிக்காவில் MBA பட்டமும் பெற்றார்.

படிப்புடன் முடிந்ததா பாபாவின் ரட்சணை.


திரு.M.S. பாய்  மகன் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம்... 

தானே மணப்பெண் பார்த்து திருமணமும் நடத்தி வைத்தார். அது தெய்வ சந்நிதானத்தில் நடந்த திருமணம். ஆம் . ஒயிட் பீல்டடில் உள்ள ப்ருந்தாவன வளாகத்தில் நடந்தது. இத்துடன் முடியவில்லை திரு.பாய் அவர்களின் பாபா பந்தம். அமெரிக்காவில் மருத்துவர்களாக ப் பணி புரியும் பாய் அவர்களின் இரண்டு மகள்களும் அங்கு சாய் சேவை மையம் நிறுவி நலிந்தவர்களுக்கு சேவை புரிகின்றனர். அவர்களின் இந்த சேவை பலராலும் பாராட்டப் படுகிறது.
மங்களூரில் சாயி சேவையில் ஈடுபட்டுள்ள திரு.பத்மநாப பாய், அங்கு சாயி சேவா நிறுவனத்தின் மாவட்ட தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

பாபா மறையவில்லை. அவர் தம் பக்தர்களுக்கு இப்போதும் வழி
காட்டி ஆசீர்வதிக்கிறார்... என்கிறார் திரு பாய்.இதுவே அவரிடம் நாம் கற்கும் பாடம்.


மொழிமாற்றம் திரு: குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக