தலைப்பு

புதன், 18 டிசம்பர், 2019

பிரபல புகழ்பெற்ற கன்னட இலக்கியப் படைப்பாளி பத்மஸ்ரீ V.K கோகாக் அவர்களின் அனுபவங்கள்!

V.K கோகாக் என்பவர் பிரபல புகழ்பெற்ற கன்னட இலக்கியப் படைப்பாளி ஆவார். இவர் கன்டத்தில் எழுதி 1982-ல் வெளிவந்த 'பாரத சிந்து ராஷ்மி' என்ற காவியத்துக்காக 1990இல் 'ஞானபீட விருது'(Jnanpith Award) பெற்றவராவார். இவர் கன்னடம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நிறைய நூல்களை எழுதியுள்ளார். 1961 ஆம் ஆண்டில், கோகாக்கிற்கு இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.


1976இல்  V.K  கோகாக்கின் மனைவியார் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். நெஞ்சிலே அதிகமாக நீர் சேர்ந்துவிட்ட ஒரு நோய் வகை! மருத்துவக் கணக்குப்படி அவர் மூன்று மாதங்களுக்கு மேல் உயிர்வாழ மாட்டார் என்றனர். ஆயினும் டாக்டர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். மொத்த குடும்பமும் சென்று பகவானின் வழிகாட்டுதலை வேண்டினர். பகவான் விபூதி வரவழைத்து கொடுத்து, "அறுவை சிகிச்சை தேவைப்படாது, அவளுக்கு சரி ஆகிவிடும்" என்றார்.

மறுநாள் அப்பெண்மணியின் நெஞ்சுப்பகுதியை எக்ஸ்ரே எடுத்த பொழுது, டாக்டர்கள் அதிசயத்தக்க வகையில் எந்த தொற்று நோயும் தென்படவில்லை. அதன்பிறகு அப்பெண்மணி பதினெட்டு ஆண்டுகள் உயிரோடு இருந்தாராம்.
டாக்டர் கோகாக், பகவானின் அற்புதங்களை பல முறை நேரில் காணும் பாக்கியம் பெற்றவர்.

ஒருமுறை இத்தாலிய பக்தர்கள் குழு, பிருந்தாவன் வந்து பகவானின் தரிசனத்திற்காக பகவானின் பிரத்தியேக சந்திப்பிற்காக(Interview) அவரது அறையில் கூடியிருந்தனர். ஒருவருக்குக்கூட ஆங்கிலம் தெரியாது. அந்த அறையின் ஒரு ஓரத்தில் டாக்டர் கோகாக் அமர்ந்து இருந்தாராம். எல்லோரையும் ஆசிர்வதித்த பிறகு பகவான், குழுவில் அமர்ந்திருந்த ஒரு ஊனமுற்றவரின் அருகே சென்றார். அவரது ஊன்று கோல்களை தன்னிடம் தந்துவிட்டு, அடுத்த காலில் நடக்க இருக்கும் பஜனைக்கு செல்லுமாறு கூறினார்! அவர் திகைத்து, மெதுவே எழுந்து, சிறு குழந்தை முதன்முதலாக நடப்பது போல் நடந்து, பிறகு சரியாக நடக்க ஆரம்பித்துவிட்டார். அவரது குழுவினர், உற்சாகத்தில் "இயேசு இங்கு வந்துள்ளார்" என ஆனந்தக் கூச்சலிட்டனர். அங்கிருந்த மற்ற இந்தியர்களிடம் அற்புதத்தை விளக்க முற்பட்டனர்.

இதுபோன்ற பல அனுபவங்கள், பகவான் எனும் தெய்வீக அன்பிற்கு தன்னை சரணாகதி  ஆக்கிக்கொள்ள இந்த பக்தருக்கு கற்றுத்தந்தன!!!

ஆதாரம்: சத்தியம், சிவம், சுந்தரம்  Vol 5. P. 97
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக