தலைப்பு

வியாழன், 12 டிசம்பர், 2019

மருத்துவக் கல்லூரி மாணவர்களை தீ விபத்தில் இருந்த காத்த பாபா!


அது 1992ம் ஆண்டு. T.A.பாய் அறக்கட்டளையின் மூத்த நிர்வாகி பாபாவுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்.
நடந்தது என்ன?

பாபா தம் மாணவர்களிடையே உரையாடிய போது கூறியது...
T A. பாய் மருத்துவக் கல்லூரி(Kasturba Medical College, Manipal) மாணவர்கள் 40 பேர் கலாசாலையில் ஒரு அறையில் குழுமி இருந்தனர். விலை உயர்ந்த கருவிகளும் அந்த அறையில் இருந்தன.

கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி, மணிப்பால்


திடீரென பிடித்த பெருந்தீ மளமளவென பரவி மாணவர்கள் தப்ப இயலாதபடி சூழ்ந்தது. செய்வதறியாத மாணவர்கள் சாய்ராம் சாய்ராம் என கதறினர்.
கஜராஜன் குரல் கேட்ட ஆதிமூலம் விரைந்து வந்து காத்தது போல், பகவான் அத்தீயை அக்கணமே அணையச் செய்தார். யாவரும் ஒரு சிறு காயமும் இன்றி தப்பினர்.உபகரணங்களும் சேதமடையாமல் தப்பின.

சாயி பகவானுடன் திரு T. A பாய் 


பாபா மேலும்  கூறியதாவது...
என் மாணவர்கள் உலக நடப்பு அறியாதவர்கள். ஆனால் மற்ற இடங்களில் பயிலும் மாணவர்களிடையே வேண்டத்தகாத கெட்ட பழக்க வழக்கங்கள்
மலிந்துவிட்டன.  கல்வி பயில மாணவர்கள் பெரும்  கட்டணம் செலுத்துவதால் , ஆசிரியர்களும், நிர்வாகமும் அவர்களைத் தட்டிக் கேட்க விரும்புவதில்லை.
ஆனால் நான் எவரிடமும் எதையும் கேட்டுப் பெற மாட்டேன். கொடுப்பதுதான்
என் இயல்பு. ஆயினும் உங்கள் அன்பை மட்டும் நான் கேட்கிறேன். அந்த அன்பு கூட என்னுடையதுதான்.


மொழிமாற்றம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக