தலைப்பு

வியாழன், 19 டிசம்பர், 2019

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் சமாதிக்கு பின்னர் நடந்த அற்புதம்!

கொல்கத்தாவில் பிரபல நரம்பியல் டாக்டராக இருந்த Dr. D. P பானர்ஜி அவர்களின் அனுபவப் பக்கங்களிலிருந்து..

டாக்டர் D.P பானர்ஜியும் அவரது துணைவியாரும் பிராசாந்தியிலே வாழ வேண்டுமென, 2008ல் அக்டோபரில் வந்து சேர்ந்தனர். திருமதி.ஷோபா பானர்ஜி இறைவனின்(சாயியின்) அருளுக்குள், ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே வந்தவள். இதயபூர்வமான இந்த பந்தம், வளர்ச்சி அடைந்து, ஆண்டாண்டுகளாக உறுதிப்பட்டுள்ளது. அவளது கனவில் ஸ்வாமி அடிக்கடி வருவார்; ஆனால் மற்றவர்களுக்கான நலனுக்காகவே  அது  நடந்தது. ஸ்வாமியின் கருவியாக அவள் செயல்பட்டமைக்கு மிகுந்த ஆசி பெற்ற ஒருவள், அவள்!! மிகுந்த தெய்வீக மாகவும், மனித நேயத்தோடும் சேவையை செய்து வந்தாள்.

ஏப்ரல் 2012ல் நடந்த ஒரு சம்பவம்! ஒரு நரம்பியல் நிபுணரான அந்த  டாக்டருக்கு அவரது 48வது வயதில், ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு ஸ்வாமியிடம் நம்பிக்கை இல்லாத பொழுதும், அவரது பெண் குழந்தை  தொடர்ந்து பாலவிகாஸ் வகுப்புகளுக்குச் சென்று வந்தாள். 12 வயதாக இருக்கும் பொழுது அடிக்கடி தலைவலி வரத்தொடங்கியது. அவரே நரம்பியல் நிபுணராக இருந்ததால் நல்ல பரிசோதனை செய்து, பெண்ணின் மூளையில் கட்டி இருப்பதையும், அது மிகவும் ஆபத்தானது என்றும் கண்டறிந்தார். பெற்றோர்களுக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவளுக்கு  சிகிச்சை அளிக்க அவளது தந்தையின்  ஆஸ்பத்திரியிலேயே அனுமதிக்கப்பட்டார். ஆனால் நிலைமை மிகவும் மோசமடைந்து, ஆபத்தாகிவிட்டது. அவளது சக பாலவிகாஸ் மாணவ, மாணவிகள் 9-12 வயது  உடையவர்கள் புட்டபர்த்தி வந்து ஸ்வாமியிடம் இவளுக்காக பிரார்த்தனை செய்து ஆசி வாங்க வந்தனர். சமாதி தர்ஷன் காலையில் செய்தனர். பாலவிகாஸ் குருவிற்கு  திருமதி. பானர்ஜியை நன்கு தெரியும். அந்த குரு, இந்த  பாலவிகாஸ் குழந்தைகளை அவர்களோடு சற்று நேரம் செலவிடச்சொன்னார். அவர்களும் திருமதி. பானர்ஜியுடன் சுமார் 2 மணிநேரம் செலவிட்டார். அப்பொழுது, சாயி மறைந்த பிறகும், அற்புதங்கள் நிகழ்த்துவதை குழந்தைகளுக்கு  விளக்கினார். பிறகு குழந்தைகள் சென்று விட்டனர்.மறுநாள் புட்டபர்த்தியில் இருந்து கிளம்ப பயணப்பதிவு செய்திருந்தனர். அன்று இரவு அவர்களுள் 15 வயது பெண் ஒருத்தியின் கனவில் வெள்ளை முடி, தாடியுடன் ஒருவர் வந்து, திருமதி. பானர்ஜியிடம் சென்று 3 லட்டுகளை 9 பங்காக போட்டும், 3 உதி பொட்டலங்களை 9 பகுதிகளாகப் பிரித்தும்,சிகிச்சை பெற்று வரும் பெண்ணிற்கு 2 பொட்டலம் தனியாக வாங்கிக் கொள்ளச் சொன்னார். ஒரு பொட்டலத்தை அவளது தலையணிக்கு அடியிலும்,இன்னொன்றை அவளது தாயிடம் கொடுத்து, தினமும் அவள் வாயில் ஒரு சிட்டிகை போடச் சொல்லி  சொன்னார். மறுநாள் கனவில் வந்தபடி பிரசாதம் வாங்கிக்கொண்டு தங்கள் அறைக்குச் சென்று, மறுநாள் நகரத்தை அடைந்து உதி பிரசாதத்தை அளித்து, விவரங்களையும் கூறினார்கள்.

கனவில் வந்தவர் ஷீரடி பாபாவே அன்றி வேறு ஒருவர் இல்லை. கனவு கண்ட பெண், அது டாக்டர் பானர்ஜியின் தாத்தாவாக இருக்கக்கூடும் என்று நினைத்து  கொண்டாள்.

ஐந்து  நாட்கள் கழித்து ஒரு சனிக்கிழமை இரவு ஸ்வாமி திருமதி.பானர்ஜியின் கனவில் வந்து, மருத்துவரைக் கூப்பிட்டு (டெலிஃபோன் நமபரையும் கொடுத்து)மறுபடியும் ஸ்கேன் செய்து பார்க்குமாறு கூறினார். அதன்படி, திருமதி. பானர்ஜியும் மருத்துவரை அழைத்து கனவில் நடந்தவற்றை விளக்கிக் கூறினார். ஆனால் அந்த டாக்டர் மிகவும் கோபமுற்று ஸ்வாமியைப் பற்றி தரக்குறைவாகப் பேசினார். திருமதி. பானர்ஜி மிகவும் பொறுமையாக, ஸ்வாமி எப்படி பலருக்கும் அதிசயம் நிகழ்த்தியுள்ளார் என்பதை விவரித்தார். ஸ்வாமி தான் இறந்ததும் அவரது. விருப்பத்தினாலேயே அன்றி, தன்னை ஸ்வஸ்தப்படுத்திக் கொள்ள முடியாததால் அல்ல, என்றும்  விவரித்தார்.

வியாழன் வரை வேறு ஒரு தகவலும் அவரிடம் இருந்து வரவில்லை. திருமதி. பானர்ஜி, ஸ்வாமியின் இடத்திற்கு வந்து சற்று தொலைவிலே நின்று பிரார்த்தித்தார். ராமநவமிக்கு முந்தைய நாள், ஸ்வாமி கனவில் வந்து மறுநாள் விருந்தாளி வருவார் என்றும், நிறைய ஷீரா பிரசாதம் செய்து வைக்குமாறும் கூறினார். சரியாக ஒரு மணிக்கு வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்தால் ஒரு வயதான மனிதர் நின்றிருந்தார்.மூளையில் கட்டி  வந்த அந்த  பெண்ணின் தந்தை என அறிமுகம் செய்து கொண்டார். அவள் முழுவதும் குணமாகி விட்டதாகவும், கேன்சர் வைத்தியத்தினால் பலஹீனமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அவரிடம் ஸ்வாமி கனவில் தோன்றி, திருமதி. பானர்ஜியின் விலாசம் கொடுத்து, சந்திக்கச் சொன்னாராம். புட்டபர்த்தி வந்து, சமாதி தர்ஷன் முடிந்து, சந்திக்க வந்துஉள்ளதாகத் சொன்னார். மேலும் ஸ்வாமியின் வழிகாட்டுதல்படி தான் புகைபிடிப்பதையும்,குடிப்பதையும் விட்டுவிட்டதாகக் கூறினார்.திருமதி. பானர்ஜியின் அனுமதியோடு அவர்களது ஸ்வாமி அலமாரியின் முன் அமர்ந்து  சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, கண்ணீர்  மல்க ஸ்வாமி  போட்டோவின் முன்பாக இருந்தார். மேலும் ஸ்வாமி அம்மனிதரிடம் கனவில் அவரது சொந்த ஊருக்குச் சென்று அங்கு உள்ள மக்கள் பயன் பெறும் வகையில், மருத்துவமனை கட்ட ஏற்பாடுகளைச் செய்யுமாறும் பணித்தார். அவர்  தனது முந்தைய கடுமையான சொற்களுக்கு மன்னிப்பும் கோரினார்.

ஒரு வாரத்திற்குப் பிறகு, ஸ்வாமி திருமதி. பானர்ஜியின் கனவில் மீண்டும் தோன்றி, சில விருந்தினர்களுக்காக கிச்சடியை அதிகமாக செய்து வைக்குமாறு கூறினார். அவர்களுள் ஒருவர் அவருக்கு ஸீனியராக இருந்தவர் எனவும் கூறினார். மறுநாள் மீண்டும் சரியாக ஒரு மணிக்கு வாயிலில் அழைப்பு மணி ஒலித்தது. திறந்தால், டாக்டர், அவரது மனைவி  மற்றும் அவர்களது பெண் குழந்தை நின்றுகொண்டு  இருக்க,  அவர்களை வரவேற்றார். அவர்கள் பூஜை அறையின் முன்பு அமர்ந்தனர். பிறகு  திருமதி. பானர்ஜி கிச்சடி பரிமாற, அவர்கள்  மகிழ்ச்சியாக உண்டனர். குறிப்பாக அந்த பெண் குழந்தை ஆர்வமாக உண்டாள்!மாலை வரை பேசிக்கொண்டு இருந்துவிட்டு  சென்றார்கள். ஒரு சுவாரஸ்யமான பக்கவிளைவும் இருந்தது! அந்த  பெண் அற்புதமாக குணமடைந்தபின், அவளுக்காக பிரார்த்தனை செய்ய வந்த ஒன்பது  பெண்களும் இன்னும் தீவிர பக்தியோடு ஆண்டுதோறும் தங்கள் தாயார்களுடன் பர்த்திக்கு வருகிறார்கள்.

இந்த ஆச்சரியமான,நோய் குணமான நிகழ்வு சீரடி ஸாயிக்கும், சத்ய ஸாயிக்கும் வித்தியாசம் இல்லை என்பதை உணர்த்துகிறது!!

ஆதாரம்: Mrs Shoba Banerjee Personal Narration..
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக