பகவான் அடிக்கடி தன்னுடைய உரைகளில் 'எனது வாழ்க்கையே நான் தரும் நற்செய்தி' என்று குறிப்பிடுவர். அவர் செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட பக்தர்களுக்கு ஒரு செய்தியாக இருக்கும். அப்படி பகவானின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை தான் நீங்கள் இப்போழுது பார்க்க போகிறார்கள்!
ஒருமுறை எல்லோரும் அவரவர்க்கு கொடுத்த வேலைகளை மும்முரமாக செய்து கொண்டிருந்தனர். சுவாமி மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். திடிரென்று பாபா அங்கு இல்லாததை உணர்ந்தனர். மேடைக்கு பின்புறம் உள்ள அறைகளில் இருக்கக்கூடும் என சென்று பார்த்தனர். ஒரு அறை பாபா ஓய்வெடுக்கவும், மற்றுமொரு அறை வந்துள்ளவர்கள் தங்களது பொருட்கள் மற்றும் காலணிகளை வைப்பதற்காகவும் இருந்தன. போய் பார்த்தால், பாபா அந்த பொருட்கள் வைக்கும் அறையில், உலகின் எஜமானராகிய ஸாயி, எல்லோரது காலணிகளையும் வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தார். எல்லோரும் ஓடி வந்து அவரை தடுக்கவும், "நீங்கள் எல்லோரும் ஒவ்வொரு வேலையை செய்து கொண்டிருக்கிறீர்கள். எனக்கு எந்த வேலையும் இல்லை. அதனால் இதை செய்து கொண்டிருக்கிறேன்" என்றாரே பார்க்கலாம்!!!
ஆதாரம்: Talk on Radio Sai | டாக்டர் பத்மநாபனுடைய மகள் கீதா மோகன்ராம் அவர்களின் நேர்காணலில் இருந்து..
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக