பிரபல T. A. PAI மேனேஜ்மெண்ட் இன்ஸ்டியூட், மணிபால் சேர்மன் பத்மபூஷன்
திரு. T A.பாய் அவர்களின் அனுபவ பக்கங்களிலிருந்து...
ஷீரடி சிவன்தான் பின்
பர்த்தியில் சிவசக்தி.....
மாறியது உருவம்தான்
மாறாதது பக்த ரட்சணம்.
திரு. T A.பாய். கர்நாடகத்தின் தலைசிறந்த மேதை. பன்முகத் திறமை கொண்டவர். தொட்டது எல்லாம் துலங்க வைத்தவர். அவர் எவ்வாறு ஷீரடி பாபாவும் சத்யசாயி பாபாவும் ஒருவரே என உணர்ந்தார் நிகழ்வுகளை அறியும் முன்.. திரு பாய் அவர்களைப் பற்றி.....
சிண்டிகேட் வங்கி பொது மேலாளராக இருந்த அவர் தனது அயரா உழைப்பால் அதன் தலைவராக உயர்ந்தார். பிறகு T.A.பாய் நிர்வாக கலாசாலையை நிறுவினார். 1965 ல் ஆரம்பித்த அவரது தலைமைப் பொறுப்பு , பல துறைகளில் பரிணமித்தது. அகில இந்திய உணவுக் கழகம், சிண்டிகேட் வங்கி, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஆகியவற்றின் தலைவராகத் திறம்பட செயலாற்றினால்.
1973ல் அவரது அரசியல் நுழைவு . பாராளுமன்றத்தின் மேலவைக்கு தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் இந்திய அரசின் ரயில்வே துறை, பிறகு கனரகத்துறை உடன் எஃகு மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ஆனார். பின்னர் தொழில்துறை மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். இனி அவர் கூறுவதைக் கேட்போம்.
முதன் முதலாக நான் ஷீரடி சென்றது 1970ம் ஆண்டு. பின்னர் 1970 -72க்கு இடையில் இருமுறை சென்றேன். உடன் என் துணைவியார் மற்றும் நணபர்( அமெரிக்காவில் டாக்டர் பணி புரிபவர்)அவரது மனைவி மற்றும் குழந்தையும் வந்திருந்தனர்.
அப்போது ஷீரடியில் நடந்த ஒரு நிகழ்ச்சி. என் துணைவியார் ஷீரடி வாதாவில் ஓரு ஜன்னல் வழியாக பாபாவின் திருஉருவப் படத்தை தரிசித்துக் கொண்டிருந்தார். அருகில் பாபா உபயோகித்த வெள்ளைத் தலைப்பாகை, கப்னி, கைத்தடி, மிதியடி, மற்றும் சில வெள்ளைநிற புகைபிடிக்கும் குழாய்களும் இருந்தன. இதைப்பார்த்த நான் பாபாவே புகை பிடித்தபோது நான் அவ்வாறு செய்வதில் தவறென்ன என்று கேட்டேன்.
சிலகாலம் கழித்து நான் பர்த்தி சென்று பாபாவைத் தரிசித்தேன். அவர் அப்போது "ஷீரடியில் என் படத்தின் முன் நின்று நீ புகை பிடிப்பது பற்றி உன் மனைவியிடம் கூறியது இதுதானே " எனக் கூறினார். இதனால் ஷீர்டி பாபாவும் சத்ய சாயிபாபாவும் ஒன்று என உணர்ந்தேன்.
மொழிமாற்றம்: குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.
மொழிமாற்றம்: குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக