பாரத ரத்னா M.S.அம்மாவிற்கு பாபா பரிசளித்த வைரநெக்லஸ்:
வாழ்வே தவம். இசையே வழிபாடு. ஈகையே மகிழ்ச்சி என வாழ்ந்தவர் இசைக்குயில் M.S. அம்மா.
கோவிந்தன் குழல் கொண்டு ஊதியபோது கோபிகைகள் மட்டுமின்றி ஆவினங்களும் பறவைகளும் கூட உண்பதை நிறுத்தி இமைப்பதை மறந்து நின்றனவாம். M.S அம்மாவின் இசைக்கும் அந்த அறபுத சக்தி உண்டல்லவா.?
தன் தெய்வீக இசையால் அவர் கோடிக்கணக்கில் பொருள் சேர்த்து பெரும் செல்வந்தராக ஆகி இருக்கலாம். ஆனால் அவர் தம் இசைக் கச்சேரிகள் மூலம் ஈட்டிய செல்வம் அனைத்தும் நற்பணிகளுக்காக வழங்கினார்.
அவருக்கு பாபா ஒரு சமயம் வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக வழங்கினார். மனம் நெகிழ்ந்த M.S.அம்மா பாபாவின் கரங்கள் கொடுப்பதற்காக உயருமே தவிர பெறுவதற்காக தாழாது என உணர்ந்தார்.
“நான் பகவானின் ஒரு பக்தை. நான் பல பல்கலைக்கழகங்களுக்கும், கல்வி மையங்களுக்கும், மேலும் தொண்டு நிறுவனங்களுக்கும் சென்றுள்ளேன். எங்குச் சென்றாலும் அதன் அறங்காவலர், நிதி திரட்டுவதற்காக என்னிடம் இசை நிகழ்ச்சி நடத்தும்படி கேட்டுக்கொள்வர். இவ்வழியில் பல நிறுவனங்கள் நிறுவப்பட்டன. ஆனால், நான் பிரசாந்தி நிலையத்திற்குச் சென்றபோது, என்னிடம் இசை நிகழ்ச்சி நடத்துமாறு கேட்பதற்குப் பதிலாக, பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்கள் எனக்கு ஒரு வைர நெக்லஸ் வரவழைத்து கொடுத்தார்; மேலும் என் அனுபவத்தில் பாபா ஒருபோதும் எதையும் ஏற்றுக்கொள்வதில்லை” என்கிறார் எம்.எஸ். அம்மா.
குழுலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்!
அன்னையாம் சாயி அறிவுத் திறனால் வரும் கவர்ச்சிகரமான புகழ்ச்சியால் நிகழ்வதில்லை. அம்மா என்று அகம் கரைந்து முகம் மலர்ந்து ஒரு சொல் கூறினாலும் அதை உவந்து ஏற்று பலவாறு பாராட்டுவார். தமக்கு பேச வராது என்ற M.S.அவர்களை பாபா கட்டாயப்படுத்தி பேச வைத்தார். அந்த நிகழ்வையும் இந்தப்பதிவில் கண்டு ரசிக்கலாம்.
எம்.எஸ். அம்மாமீது ஸ்வாமி எப்பொழுதும் அதிகமான அன்பைப் பொழிவார். 19 நவம்பர் 1996ஆம் வருட மகிளா தினத்தன்று ஸ்வாமி அவர்களை மேடையில் பேசச் சொன்னார். எம்.எஸ். கூறினார், “ஸ்வாமி, எனக்கு பேசவே தெரியாது. என்னால் பாடமுடியும், அனால் இப்பொழுது பாடக்கூட முடியவில்லை. எப்படி பேசுவது ஸ்வாமி!” என்றார். ஸ்வாமி அதை ஏற்கவில்லை. அவர் கீழே இறங்கி, எம்.எஸ். அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று, அவர் எழுந்து சில அடிகள் நடந்து ‘குல்வந்த் ஹால்’ மேடைக்கு வர உதவினார். பிறகு எம்.எஸ். பேசினார், “ஸ்வாமி, எனக்கு பேசவே தெரியாது. ஆனால், நீங்கள் எங்களுக்கு அம்மாவா ஆமாம். நீங்கள் எங்களுக்கு அப்பாவா ஆமாம். நீங்கள் எங்களுக்கு தெய்வமா ஆமாம்.” இவ்வாறாகத் தன் இதயத்திலிருந்து எழுந்த சில வாக்கியங்களைக் கூறி உரை நிகழ்த்தினார்.
சத்ய சாயி பகவானின் முன்னிலையில் 19 நவம்பர் 1996ஆம் வருட மகிளா தினத்தன்று M.S அம்மா ஆற்றிய உரை
பின்னர் வேறு சில மகிளா உறுப்பினர்கள் பேசினர். அன்று மாலை, பூர்ணசந்திரா ஹாலில் நடக்கவிருக்கும் கலாச்சார கலைநிகழ்ச்சிக்கு முன், பகவான் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிருந்த போது, அவர் ஒரு மகிளா குழுவிடம் “இன்று, பலர் பேசினார்கள், ஆனால் எம்.எஸ்.ஸின் பேச்சு மட்டும் தனித்து நின்றது. அது இதயத்திலிருந்து வந்தது, மற்றவர்களது அனைத்தும் செயற்கையானதே!” என்று கூறினார். அது எல்லாவற்றையும் சொல்கிறது, இல்லையா?
தன்னலமற்ற தொண்டு
தற்பெருமையற்ற எளிமை
இறைவனிடம் பரபூரண சரணாகதி ..
இவைகளே இறைவனுக்கு உகந்தவை.
M.S.அம்மாவின் வாழ்வு இதை நமக்கு கற்பிக்கிறது.
(முற்றும்)
முதல் பாகத்தை படிக்க..
இரண்டாம் பாகத்தை படிக்க..
M. S. சுப்புலட்சுமி அவர்கள் சத்யசாயி பகவானுக்காக பாடிய பாடல்கள் சில..
சாயி பகவானுக்காக M. S அம்மா பாடிய மீரா பஜன்
சாயி உன்னை முழுதாய் உணர்ந்தவர் யாரோ
M.S அம்மா சாயி பகவானுக்காக புட்டபர்த்தியில் பாடிய போது (Spirit of unity)
ஜனனி சாயி
லீலா நாடக சாயி
சத்ய சாயி ஆரத்தி - M. S சுப்புலட்சுமி
போலோ சாய்ராம்
சாயி சரண் மா
நரவேஷபூஷண
தும் ஹோ ஜெக கே
இந்த வீடியோவானது M.S சுப்புலட்சுமி அம்மையாரும் அவரது கணவர் திரு. சதாசிவம் அவர்களும் இணைந்து பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் ஆரத்தி பாடலை அவர்களது வீட்டு பூஜை அறையில் மெய்மறந்து பாடிய போது பதிவு செய்யப்பட்டது. மேலும் நீங்கள் இந்த வீடியோவின் ஆரம்பத்தில் அவர்களது விட்டு ஹாலின் சுவற்றில் பகவான் பாபா இரண்டு கைகளால் ஆசீர்வாதம் செய்யும் புகைப்படம் ஒன்று மாட்டியிருப்பதை உற்று பார்த்தால் பாதி தென்படும்.
Courtesy : DD NATIONAL | Documentary Film on M.S Subhulakshmi
Courtesy : DD NATIONAL | Documentary Film on M.S Subhulakshmi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக