தலைப்பு

வெள்ளி, 7 அக்டோபர், 2022

தன் தாய்க்காக தெய்வ சாயியிடம் பரிந்து கேட்ட காங்கிரஸ் சசிதரூர்!!

INC. MP for Thiruvananthapuram. Author of 23 books. Former Minister of State, Government of India. Former USG, United Nations.

காங்கிரஸ் எம்.பி சசி தரூர் அவரது சாயி அனுபவமும்.. பாபா அவரிடம் பகிர்ந்த அற்புதமும் கருணையும் சுவாரஸ்யமாக இதோ...

முன்னாள் தூதர். சசி தரூர் கேரளாவைச் சேர்ந்தவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். தற்போது திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2 முறை இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார். 1956ம் ஆண்டு பிறந்தவரான சசி தரூர், இந்தியா மற்றும் அமெரிக்காவில் கல்வி பயின்றார். 1978ம் ஆண்டு பிஎச்டி படிப்பை முடித்தார். ஐ.நா. சபையில் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.


ஒருமுறை விடுமுறை தருணம்.. இரண்டு நாட்கள் வீதமாக காங்கிரஸ் சசிதரூரின் பயணத்தில் புனித புட்டபர்த்தி இடம் பிடித்திருந்தது.. சசி உண்மையிலேயே பௌர்ணமியானது புட்டபர்த்தி விஜயத்தில்... ஓர் இரவில் தாயோடு நான்கு மணிநேரம் புட்டபர்த்திக்கு புனிதப் பயணம் மேற்கொள்கிறார்! 

அதிகாலை இரண்டு மணிக்கு வந்து சேர்கிறார்.. சசி பொதுவாக எப்போதும் வான இரவில் தானே வலம் வரும்! இன்னும் விடியவில்லை.. ஆனால் சசியின் பயணமோ விடிந்திருந்தது.. ஆன்மீகத் தலைவரை நோக்கிய பயணம்  என பாபாவை நாடி வந்த பயணத்தை சசிதரூர் குறிப்பிடுகிறார்!


அவரின் தாய் 18 ஆண்டு கால பாபா பக்தை! பாபா வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனைகளையும் பஜனைகளையும் மிக சிரத்தையாகச் செய்து வருபவர்! அவர்கள் வந்த நாள் அதிகாலை விடிகிறது.. ஆயிரக்கணக்கானோர் கூடி இருக்கும் அரங்கில் பாபா நீளஆரஞ்சு அங்கியில் தரிசனம் தர வருகிறார்! சிலரின் கோரிக்கைக் கடிதங்களைப் பெறுகிறார்! சிலருக்கு சிருஷ்டி விபூதி அளிக்கிறார், சிலரை பிரத்யேக நேர்காணல் அறையில் சந்திக்கிறார்.. இஸ்லாமிய ஈரானிய பக்தர்கள் திரண்டிருப்பதை சசிதரூர் விவரிக்கிறார்! அவர்கள் அனைவரும் கண்கலங்கி கைக்கூப்பி நிற்பதையும் கவனிக்கிறார்! ஆச்சர்யப்படுகிறார்! 

"பங்காரு உனக்கு என்ன வேண்டும்?" என அப்போது பாபா சசிதரூரை பார்த்துக் கேட்கிறார்!

"அமைதியான மனம் என் தாய்க்கு!" என சசி கைக்கூப்பிக் கேட்கிறார்!

"சரி சரி.. என்னிடம் இருந்து ஏதேனும் பரிசுகள் பெற விரும்புகிறாயா?" பாபா மேலும் கேட்கிறார்! கருணையை அள்ளி அள்ளிக் கொடுப்பதற்காக கலியுகம் தேடி வந்து இதயத்தில் தோடி இசைக்கும் இறைவன் பாபா! 

"சுவாமி, நீங்கள் எது வழங்கினாலும் என் தாய்க்கு வழங்குங்கள்!" என்கிறார் தாயின் பாசம் பிள்ளை சசி!

பாபா தனது பிரபஞ்சக் கைகளை அசைக்கிறார்.. காற்றுக்கேப் புல்லரிக்கிறது... விரல் இடுக்கில் நவரத்தின மோதிரம் சிருஷ்டி ஆகி.. ஒளிர்ந்து கொண்டிருந்தது! 

நவகிரகங்களையே தனது கைவிரலால் இயக்கும் பாபாவுக்கு நவரத்தின மோதிரம் சிருஷ்டிப்பது ஒன்றும் பெரிய செயல் இல்லை! 

"பார்! எவ்வளவு கனகச்சிதமாகப் பொருந்துகிறது உன் விரலுக்கு.. நகை செய்தவர் கூட உன் விரலை அளந்துவிட்ட பிறகுதான் மோதிரம் தயாரிக்க முடியும்" என்கிறார் பாபா!

நேர்காணல் தருவதற்கு முன் சசியின் தாய்க்கு சிருஷ்டி விபூதி அளிக்கிறார்!


சசி குடும்பமும் நேர்காணல் அறைக்குச் செல்கிறது! சசிதரூர் பெரிய பக்தர் இல்லை.. ஆழ்மனதில் ஆன்மீக கேள்விகள் நிறைய உள்ள ஒரு மனிதர்! பாபாவோ எவரும் அறியாத அவரின் குடும்ப விஷயங்களை ஆச்சர்யப்படும் அளவுக்குப் பகிர்ந்து கொள்கிறார்!

ஒரு மெட்டல் மோதிரத்தை ஒரு ஈரானிய பக்தருக்கு தங்க மோதிரமாக மாற்றித் தருகிறார் பாபா! அதையும் கவனிக்கிறார்! "பாபாவை வெறும் மேஜிக் நிபுணர் என சொல்வதற்கு இல்லை காரணம் பக்தர்களின் ஆன்மீக அதிர்வலைகளை எழுப்பி அவர்களை ஆன்மீகமாய் முன்னேற்றிக் கொண்டிருக்கிறார் என்பதைக் கண்கூடாக தரிசித்து உணர்கிறேன்"எனும் மெய்யுணர்வு சத்தியத்தை சசிதரூர் பகிர்கிறார்! 

பிரசாந்தி நிலையம் முழுதும் சேவாதளர்களை காண்கிறார் சசிதரூர்... ஒருவர் ஜன்னல் கண்ணாடியை துடைத்துக் கொண்டிக்கிறார்.. அவரிடம் சசி பேச்சுக் கொடுத்தபடி அவரைப் பற்றி விசாரிக்க... தான் சிக்கிம் தலைமை நீதிபதி என்று அந்த ஜன்னல் துடைப்பவர் சொன்னவுடன் பேராச்சர்ய உச்சிக்கே போய்விடுகிறார் சசிதரூர்! பாபா ஒருவருக்குப் புரிந்து வருகிற அகமாற்றம் எத்தகையது என்பது சசியால் உணரமுடிகிறது! 

21ஆம் நூற்றாண்டில் வெற்றிலிருந்து வெற்றி சிருஷ்டியாக்கி மனிதனை உயர்ந்த ஆன்மீக நிலைக்கு  முன்னேற்றக்கூடியவரே ஸ்ரீ சத்ய சாயிபாபா என்பதை மிக வெளிப்படையாகப் பகிர்கிறார் காங்கிரஸ் சசிதரூர்!


(ஆதாரம்: "The Hindu" online edition of indias national newspaper.. an article written by Sashi Tharoor , Nov 10,2002)


இறைவன் பாபாவுக்கு யாவரும் ஒன்றே! அனைத்து ஆன்மாவும் சமமே! பேதமற்ற பரம்பொருள் பாபா! பிரபஞ்ச அன்னை பாபா என்பதாலேயே பாபாவால் அனைத்து ஜீவராசிகளையும் சரிசமமாய் அரவணைக்க முடிகிறது! கட்சி மாச்சர்யமற்ற கண்கண்ட கடவுள் பாபா ஆகவே தான் உலகமே பாபாவை போற்றிக் கொண்டாடி வருகிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக