தலைப்பு

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயிபாபா பற்றி முகமது நபியின் தீர்க்கதரிசனம்!


தீா்க்கதரிசி முகம்மது அவா்களின்  அருளுரைகள் அடங்கிய MEHDI MOUD(மெஹ்தி மௌட்) என்ற அரபு மொழியில் உள்ள அந்த புத்தகத்தில் பகுதி 13ல்  நம்முடைய பேரிறைவன் ஸ்ரீ சத்திய சாய் பாபா பற்றிய தீர்க்க தரிசன பதிவு இதோ.. 

“Two Worlds”(இரு உலகங்கள்) எனும் பிரபல லண்டன் நாளிதழில் இரானிய எழுத்தாளரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட மிக பெரிய புத்தகமான டெகரானில் வெளிவந்த தவிர்க்க இயலாத கட்டுரையின் வெளிப்பாடு இது. THE OCEAN OF LIGHT(மகா சமுத்திரத்தின் ஒளி விளக்கு) என்று அழைக்கப்படும் இப்புத்தகம் 25 பகுதிகளை கொண்டது. 


தீர்க்கதரிசி முகம்மது அவர்களின் பிரசங்களிலிருந்து எடுக்கப்பட்டது என்று உரிமை கொண்டாடப்படுகிறது. அரபு மொழியில் உள்ள பிரசங்கமான MEHDI MOUD (மெஹ்தி மௌட்) என்று பகுதி 13ல் அழைக்கப்படுகின்ற உயர்ந்த குரு என்பவா் அவர் சத்யமானவர், பிரபஞ்சத்தின் ஆசான்,காலத்தின் தலைவர், கடவுள்களின் தலைவர், பிரசங்கங்கள் செய்து ஆலோசனை வழங்கும் கடவுள் என்று இந்த ஆசானை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்க்கதரிசி முகம்மது அவர்களால் மேற்கோள் காட்டப்பட்ட அதிக அளவில் உள்ள அடையாளங்களால் வரப்போகிற உயா்ந்த குருவினை அடையாளம் காணமுடியும். கவனத்தை கவரக்கூடிய குறிப்பிட்ட அடையாளங்களை பகவான் ஶ்ரீ சத்திய சாயி பாபாவிடம் காண இயலும்.


"அவரது கேசம் அபரிமிதமாக இருக்கும். அவரது நெற்றி அகன்று புடைத்து இருக்கும். அவரது நாசியின் எலும்பில் மெலிந்த நுட்பமான பள்ளம் மண்டையோட்டை ஒட்டி உயா்ந்து இருக்கும். அவரது முன்பக்க பற்கள் இடையே ஒரு பக்கத்தில் இடைவெளி இருக்கும். அவரது கன்னத்தில் மச்சம் இருக்கும். அவர் முகம் தாடியில்லாமல் ஆனால் வழவழப்பாக இருக்கும். அவரது ஆடை தீ பிழம்பு நிறத்தை கொண்டதாக இருக்கும். இரு ஆடைகள்(உள்ளே ஒன்று வெளியே ஒன்று) அணிந்திருப்பாா். அவரது முகத்தின் நிறம் சிலசமயங்களில் மஞ்சள்நிறம் கொண்ட தங்கத்தினை போலவும், சிலசமயம் கருமையாகவும், சிலசமயம் ஒளிவீசக்கூடிய சந்திரனை போன்று பிரகாசமானதாகவும் இருக்கும். அவரது பாதங்கள் சிறு இளம் பெண்ணின் பாதங்கள் போன்று இருக்கும்.பிரபஞ்சத்தில் உள்ள எல்லா மதத்தின் கோட்பாடுகளும் அவர் பிறந்தது முதல் அவரது இதயத்தின் உற்பத்தி ஸ்தானமாக இருக்கும். இந்த பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்த விஞ்ஞான சாஸ்திர அறிவு மற்றும் நாளைய விஞ்ஞான அறிவு முதலியவை அவரது இதயத்தின் உற்பத்தி ஸ்தானமாக இருக்கும்.

பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியை தவிர இது வேறு எவருக்குமே பொருந்துவதாக இல்லை..
அந்த தீர்க்க தரிசனம் சத்திய தரிசனம்..
இறைவன் என்பது சத்ய சாயியே என்பது இப்போதே  இங்கேயே நிதர்சனம்

ஆதாரம்: The preceding quotes from Mohammed’s prophecy are all from God Descends on Earth; ibid; p. 17-18.
மொழிமாற்றம்: திரு. ஹரிஹரன், கேகே நகர் சமிதி, சென்னை. 

1 கருத்து: