தலைப்பு

புதன், 26 அக்டோபர், 2022

ஸ்ரீ மாதவானந்த சுவாமிஜி & ஸ்ரீ கோதாவரி மாதா | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

எவ்வாறு ஒரு மகான் பாபாவின் வழிகாட்டுதல்களைப் பெறுகிறார்... எவ்வாறு ஒரு மாதாஜி இரு பாபாவும் ஒருவரே என்பதனை உணர்கிறார்.. சுவாரஸ்யமாக இதோ...


🌷ஸ்ரீ மாதவானந்த சுவாமி:

நாராயணம்மா மற்றும் ஈஸ்வரய்யா தம்பதியினருக்கு கேரளா காலடியில் நம்பூதிரி அந்தண வகுப்பில் பிறந்தவர் லஷ்மண சுவாமி... ராம சுவாமி லஷ்மண சுவாமி இருவரும் இரட்டையர்கள்... குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே ஒரே யோகி அவர்கள் வீட்டுக்கு வந்து லஷ்மண சுவாமியின் தலைமேல் கை வைத்து "இவன் வருங்காலத்தில் மகாயோகியாவான்!" என அடையாளம் உணர்ந்து ஞானமொழி உரைக்கிறார்! 

லஷ்மண சுவாமி தனது 18 ஆவது வயதில் மூகாம்பிகை ஷேத்திரத்தில் 40 நாள் தங்கி தியானம் மேற்கொள்கிறார்... அவரது கனவில் மூகாம்பிகை தோன்றி நாக்கில் தனது பீஜாக்ஷரம் எழுதுகிறார்! யோகி ஸ்ரீ சங்கரானந்தா அவரை அடையாளம் அறிந்து ரிஷிகேஷ் வசிஷ்டாசிரம சுவாமி புருஷோத்தமானந்தாவிடம் வழிகாட்டுகிறார்... சுவாமிகள் பாபாவிடம் இறை தரிசனம் அனுபவித்து பாபாவை இறைவன் என உணர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது! ஆன்மீக ஞானமும் யோகமும் அவரிடமிருந்து கற்கிறார் மாதவானந்தா... ஸ்ரீ புருஷோத்தமானந்தாவே சன்யாச அளித்து பெயர் சூட்டுகிறார்! இரவெல்லாம் அவரின் புருஷோத்தம குருவுக்கு சேவையாற்றுகிறார்! 14 வருடம் இமயமலை குகையில் தவமிருந்து அனுபூதி (Self Realization) அடைகிறார்! அதுதான் மனிதன் பிறப்பதற்கான இலக்கு...! அது ஒன்றே சர்வ ஜீவ ஆன்மாக்களின் லட்சியம்... பாபா மனிதனை படைத்ததற்கான குறிக்கோள்! கர்மாவை கரைக்க பூமியில் மீண்டும் பிறக்கும் மனிதன் கரைப்பதற்கு பதிலாக மேலும் பந்த பாசத்திலேயே சிக்கி இன்னமும் கர்மாவை வளர்த்துக் கொண்டு அடுத்த பிறவிக்கு தயாராகிறான்! என்னவகை அறியாமை இது?!

சுவாமி புருஷோத்தமானந்த பாபாவுடன்... 

அப்படி அனுபூதி அடைந்தபிறகு தனது புருஷோத்தமானந்த குரு வாக்குப்படி தென்பாரத கோதாவரி நதிக்கரையில் ஆசிரமம் நிறுவி சேவையாற்றுவதற்கு வருகிறார்... அப்போது அவருக்கு வயது வெறும் 32'டே! ரிஷிகேஷத்தில் தங்கி இருக்கிற போது சின்மயானந்தாவிடம் யோக ரகசியங்கள் கற்கிறார்... ஜுன் 4, 1963 அன்று ஒரு பனிப்பொழிவில் சிக்க பார்வதி பரமேஷ்வர் மாற்றுருவில் இவர் தோன்றி சுவாமிஜியை காப்பாற்றுகிறார்கள்!


1961 அன்று தனது குரு கட்டளைப்படி முக்தேஷ்வரம் அடைந்து ஆந்திர பிரதேச கோதாவரி கரைக்கு வந்தடைகிறார்! தென்னை மரங்கள் அவரை வருக வருக என தலை அசைந்தன... அங்கே வசிஷ்டாஷ்ரமம் நிறுவ ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்! அங்கே பலர் வாழ்வின் அடித்தளத்தை மாற்றி அமைக்கிறார்! அந்த சமயம் 1965 பாபா கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அமலாபுரம் டாக்டர் கோடேட்டி இல்லத்தில் தங்குகிறார்! அங்கே தங்கியிருந்த ஒரு நாள் சரஸ்வதியம்மாவை அழைத்து "மாதவானந்தாவை அழைத்து வா... அவர் பக்கத்து வீட்டில் எனக்காக காத்திருக்கிறார்!" என்கிறார்... அந்த அம்மா அப்போது தான் அந்தப் பெயரையே கேள்விப்படுகிறார்.. பாபா இருப்பதோ உள்ளறையில் அனைத்தும் அறிந்த பாபாவை நினைந்து நெகிழ்ந்து வாசலுக்கு விரைந்து அருகே காத்திருந்த சுவாமிஜியை அழைத்து வருகிறார்!


பாபாவிடம் மாதவானந்தா தான் ஒரு ஆசிரமம் நிறுவியிருப்பதாக தெரிவிக்கிறார்.. அதற்கு "அதுவே சரியான இடம்‌.. அங்கேயே தங்குங்கள்! தேவையானவர்களுக்கு உதவி செய்யுங்கள்! தியானத்தில் ஆனந்தம் அனுபவியுங்கள்! தர்மத்தை காப்பாற்றுங்கள்! இதுவே உங்களுக்கு சுவாமியின் வழிகாட்டுதல்கள்!" என பாபா அறிவித்ததும் பரவசப்படுகிறார்... விடைபெறுகையில் நாம் வெளியே காத்திருப்பதை உள்ளயே இருந்து அழைத்து அன்போடே வழியும் காட்டிய பாபா இறைவனே என உணர்கிறார்‌... அதற்கு மிக முக்கிய காரணம் அவரது குரு புருஷோத்தமானந்தாவும் பாபாவிடம் இறை அனுபவம் பெற்றவரே! 


🌷ஸ்ரீ கோதாவரி மாதா:

சகோரி என்பது மகாராஷ்டிராவில் ஒரு பகுதி.. அங்கே தான் மகான் உபாசினி மகராஜ் ஒரு ஆசிரமம் நிறுவி இருக்கிறார்! ஷிர்டி பாபாவின் அத்யந்த சீடர் அவர்.. மெஹர் பாபாவுக்கு வழிகாட்டியவர்... அந்த ஆசிரமத்தில் முதன்முறையாக கன்னிப் பெண்களை வைத்து ஒரு யாகம் நிகழ்த்துகிறார்... பெண்களுக்கு மறுக்கப்பட்ட வேள்வி வாய்ப்பை முறியடிக்கும் புரட்சி மகான் உபாசினி... அதுமுதல் அந்த ஆசிரமமே ஸ்ரீ உபாசினி கன்யாகுமரி ஸ்தன் என அழைக்கப்படுகிறது! அவரின் அத்யந்த சிஷ்யையான ஸ்ரீ கோதாவரி மாதா அவரின் சமாதிக்கு பிறகு அந்த ஆசிரமத்தை கவனிக்கிறார்... 

பாபாவை உபாசினி மகராஜ் ஆசிரமத்திற்கு வருமாறு வேண்டுகிறார் மாதாஜி! பாபா வர சம்மதிக்கிறார்... பாபாவை பூர்ணகும்பத்தோடு வரவேற்கிறார் மாதாஜி... நமஸ்கரிக்கிறார்.. உங்கள் பாதம் பட்ட இந்த நன்னாள் ஆசிரமத்திற்கே புனித நாள் என மாதாஜி கண்கலங்க... "சந்தோஷம் பங்காரு... சுவாமிக்கு சால சந்தோஷம்!" என்கிறார் பாபா... "சுவாமி நாங்கள் பிரசாந்தி நிலையத்திற்கு வரலாமா?" என மாதாஜி கேட்கையில் ... தாராளமாக வாருங்கள் என பாபா  சொல்லவில்லை... "எதற்காக அதுவரை வந்து நீங்கள் சிரமப்பட வேண்டும்... சுவாமி நான் ஷிர்டியில் இல்லையா? ஷிர்டியும் பர்த்தியும் வேறு வேறல்ல.. இரண்டும் ஒன்று தான்! ஷிர்டியிலும் சுவாமி நான் தான் வாழ்கிறேன்.. அங்கேயே என்னை தரிசித்துக் கொள்ளுங்கள்!" என பாபா கருணை கூர்ந்து தெள்ளத்தெளிவாக விளக்கியதை சுற்றி உள்ளோர் கேட்டு ஆனந்தம் அடைகின்றனர்... மாதாஜி கைகூப்பி பரவசமாய் கண்கலங்குகிறார்! கணந்தோறும் தான் இறைவன் என நமக்கு உணர்த்துபவர் பாபா... அது தான் பாபா பாணி! 


(Source: Sri SathyaSai and Yogis / Page no: 143,156) / Author : Jantyala Suman babu / Translation : Pidatala Gopi Krishna | Reference: parthipilgrimage by Sakori Devotees  & "Andhra Yogulu" by Biruduraju Ramarajugaru) 


சூரியனே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாவிட்டால் யாரால் சூரியனை முழுமையாக விளக்க முடியும்? சுற்றும் ஒரு நெருப்புப் பந்து என்று வேண்டுமானால் சொல்லலாம்! ஆனால் எப்போது சூர்ய தரிசனம் அனுபவிக்கிறோமோ அப்போதே அதனை முழுமையாக உணர முடிகிறது..

 அது போலவே இறைவன் பாபா...! பாபா கலியில் தன்னை மும்முறை வெளிப்படுத்துகிறார்... மூன்றாவது முறைக்காக நாம் அனைவரும் பிரேமைக்காக பிரேமையோடு பிரமையை விட்டு காத்திருக்கிறோம்! காலம் கனிந்து கொண்டே இருக்கிறது...!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக