தலைப்பு

புதன், 13 ஜூலை, 2022

குருவின் குணங்களும் அடையாளங்களும் | பரிபூரணனின் குருபூர்ணிமை உரைத்துளி!!


குரு யார்? குரு எப்படிப்பட்டவர்? என்பது குருவை தனது கருவியாகக் கொண்ட சத்குருவான இறைவன் பாபாவால் மட்டுமே விளக்க முடியும்! அப்படி ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணம் வந்தே ஜகத்குருவான பாபா குரு யார் என்பதை பிரபஞ்ச சுருக்கமாய்... ஆன்ம நெருக்கமாய் விவரித்து நமக்கு உணர்த்துகிறார் இதோ...

“தன்னலமும் அகங்காரமும் இன்றி தனது சீடனையும் தனதளவு உயர்த்த வல்லவனே உண்மையான குரு ஆவான். காவி உடை அணிந்து சில மந்திரங்களை கூறி சில சமய நூல்களின் விளக்கம் கூறி சிலர் குரு என்று இன்றைய தினம் உலவி வருகின்றனர். அறவே தன்னலமின்மையும், வாழ்வில் தூய்மையும், பரந்த மனப்பான்மையும், பெரிய இதயமும், பொருள் சேர்க்கும் ஆசை இன்மையும், பொறாமை இன்மையும், சம சிந்தனையுமே உண்மையான குருவின் இலக்கணம். 


குருவுக்கும் சீடனுக்கும் இன்றியமையாத குணம் பொறாமையின்மையாகும். காரணம் பொறாமை மேலும் பல இழிகுணங்களுக்கு வழி வகுக்கும். இறை பாதையில் சீடனை கொண்டு செல்வது என்பதே குருவின் கடமை. அவர் சீடனுக்கு கண், காது, நாக்கு, கை, கால்கள் ஆகியவற்றை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுத்தர வேண்டும். எல்லா புலன்களும் இறைவனை அறியவும் உணர்வும் வேண்டியன.”

- பகவான் ஸ்ரீ சத்ய சாயி (குருபூர்ணிமை, 13.07.1984)

1 கருத்து: