தலைப்பு

திங்கள், 21 நவம்பர், 2022

பகவான் பாபாவின் 70, 75, 80 மற்றும் 85வது பிறந்தநாள் விழாக்கள்!


எண்ண எண்ண இனிக்கும்... நினைக்க நினைக்க விழிநீர் தித்திப்பாக நனைக்கும்... இதோ வாசிக்க வாசிக்க பரவசப்படுத்தும்... அவதார வைபவ நாள் என்பது நமக்குள்ளே தெய்வீகத்தை நினைவுப்படுத்தும்... தங்கத்தேர் மட்டுமல்ல நம் உடம்பே இறைவன் பாபா நகரும் அங்கத்தேர் என்பதை ஆழமாய் உணர்த்தும் பிறந்தநாள் வைபவக் கொண்டாட்டப் பதிவு இதோ...


🌷சுவாமியின்  70வது பிறந்தநாள் விழா:

நவம்பர் 19, 1995 சுவாமி மகளிர் தினமாக அறிவித்தார். இனி நவம்பர் 19 ஆண்டு தோறும் மகளிர் தினமாக கொண்டாடப்படும் என்று சுவாமி அறிவித்தார். சுவாமி பிறந்த நாள் விழா ஹில்வியூ ஸ்டேடியத்தில்  நடைபெற்றது. சுவாமி ஹில்வியூ ஸ்டேடியத்திற்கு பல நாட்டு சாயி நிறுவனங்கள் பங்கு பெற்ற ஊர்வலத்தில் இறுதியாக வந்தார். மதிப்புற்குரிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. பி.என். பகவதி, இந்திய குடியரசு தலைவர் ஷர்மா சுவாமியின் பிறந்த தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்கள். குடியரசு தலைவர் சத்ய சாய் ஒருங்கிணந்த குடி நீர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.


🌷சுவாமியின் 75வது பிறந்தநாள்:

2000 நவம்பர் 23, 2000, வியழக் கிழமை சுவாமி பிறந்த நாள் ஹில் வ்யூ ஸ்டேடியத்தில் நடைபெற்றது. சுவாமி சரியாக 7:00 மணிக்கு ஸ்டேடியம் வந்தடைந்தார். ஸ்டேடியத்தில் 30,000 பேர் அமர முடியும், ஆனால் அன்று 1,00,000 பேர் இருந்தனர். இந்திய மற்றும் அயல் நாடு கிரிக்கெட் வீரர்கள் பலர் அங்கு காணப்பட்டனர் (அவர்கள் சுவாமி ஏற்பாடு செய்திருந்த நல்லெண்ண கோப்பை கிரிக்கெட் மேட்ச் விளயாட வந்தவர்கள்) மத்திய மனித வளத்துறை அமைச்சர் திரு. முரளி மனோஹர் ஜோஷி முக்கிய விருந்தினராக அழைக்கப் பட்டிருந்தார். ஸ்டேடியத்திற்கு வெளியே ஒரு லக்ஷத்திற்கும் அதிகமானவோர் காணப் பட்டனர். காலை 7:00 மணிக்கு பட்டத்து யானை முன் வர, பேன்ட் வாத்தியங்கள் முழங்க, சுவாமி தங்கமயமான தேரில் ஸ்டேடியத்திற்கு வந்தார். ஊர்வலத்தில் 165 நாடுகளைச் சேர்ந்த ஸத்ய ஸாய் பக்தர்கள் கலந்து கொண்டனர். பற்பல நாடுகளை சேர்ந்த பல இன பாடகர்கள் ஒன்றாக சேர்ந்து 'ரெடீமர் ஆப் மேன் கைன்ட், யுக அவதார் சாயி' பாடலை அற்புதமாக பாடினர். ஸாயி பலூன்கள் வானில் பறக்க இடப் பட்டன. சுவாமி தெலுங்கில் 90 நிமிடங்கள் உரையாற்றினார். பக்தர்கள் மீது ஹெலிகாப்டரில் மலர்கள் தூவினர். வந்தவர் அனைவருக்கும் விருந்து பரிமாறப் பட்டது. பகவானின் பிறந்த நாள் வைபவங்கள் 15 நாட்கள் நடைபெற்றது. உலகளாவிய ஸத்ய சாய் மாநாடு, சத்ய சாய் உயர் கல்வி நிறுவனங்களின் பட்டமளிப்பு விழா ஆகியவை நடை பெற்றன.


🌷சுவாமியின் 80வது பிறந்தநாள்:

2005 சுவாமியின் 80வது பிறந்த நாள் விழா ஹில்வ்யூ ஸ்டேடியத்தில் நடைபெற்றது. பல நாடுகளில் இருந்து ஸாயி சென்டர் பக்தர்கள் ஸ்டேடியத்திற்கு ஊர்வலமாக வந்தனர். சுவாமி காரில் ஸ்டேடியம் வந்தார். உலகளாவிய சாயி சென்டர் சார்பில் ஆண்டு அறிக்கையை திரு இந்துலால் ஷாவும், டாக்டர் மைக்கேல் கோல்ட்ஸ்டீனும் பகவான் முன் நிலையில் சமர்ப்பித்தனர். மாலையில் பூர்ண சந்திரா ஆடிட்டோரியத்தில் சுவாமி பிறந்த நாள் கேக் வெட்டினார்.


🌷சுவாமியின் 85வது பிறந்தநாள்:

2010 சுவாமியின் 85வது பிறந்த நாள் விழா நவம்பர் 15 முதல் நவம்பர் 23வரை கொண்டாடப் பட்டது. வெள்ளை நிற அங்கியுடன் சுவாமியை ஸத்ய ஸாய் சென்ட்ரல் ட்ரஸ்ட் அமைப்பாளர்கள் தங்க ரதத்தில் அழைத்து வந்தனர். மத்திய வெளியுறவு அமைச்சர் திரு எஸ்.எம்.கிருஷ்ணா, ஆந்திர கவர்னர் திரு ஈ.எஸ்.எல். நரசிம்மன், மத்திய எரிசக்தி அமைச்சர் திரு. சுஷில் குமார் ஷிண்டெ, மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் திரு. விலாஸ் ராவ் தேஷ்முக், முன்னாள் முதல்வர் திரு. அசொக் சவான் மற்றும் பஞ்சாப் கவர்னர் திரு. சிவராஜ் படேல் ஆகியோர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினர். தமிழ் நாடு துணை முதல்வர் திரு. எம்.கே.ஸ்டாலின், சென்னை மேயர் திரு. சுப்பிரமணியன், ஆந்திரா சுற்றுலா அமைச்சர் திருமதி. கீதா ரெட்டி மற்றும் டாடா குழுமத்தின் சேர்மன் திரு. ரத்தன் டாடா ஆகியோரும் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டனர்.

சுவாமியின் பிறந்த நாள் விழா பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் ஹில்வ்யூ ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முன்னதாக சத்ய சாய் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் இந்திய பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பெண்கள் தின விழா மற்றும் சுவாமி பிறந்த நாள் சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர் திருமதி. ப்ரதீபா தேவீசிங் படேல் பங்கேற்றார். பிறந்த தினத்தை ஒட்டி ஸரோட் மாஸ்ட்ரோ உஸ்தாத் அம்ஜத் அலிகான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 16ம் தேதி மாலை ஸாக்ஸபோன் சக்ரவர்த்தி கதரி கோபாலநாத் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சிக்கில் குருசரன், ஸந்தூர் வாத்ய மேதை ராகுல் ஷர்மா ஆகியோரும் இசை விருந்து படைத்தனர்.


சுவாமியின் பிறந்த தின வைபவமாக:

நவம்பர் 18 ரதோத்ஸவம், மாலையில் ஆரம்ப கல்வி மாணவர்களின் கலாச்சார நாடகம்; நவம்பர் 19 மகளிர் தினம், நவம்பர் 21 அயல் நாட்டு சத்ய சாய் நிறுவங்களின் உலக மாநாடு,  நவம்பர் 21 சத்ய சாய் உயர் கல்வி மாணவர்களின் நாடகம், நவம்பர் 22 பட்டமளிப்பு விழா, நவம்பர் 23 சுவாமி பிறந்த நாள் கொண்டாட்டம்..


மூலம்: சத்ய சாய் வலை தளங்கள்

தமிழாக்கம்  Prof. N.P. ஹரிஹரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக