1966 ஆம் ஆண்டு தீபாவளிக்குப் பின்னர் பாபாவின் பிறந்த நாள் விரைந்து வந்தது. அவருடைய பிறந்த நாள் அறிக்கையாக கீழ்க்கண்டவாறு எழுதி, அதை சனாதன சாரதியில் வெளியிடும் படிபணித்தார்.
"மனிதன் பங்கு கொண்ட பல யுத்தங்களும் எதை உணர்த்துகின்றன தெரியுமா? மோகம், வெறுப்பு,கோபம், பொறாமை ஆகிய தீய சக்திகள் மனிதனைப் பிடித்து ஆட்டுகின்றன என்பதையே உணர்த்துகின்றன.
இன்று உலகைப் பிடித்தாட்டும் அராஜகம், சட்டத்திற்கு புறம்பான செயல்கள், குழப்பம், உயிர்வதை ஆகியவைகளைப் பரிசோதித்துப் பார் இந்த செயல்கள் மேற்சொன்ன தீய சக்திகளின் விளைவே. உங்களுக்கு நேரும் வியாதிகளும், உங்கள் குடும்பத்தில் நிகழும் அமைதியின்மையும் கூட இந்த மோகம் ,கோபம், வெறுப்பு, பொறாமை ஆகிய விஷக்கிருமிகளின் வேலையே!" என்று எழுதினார் பாபா.
மேலும் தவறுகளையும் தோல்விகளையும் மற்றவர்களின் மேல் சுமத்தி, அவர்களின் மேல் குற்றம் சாட்டுவதையும், துன்புறுத்துவதையும் பாபா வன்மையாகக் கண்டித்தார். வெறுப்பும் , பொறாமையும் மனிதனின் அழகை, தோற்றத்தைக் கெடுக்கவல்லன.
பொறாமை, கோபம், துராசை ஆகியவைகளால் பீடிக்கப்பட்ட மனிதன் அஜீரணம்,நரம்புத்தளர்ச்சி ஆகிய நோய்களால் துன்புறுவான்...
அன்பையும் இறைவனின் பால் கொண்ட பக்தியையும் பெருக்கிக் கொள்ளுங்கள்.முழு உலகமும் இந்த அன்பு வட்டத்துக்குள் வரும் வரை இதைப் பெருக்கிக் கொண்டே போகவேண்டும் என்று கூறினார் பாபா.
ஆதாரம் : சத்யம் சிவம் சுந்தரம் - பாகம்: 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக