தலைப்பு

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

வேதங்களின் நால்வகை வழிகாட்டிகள்!!

மனிதன் தனது அனைத்து ஆசைகளையும் துறக்க இயலாது. மனித வாழ்வு சிறக்க, வேதங்கள் நான்கு வழிமுறைகளை எடுத்தியம்புகின்றன. அவை, அறம் பொருள், இன்பம், வீடு (தர்ம, அர்த்த, காம, மோட்சம்) என்கிற நான்கு வழிகாட்டி நெறிமுறைகளாகும்.... 


🔴 இதில் முதலில் கூறப்பட்டுள்ள அறமும், இறுதியில் சொல்லப்பட்டுள்ள மோட்சமும் எளிதில் அடைய இயலாதவை. பந்த பாசங்களிலிருந்து விடுபட்டு, புலன் இச்சையிலிருந்து நீங்கினால்தான் இவற்றின் வழியே பயணிக்க இயலும். 

🟠 ஆகவே அறத்தையும், வீட்டுப்  பேற்றையும்அடையும் முயற்சிகளை கைவிட்ட மனிதன், மற்ற இரு வழிகளான பொருள் மற்றும் இன்பத்தை இறுகப் பிடித்துள்ளான். இதன் காரணமாகத் துயரமும், பயமும் வாழ்வில் அனுபவிக்க நேரிடுகிறது.


🟡 இதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும். இந்த நான்கு வழிகளை இரண்டு  வழிகளாக சேர்க்கவேண்டும். அறமும் பொருளும் ஒரு வழி இன்பமும் வீடும் அடுத்த வழி. அதாவது, அறவழியில் பொருள் ஈட்டி, ஈட்டிய செல்வத்தை அறவழியில் செலவிட வேண்டும். பிறகு வீட்டுப் பேறை அடைவதே உனது இன்பமாகக் கருதவேண்டும்.


🟢 இவ்வழிகளை இவ்வாறு நாம் செவ்வனே  இணைத்துப் பொருள் கொண்டு வாழ்வுதனை சிறப்பாக நடத்த வேண்டும்.


ஆதாரம்: Sathya Sai Speaks, Vol X, pg 70

தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக