தலைப்பு

புதன், 10 ஆகஸ்ட், 2022

ஸ்ரீ யோகி சுப்புராய மகோதயா | சாயி அவதாரம் பற்றி மகான்கள்

எவ்வாறு ஒரு யோகி பாபாவை உணர்கிறார்.. பாபா அந்த யோகிக்கு எந்தவகையான அனுபவம் யாவும் தந்திருக்கிறார்... அவர் அடியொற்றிய அணுக்கமானவர்களுக்கு பாபா எவ்வகை அனுபவம் தந்திருக்கிறார்.. சுவாரஸ்ய சுருக்கமாக இதோ...


சுப்பராவ் என்பவர் பெங்களூரில் வசிக்கிற பெரிய யோகி! அது 1975 காலகட்டம்... யோகிகள் பெரும்பாலும் வெளியே விளம்பரம் தேடுபவர்கள் அல்ல... அப்படி தேடி ஓடும் அர்ப்பமான நேரங்களைக் கூட தனது தியானத்திற்கே பயன்படுத்துபவர்கள்.. யோகி சுப்பராவும் தியானத்திலேயே தனது வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை செலவு செய்கிறார்! பெங்களூர் குவெம்பு தெரு வய்யாலி காவல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் அருகே ஒரு சிறுவீட்டில் வசிக்கிறவர்... அந்த வீட்டில் பாபாவின் மிகப்பெரிய படம்... தினந்தோறும் வழிபாடு நடக்கிறது... தியானமும் நிகழ்கிறது... தினசரி தியானம் நிகழும் அறையில் தெய்வீக அதிர்வலைகள் நிரம்பி இருக்கும்... அதே வித அதிர்வலைகளோடு யோகியின் பூஜையறை நிரம்பி இருக்கிறது!

ஹைதராபாத் பாபா பக்தரான சதீஷ் தேசாய் 1975 ல் அடிக்கடி யோகியை தரிசிக்க வருகிறார்... யோகியை தன் குருவாக வரிக்கிறார்... அவர் தெளிவாக உணர்கிறார் பாபா தமது இறைவன்.. யோகி தமது குரு என... பாபாவின் கைக்கருவிகளான மகான்களை வைத்தும் பூமியை பாபா புனிதப்படுத்திக் கொண்டிருக்கிறார்! ஒருமுறை பஜனை ஆரத்தி முடிந்தும் யோகி மீண்டும் ஆரத்தி எடுக்கிறார்... பத்து நிமிடம் கடந்து மயங்கி விழுகிறார்‌.. தெளிந்தவுடன் தான் பாபாவின் வொயிட் ஃபீல்டுக்கு சென்றிருந்தேன்.. பாபா ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார்... "அது நன்மை தான்.. அப்படியே செய் !" என்றார் பாபா... அவர் டிரான்ஸில் சென்று வந்து நடந்ததைச் சொல்கிறார்... அதைக் கேட்டு வியக்கிறார்கள்... சதீஷ் தேசாயின் தாய் பிருந்தாவனுக்கு அழைத்து தொலைபேசியில் கேட்க.. பாபா 7.30pm அளவில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்ததை உறுதி செய்கிறார்கள்! யோகியின் வார்த்தையை கேட்டு ஊஞ்சலாடிய எண்ணங்கள் உறைந்து போய்விட்டன...!

ஒருமுறை கானடாவிலிருந்து ஒரு இளைஞர்.. அவர் பெயர் திலீப் படேல் யோகியை தேடி வருகிறார்.. அவருக்கு கைகளின் அடியில் கட்டி பெரிதாகி கேன்சர் அளவிற்கு முற்றிவிடுகிறது.. "சுவாமியால் தான் சரி செய்ய முடியும்!" என்கிறார் யோகி! லண்டன் மருத்துவர்கள் 4 மாதமே உயிருக்கு கெடு வைத்திருந்தார்கள்... பாபாவை தரிசிக்க அனுப்புகிறார் யோகி.. 5 இன்ச் சந்தனக் கட்டையை மந்திரம் சொல்லி தந்து கட்டி தோன்றிய இடத்தில் வைக்கச் சொல்கிறார்... யோகியும் பாபாவிடம் மனம் உருக வேண்டுகிறார்...

மனிதர்கள் யோகிகளிடம் வேண்டுபவர்கள்.. யோகிகளோ இறைவன் பாபாவிடமே வேண்டுபவர்கள்! அவர்கள் வேண்டிக் கொண்டதால் தான் சாயி அவதாரங்களே மூன்றாய் முகிழ்த்திருக்கின்றன...!

திலீப் பாபாவின் கருணையால் யோகியின் வேண்டுதலால் குணமாகிவிடுகிறார்! கானடாவிலேயே 4 விடுதிகள் வைத்து பிற்காலத்தில் செட்டில் ஆகிவிடுகிறார்! 

சதீஷ் தேசாய் பகிரும் போது.. யோகியோடு பல தலயாத்திரை சென்று வந்ததை நினைவுகூர்கிறார்! ஆன்மா- ஆன்மீகம்- வேற்றுலகம் என பலவற்றை குருவான அந்த யோகி பகிர்ந்து கொண்டதை பரவசமாக பதிவு செய்கிறார்! தியான நிலையில் யோகிக்கு பாபா பல இறை ரூபங்களின் தரிசனத்தை காட்டி இருக்கிறார்.. குறிப்பாக வாமன , பரசுராம அவதாரம், ஆஞ்சநேய தரிசனம், அபிமன்யு தரிசனம்...! எப்படி இவை சாத்தியம் என சதீஷ் கேட்கிற போது... பாபாவின் கருணையே இதனை சாத்தியப்படுத்துகிறது என்கிறார்! அதுதான் மிகச்சரியான தெளிவான பதிலும்! இறைவன் பாபாவின் அருளே நிகழாதவற்றை .. நிகழ மனித முயற்சியையும் கடந்தவற்றை நிகழ்த்துகிறது! ஏன் நிகழ்கிறது? அவை சத்தியம் என உணரவைக்கவும்.. மேலும் அகப்பக்குவம் வாய்ப்பதற்காகவுமே மகிமைகள் பாபாவால் நிகழ்த்தப்படுகின்றன... மற்றபடி பெருமைப்பட்டு கொள்வதற்காக அல்ல!

ஒருமுறை யோகியை பென்ஸ் காரில் வைத்து மிக சொகுசாக ஷிர்டிக்கு அழைத்துச் செல்கிறார்கள் அடியவர்கள்.. "எனக்கு இந்த சொகுசான பயணம் எதற்கு சுவாமி? தேவையே இல்லையே!" என உணர்கிறார்... காரிலேயே தியானிக்கிறார்...அப்போது கடந்த பிறவியில் அவர் பலமுறை மிகுந்த சிரமத்தோடு ஷிர்டி ஷேத்திரம் சென்று வந்ததை கண்டுணர்கிறார்... பாபா எது நிகழ்த்தினாலும் அதற்கு ஒரு தகுந்த காரணம் இருக்கவே செய்கிறது என்பதையும் தெளிவுற உணர்கிறார் யோகி...  "9999 ரூபாயே இருக்கிறது 1 ரூபாய் இல்லையே!" என குறைப்பட்டு கொள்பவன் சராசரி மனிதன்... "9999 ரூபாயா.. இத்தனை பணம் எனக்கு எதற்கு? அவசியமில்லையே!" என இறைவனிடமே கேள்வி கேட்டு.. நான் திருப்தியாகவே இருக்கிறேன் சுவாமி என சொல்பவர்கள் யோகிகள்!

ஒரு சமயம் ஒரு பயணத்தில்.. இங்கே ஒரு யோகி இருக்கிறார்.. அவர் என்னை அழைக்கிறார்.. உணவோடு செல்வோம் எனச் சொல்லி வந்தவர்களையும் அழைத்துச் செல்கிறார் யோகி சுப்புராயா‌... அங்கே அவர் சொன்னது போல் ஒரு யோகி இருக்கிறார்.. இரு யோகிகளும் பேசிக் கொள்கிறார்கள்... இப்படியாக  வந்தவர்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு நிகழ்வு பரவசம் தருகிறது! சதீஷ் தேசாயின் தாய் குரு திசையை தாண்ட மாட்டார் அதாவது வயது 60 தான் என ஜோதிடமும் அறிந்த 

யோகி சுப்புராயா தெரிவிக்கிறார்... "பாபாவை நீ வேண்டிக் கொள்! அதைத் தவிர வேறு வழியில்லை!" என்கிறார் யோகி... 

 2 வருடம் கடந்து சதீஷுக்கு கனவு வருகிறது... பாபா கனவில் வருகிறார்.. தரிசன வரிசையில் சதீஷ்.. "என்ன வேண்டும் என பாபா கேட்க.. சதீஷ் அழுகிறார்... "அம்மாவின் ஆயுள்.. அம்மாவின் ஆயுள்... அதைத் தானே நீ என்னிடம் வேண்டிக் கொண்டே இருக்கிறாய்! சரி.. உன் தாய்க்கு நீண்ட ஆயுள் கொடுத்தேன்! போய் வா!" என பாபா கூறிவிட்டுச் செல்கிறார்! அதை அவர் வெளி உலகில் பகிரும் போது அவரது தாய்க்கு வயது 75...! 

மகான்கனால் ஒருவரை மரணத்திலிருந்து காப்பாற்ற இயலாது.. அதற்கு அவர்களுக்கு இறைவனின் அனுமதி தேவை.. ஆனால் இறைவனுக்கோ எவரின் அனுமதியும் தேவையில்லை.. அடுத்த பிறக்கப்போகிற அந்த ஆன்மாவின் ஆயுளில் இருந்து கூட ஆண்டுகளை மாற்றி தர இறைவனால் மட்டுமே இயலும்! 


(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 179) / Author : Jantyala Suman babu / Eng.Translation : Pidatala Gopi Krishna)


யோகி சுப்புராயா நடந்து கொண்ட விதத்தை வைத்தே பாபா யார்? என்பதை உணர முடிகிறது! ஒரு மலை உச்சியில் இருந்து வானத்தை பார்ப்பதற்கும்.. மொட்டை மாடியிலிருந்து வானத்தை பார்ப்பதற்கும் வித்தியாசம் இருப்பது போல்.. மனிதர் பாபாவை உணர்வதும்... யோகிகள் பாபாவை உணர்வதும்... யோகிகள் ஆன்ம நிலையில் உச்சம் போகிறவர்கள்... அப்படி ஆகாயத்தை மலை உச்சியிலிருந்து பார்க்கிற போது மேகமே நம் முகத்தில் உரசும்... மொட்டை மாடியில் அது சாத்தியமில்லை... விமான பயண ஜன்னல் வழியான ஆகாய தரிசனமும்... ரயில் பயண ஜன்னல் வழியான ஆகாய தரிசனமும் ஒன்றில்லையே! அது போலவே! ஆழ்ந்த ஆன்மீக அனுபவமே பாபா இறைவன் என்பதை உணர்த்தி...நம்மையே அதற்கொரு சாட்சியாக வாழ வைக்கிறது!


   பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக