"நாவை அடக்கினால் நாம் ஞானியாகிவிடுவோம்!" என்று சுலபமான ஒரு வழியை கற்றுக் கொடுக்கிறார் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி...
ஹிந்து மதத்தில் அதனால் தான் உணவை கைவிட்டு விரதம் இருப்பதையும்... வாய் திறந்து பேசாமல் மௌனமாக இருப்பதையும் மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்... உங்கள் உடம்பில் விளையும் பல்வேறு இச்சைகளை தூண்டுவது நீங்கள் சாப்பிடும் உணவே! உங்கள் மன அமைதியை குலைப்பதும் நீங்கள் உண்ணும் மிக ருசிமிகுந்த உயர் ரக உணவு வகைகள் தான்! கொஞ்ச நாளைக்கு எளிய உணவைச் சாப்பிட்டுப் பாருங்கள்... உங்கள் உடலும் மனமும் வழிக்கு வந்துவிடும்... உங்கள் நாக்கும் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்பட்டு விடும்! அதே போல அளவோடு பேசக் கற்றுக் கொள்ளுங்கள்... பேசுவதை இனிமையாகவும் பிறரைப் புண்படுத்தாமலும் பேசத் தெரிந்து கொள்ளுங்கள்... உரக்கப் பேசாமலிருங்கள்! வம்பு பேசாமல் இருக்கப் பழகுங்கள் பிறகு எல்லோரிடமும் நீங்கள் நட்புறவோடு பழக முடியும்! உங்களுடைய சக்தியையும் திறமையையும் கூடஇது அதிகப்படுத்தும்! உங்கள் நாக்கின் ருசி... வாக்கின் அளவு இரண்டையும் நீங்கள் கட்டுப்படுத்துகிறதை வைத்துத் தான் உங்கள் வாழ்க்கை இருக்கிறது! இதைச் சரியாகச் செய்தால் பிற பலன்கள் தாமாகவே வந்து சேர்ந்துவிடும்!
ஆதாரம் : சத்திய தரிசனம் / பக்கம் :5/ தொகுப்பு : எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்/ வெளியீடு: நர்மதா பதிப்பகம் (1990)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக