தலைப்பு

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

புலால் உண்பது மெய்ஞானம் கிடைப்பதற்கு தடையாக இருக்குமா?

அன்பே கடவுள் என்பது இந்து மதத்தின் தத்துவம். தன்னை காப்பாற்ற யாரும் இல்லாதவர்களைக் கடவுள் காக்கிறார். இதையே புராண வரலாறுகள் நமக்கு திரும்பத் திரும்ப சொல்லுகின்றன... ஆகையால் நமக்கு எந்தத் தீங்கும் செய்யாத மிருகங்களை வதைத்து உணவாக்கிக் கொள்வதற்குத் தெய்வ சம்மதம் கிடைக்காது! மெய்ஞானத்தை உணர விரும்புகிறவர் இந்த அடிப்படையைக் கவனிக்க வேண்டும்! 

நல்ல காரியங்கள் சத்வ குணத்தின் மூலமாகவே வரக்கூடியவை! தீய சிந்தனைகளும் காரியங்களும் ரஜோ குணத்தால் தூண்டப்படுபவை! உபயோகமற்ற செயல்களுக்கு தமோ குணம் அடிப்படையாக அமையும்! சத்வ குணத்தை (நல்ல குணத்தை) புலால் உணவு அமைத்துக் கொடுக்காது! ரஜோ குணத்தைக் (தீய குணத்தை) தான் தூண்டும்! ஆகையால் புலன்களை அடக்கி... நல்ல சிந்தனைகளைத் தூண்டி... நல்ல காரியங்களைச் செய்ய முயல்பவர்களுக்கு சாத்வீகமான உணவு - புலால் சேராத உணவு நல்ல ஆதாரமாக அமையும்!


(ஆதாரம் : சத்திய தரிசனம் / பக்கம் : 6/ தொகுப்பு : எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்/ வெளியீடு: நர்மதா பதிப்பகம் (1990))

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக