தலைப்பு

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

தடையறாது ஓடும் ஜீவநதி ஸ்ரீ சத்யசாயி சங்கல்ப பணிகள்!

பகவான் காட்டிய வழிகளில் நடந்து அவருடைய தெய்வீக சங்கல்ப சேவைப் பணிகளில் ஈடுபடுவது என்பது அவர் நமக்கு காட்டும் அனுக்ரஹமாகும். அவருடைய தெய்வீகப் பணிகளில் நாம் ஈடுபடுவதால்தான் அப்பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக ஒரு எண்ணம் சிலர் மனதில் எழலாம். ஆனால் பகவான் கூறுவதென்ன. படித்து தெளிவடைவோம்.


🌹ஓடாத கடிகாரம் நிற்காத காலம்:

ஒரு சமயம் நம் அன்புத் தெய்வம் பாபா பக்தர் ஒருவரது இல்லத்திற்கு செல்கிறார். பார்த்து பார்த்து செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கு மத்தியில்.. சுவரில் கடிகாரத்திற்கு பேட்டரி மாற்ற மறந்துவிட்டார் அந்த அன்பர். சென்று அமர்ந்த பாபாவின் கண்கள் அந்த இயங்காத கடிகாரத்தைக் கண்டன.


புன்னகைத்த பாபா கூறினார்.                 "பார் அந்த கடிகாரம் இயங்கவில்லை.  ஆனால் காலம்  தனது இயக்கத்தை நிறுத்தாமல் நடத்திக் கொண்டு இருக்கிறது. அது போலவே நீ சாயிப்பணி ஆற்றுவதை நிறுத்தி விட்டாலும், எனது அவதார அரும்பணிகள் ஒருபோதும் நிற்காது. உனது பங்களிப்பு இன்றியும் அது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேஇருக்கும்.


நீ சாயிப் பணிகளில் ஈடுபடுவது உனது கடைதேறுதலுக்கே. அது பாவன கங்கா ஸ்நானம் போன்று புனிதமானது. மற்றவர்களது போற்றுதல்/ தூற்றுதல்களால் சலனப்படாது. நதி பிராவாகித்து ஓடி இறுதியில் கடலில் சங்கமிக்கிறது. அதுபோல சாயியின் சங்கல்ப புனித திட்டங்கள் யாருடைய உதவிக்காகவும் காத்திருப்பதில்லை.  அதை யாராலும் தடுத்திட இயலாது. ஜீவநதியாக அது பொங்கி பிராவகமாக பாய்ந்து சென்று தன் இலக்கை அடையும்


சாய்ராம்.... இறைவன் பணி அவர் நமக்கு வழங்கும் பிரசாதமாகும்.  அவன் அருளாலே அவன்தாள் வணங்குவோம். இம்மண்ணுலகில் பொன்யுகம் படைப்பும.


ஆதாரம்: Students with Sai: Conversations (2001 – 2004)

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக