தலைப்பு

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

ஸ்ரீ சாயி வரலட்சுமி வரம் அருளி வளம் பெற்ற பக்தர்களின் லட்சுமி கடாட்ச அனுபவங்கள்!!

இறைவன் சிறு பார்வையே புற செல்வத்தோடு அக செல்வத்தையும் சேர்த்தே நமக்கு தருகிறது... புற செல்வத்தோடு அக செல்வமும் சேர வாழ்க்கையிலே பக்குவம் விளைகிறது... குசேலரை குபேரராக்கிய அதே ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரே இப்போதும் நமக்கு நலமளித்து வளமளித்து வருகிறார்... அதற்கான ஆதார சம்பவங்கள் இதோ...


சாய்ராம் ! மகான் ஸ்ரீ ஆதிசங்கரர் இன்றைய கேரளத்தில் உள்ள காலடி என்னும் ஊரில் ஆர்யாம்பாள் சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞானி சமயக் குரவர்களில்  ஆதிசங்கரர் முதன்மையானவர். தமது எட்டாம் வயதிலேயே துறவறம் மேற்கொண்டவர். சன்யாசி தர்மத்தின்படி யாசகம் எடுத்து தான் உண்ண வேண்டும். யாசக தர்மத்தின்படி ஒரு வீட்டின் முன் நின்று பவதி பிக்ஷாம் தேஹி என மூன்று முறை குரல் கொடுத்தார். அந்த வீடு ஒரு ஏழை பெண்மணியின் வீடு. அந்த வீட்டில் இருந்த ஏழைப் பெண்மணி சங்கரரை கண்டதும் சூரியனைப் போல் பிரகாசிக்கும்  இவருக்கு கொடுக்க எதுவும் இல்லையே என வருந்தினாள். வீட்டில் இருந்த ஒரே ஒரு  நெல்லிக்கனியை இந்தாருங்கள் என்று  அன்புடன்  பாத்திரத்தில் இட்டாள் அதனை பெற்றுக்கொண்ட ஆதிசங்கரர் ஏழ்மை நிலையிலும் தன்னிடமிருந்த ஒரே நெல்லிக்கனியை தானமாக தந்து விட்டு அந்த பெண்ணின் குணத்தை எண்ணி மகிழ்ந்தார்  அந்தப்பெண்ணின் வறுமையை போக்க வேண்டி அவர் வீட்டின் முன் நின்று மகாலட்சுமியை நினைத்து மனமுருக பாடி வேண்டினார். அதன் காரணமாக அந்த பெண்மணியின்  வீட்டிற்குள் தங்க நெல்லிக்கனிகள்   பொன் மழையாய்ப் பெய்தன அந்தப் பெண்மணி செல்வந்தர் ஆனார் குடிசை வீடு தங்க வீடானது.


புகழ்பெற்ற S. M சில்க்ஸ் நிறுவனர் திரு மனோகரன். சுவாமியின் மீது பக்தி மிகுந்த மனோகரன் அவ்வப்போது புட்டபர்த்தி சென்று சுவாமியை தரிசனம் செய்து விட்டு வருவார் அவர்  காஞ்சிபுரத்தில் ஒரு சிறிய ஜவுளி கடை நடத்தி வந்தார்  ஒருமுறை தரிசனத்தில்  பகவானின் பார்வை இவர் மேல் பட்டது.  இவர் ஊர் திரும்ப பஸ்ஸில் பிரயாணம் செய்த போது புட்டபர்த்தியில் பஸ்ஸில் ஏறிய ஒருவர் இவர் அருகே வந்து  அருகே வந்து அமர்ந்தார். அவர் இவரிடம் பேச்சு கொடுத்து நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என கேட்க இவர் ஒரு சிறிய ஜவுளிக்கடை நடத்தி வருகிறேன் என்றார். தினசரி விற்பனை என்றார் அவர். சுமார் 20 ஆயிரம் விசேஷ நாட்களில் 30 ஆயிரம் என்றார் மனோகரன் பட்டுப்புடவை வியாபாரம் செய்யுங்கள் என்றார் அவர். லட்சக்கணக்கில் பணம் வேண்டும் அவ்வளவு பணம் இல்லை என்றார் மனோகரன்.  நான் பட்டுப்புடவை வியாபாரம் செய்கிறேன். உங்களுக்கு தேவையான சரக்கு அனுப்பி அனுப்புகிறேன் விலாசம் தாருங்கள் விற்று லாபத்தை எடுத்துக் கொண்டு மெதுவாக பணம் தாருங்கள் என்றார் அவர். அதன்படி ஒரு வண்டி சரக்கை அனுப்பி விட்டார். மனோகரன் திகைத்துப் போனார். 30 ஆயிரம் வியாபாரம் 3 லட்சத்தைத் தொட்டது   ஜவுளிக்கடை ஜவுளி சாம்ராஜ்யம் ஆனது. நன்றியுள்ள மனோகரன் சுவாமியின் மிகப்பெரிய படத்தை வணங்காமல் எந்த வேலையும் செய்வதில்லை.  

பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் கோடி நன்மை அது தருமே...


பழம்பெரும் பக்தர் பட்டாபி செட்டியார். சுவாமி என் பிரிய பக்தன் என்று இவரை சொல்லுவார் இவரது உறவுக்காரர் குடும்பம் கோவையில் இருந்தது. தாங்க முடியாத தரித்திரம். வறுமை. பட்டாபி செட்டியாரின் வற்புறுத்தலின் பேரில் அவர்கள் புட்டபர்த்தி சென்று சுவாமியை பார்த்தனர்.  சுவாமியிடம் தங்கள் நிலையைச் சொல்லி அழுதனர். சுவாமி ஒரு லட்சுமி விக்ரகத்தை சிருஷ்டி செய்து அவர்களிடம் கொடுத்து பூஜை செய்து வர சொன்னார் வீட்டிற்கு செல்லும் வழியில் அதைப் பெருமையுடன் மற்றவர்களிடம் காண்பிக்கவே அந்த தங்கலட்சுமி விக்கிரகம் மறைந்துவிட்டது. 

 வருத்தமுற்ற அவர்கள் மீண்டும் புட்டபர்த்தி வந்தனர் சுவாமி இனி பெருமையடித்துக் கொள்ளக் கூடாது எனக் கூறி நான் லட்சுமிகடாட்சம் தந்தேன் என்றார். சுவாமி விக்ரகம் என அவர்கள் கேட்டபோது மகனிடம் உன் தாயாரிடம் உள்ளது நீ அதைப் பற்றி அம்மாவிடம் கேட்க கூடாது என்று கூறிவிட்டு தாயாரிடம் உன் மகனிடம் உள்ளது நீ அவனிடம் இதைப் பற்றிக் கேட்காதே என கூறிவிட்டார்.  இன்று அந்த தரித்திர புத்திரன் குபேர புத்திரனாக செல்வ  சீமானாக திகழ்கிறான் என்கிறார் பட்டாபி.


மோகன் மிர்புரி இந்தோனேஷியாவை சேர்ந்த சாயி பக்தர்.  இந்தோனேஷியாவில் ஒரு கார்மெண்ட் தொழிற்சாலையை நடத்தி வந்தார் மோகன். பலர் அதில் வேலை செய்து வந்தனர். மோகனுக்கு கொடுமை தீயின் ரூபத்தில் வந்தது  எதிர்பாராத மின் கசிவால் அவர்கள் தொழிற்சாலை முழுமையாக எரிந்து போனது இன்சூரன்ஸ் செய்யப்படவில்லை சரக்குகள் துணி பண்டல்கள் ஏற்றுமதி செய்ய வேண்டிய பொருட்கள் அனைத்தும்  எரிந்து ஓட்டாண்டி ஆனார் மோகன்.  அழுதுகொண்டே புட்டபர்த்தி வந்தார். மனம் முழுவதும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது. நேர்காணலுக்கு பகவான் அழைத்தார் கதறி விட்டார் மோகன். சுவாமி பரிவுடன் பைத்தியக்காரா! எதற்கு பயப்படுகிறாய்?  நான் இருக்கிறேன்  கவலைப் படாதே என்றார். மீண்டும் அங்கே சென்று தொழில் தொடங்கு என்றார் சுவாமி. நயா பைசா இல்லை கடன் மட்டுமே உள்ளது என்றார் மோகன். நான் பார்த்துக்கொள்கிறேன் போ என ஆணையிட்டார் பிரபு. மோகன் திரும்பச் சென்றார். தொழிலை தொடங்கினார். தானாக பலர் வந்து இவருக்கு சரக்கு கொடுத்தனர் வேலையாட்கள் மெதுவாக சம்பளத்தை பெற்றுக் கொள்வதாக கூறி தொழில் செய்தனர்  அதிசயத்தக்க வகையில் அனைத்தும் நடந்தன கடன் ஒழிந்தது. லாபம் வரத்தொடங்கியது. சில வருடங்களில் மீண்டும் தனது பிரம்மாண்ட தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவினார் மோகன். நன்றி மிகுந்த மோகன் சுவாமியிடம் பணிவுடன் பலமுறை வேண்டி இறுதியில் சுவாமியின் அனுமதி பெற்று புட்டபர்த்தியில்  ஒரு இசைக் கல்லூரியை நிறுவி தந்தார். அதுவே புட்டபர்த்தியில் உள்ள மிர்புரி மியூசிக் காலேஜ்.   


மகாலட்சுமியை பாடி தங்க நெல்லிக்கனி மழை பெய்ய வைத்தார் ஆதிசங்கரர்..


பகவான் பாபாவின் பார்வை ஒன்றால் பணக்காரர் ஆனார் எஸ் எம் சில்க்ஸ் மனோகரன்..


சுவாமியின் ஒரு சொல் பட்டாபியின் உறவினரை குபேரன் ஆக்கியது..


சுவாமியின் ஒரு ஆணை மோகன் மிர்புரியை மீண்டும் கோடிஸ்வரன் ஆக்கியது...


இந்த சாயி அன்னை கருணை 🙇‍♂️ மிகுந்தவள் கேட்கும் செல்வத்தை வாரி வழங்குபவள். 


தொகுத்தளித்தவர்: S.Ramesh Ex convenor Salem samithi


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக