ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காலத்திலேயே உயிரூட்டப்பட்ட நகரசங்கீர்த்தனம் ஷிர்டி காலம் தொடங்கி பர்த்தி காலம் என பூத்துக் குலுங்குகிறது... இதயத்தில் பாபாவை சுமப்பவர் எவரும் பயத்தையும் தயக்கத்தையும் சுமப்பதில்லை.. எனவே நகரசங்கீர்த்தன கீத உலா குறித்தான சந்தேகங்களை தெளிவாக்குகிறார் இறைவன் பாபாவே இதோ...
"நகரசங்கீர்த்தன் பல்வேறு இடங்களில் துவக்கப்பட்டதாக ஒன்றுக்கு மேற்பட்ட அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஆனால், பெங்களூர் போன்ற ஒரு பெரிய நகரத்தில், இந்த முக்கியமான ஆன்மிக சாதனை சில சமயங்களில் (விழா காலங்களின் போது) மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுகிறது. சிலர் தெய்வ நம்பிக்கை அற்றோரின் இழிந்த விமர்சனங்களுக்கு பயப்படுகிறார்கள், எனவே, அதிகாலையில் தெருக்களில், கடவுளின் மகிமையைப் பாடிக்கொண்டே குழுக்களாக வெளியே செல்லத் தயங்குகிறார்கள்!
உங்கள் இதயத்தில் அச்சமின்மை எனும் திருவுருவம் (இறைவடிவம்) பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்போது, பயத்தின் சிறு நடுக்கம் ஏன் உங்களைப் பாதிக்க வேண்டும்? மற்றவர்கள் ஏளனம் அல்லது கேலிக்கு பயந்து உங்களுடன் சேரவில்லை என்றால், இறை நாமத்தைப் பாடிக்கொண்டு தனியாக புறப்படுங்கள்.
நீங்கள் இந்த உலகத்திற்கு தனியாக வந்தீர்கள், துணை இல்லாமல், இல்லையா? வாழ்க்கையின் ஓட்டத்தில், நீங்கள் உற்றார் உறவினர்களை அடைந்தீர்கள், உங்களுடன் தங்களை பாசத்தால் பிணைத்துக் கொண்ட மனைவி, குழந்தைகள், நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரை நீங்கள் பெற்றீர்கள். நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அங்கு திரும்புபோது, யாருடைய துணையும் இல்லாமல், தனியாக நுழைவாயில்களுக்குள் செல்ல வேண்டும்.
நகரசங்கீர்த்தனம் என்ற பயணமும் அப்படியே இருக்கட்டும். தனியாக தெருவுக்கு வாருங்கள்; உற்றார் உறவினர் வந்தால் அவர்களைச் சேர்த்துக் கொள்ளவும்; கவலையில்லாமல், எவ்வித பாதிப்புமில்லாமல் அவர்களுடன் செல்லுங்கள்; உங்கள் சொந்த இனிமையான தனிமையில் மகிழுங்கள்; இறுதியாக, உங்கள் பணி நன்றாக முடிந்தது என்ற திருப்தியில் உங்கள் இல்லத்திற்கு திரும்புங்கள்.
மக்கள் உங்களை பைத்தியக்காரத்தனமாகப் பார்த்து சிரிக்கலாம்; ஆனால், இந்த பைத்தியக்காரத்தனம் மிக விரைவில் தொற்றக்கூடியது தொற்று, மதிக்காதவர்கள் கூட இந்நிகழ்வில் விரைவில் கலந்து கொள்ள வருவார்கள்.
நகரசங்கீர்தனத்தில் கலந்து கொள்ளாத எவரையும் நமது நிறுவனம்/சமிதி பொருப்பாளர்களாக கொண்டிருக்கக் கூடாது. இதில் கலந்து கொள்வதில் அவர்களுக்கு எந்தக் கவலையோ, தயக்கமோ, சந்தேகத்தின் நடுக்கமோ இருக்கக்கூடாது."
- பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா (13.01.1970, பிருந்தாவன், மைசூர் மாநில சாயி சமிதிகளுக்கான மாநாடு)
மாதத்தின் முதல் ஞாயிறு சமிதிகளில் நடைபெறும் நகர் சங்கீர்த்தனத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக