தலைப்பு

திங்கள், 2 மே, 2022

நவீன தொழில்நுட்பமும் ஆன்மீகத்திற்கு உதவுகிறது!

'ஸ்ரவணம், கீர்த்தனம், விஷ்ணு ஸ்மரணம்' இவை நவவித பக்திகளில் முதன்மையான மூன்று. இறைவனின் நாமத்தை கேட்டல், அவன் புகழ் பாடுதல், அவனையே சிந்தித்து இருத்தல் இவைகளை செயல்படுத்த நவீன மொபைல் செயலிகள் நமக்கு உதவுகின்றன.

சில மாதங்களுக்கு முன் ஸ்ரீ சத்ய சாயி மத்திய அறக்கட்டளையின் சார்பில் வெளியிடப்பட்ட பிரசாந்தி கனெக்ட் மொபைல் செயலி நமக்கு பல்வேறு வகைகளில் ஆன்மிகப் பயிற்சிக்கு உதவியாக இருக்கின்றன. 


Play Store : shorturl.at/bdtX3

App Store : shorturl.at/iyDZ2இந்த செயலி பிரசாந்தி நிலையத்தில் தினசரி நடைபெறும் காலை மாலை ஆன்மீக செயல்பாடுகளை நேரடி ஒலி/ஒளிபரப்பு காணவும், பிரசாந்தியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளின் காணொளிகளை நேரடி ஒளிபரப்பாக காணவும் உதவுகிறது. பல்வேறு தலைப்புகளில் உருவான ஆன்மீக கட்டுரைகள் எளிதில் தேடி எடுத்து சுவைக்க பயன்படுகிறது. தினமும் எழுதப்படும் இன்றைய சிந்தனைக்கு பகுதி எளிதில் கிட்டுகிறது. இப்படியாக பல்வேறு வகைகளில் இந்த ஆன்மீக செயலில் நமக்கு பேருதவியாக இருக்கிறது. சத்யசாயி மீடியா சென்டரின் யூடியூப் வீடியோக்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கண்டு கொள்ள வழிவகை செய்துள்ளது இந்த செயலி. குழந்தைகளுக்கான காணொளிகளையும் ஒருங்கிணைத்து வழங்கி இருக்கிறது இந்தச் செயலி.


சமீபத்தில் அதில் சில மேம்படுத்தப்பட்ட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவைகளில் ஒன்று 'லிகித நாம ஜபம்'. இந்த லிகித நாம ஜபம் மேலே குறிப்பிடப்பட்ட நவவித பக்திகளில் முதன்மையான மூன்றினையும் ஒருங்கே செய்வதற்கு நமக்கு உதவுகிறது. இறை நாமத்தை உச்சரித்து, அதனை காதார கேட்டு, உளமார சிந்தித்து, நம் கைகளால் அதனை எழுதும் விதமாக இந்த ஆன்மீக சாதனை அமைந்துள்ளது.


பகவத் கீதையில் பகவான் யோகத்தில் நான் 'ஜப யோகம்' என கூறியிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. கலியுகத்தில் நாம ஜபத்தை விட சுலபமான, ஆனந்தமான அதீத பயன் தரக்கூடிய ஆன்மிக சாதனை இல்லை எனலாம்.

ஜபம் செய்யும் போது 'வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து' செய்ய மனம் ஒருநிலைப்படும், அத்துடன் கையினாலும் எழுத சுலபமாக மனஒருமைப்பாடு ஏற்படும்.

நமது பகவானும் இந்த லிகித நாம ஜப சாதனையை பெரிதும் உவக்கிறார். 

வாருங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைந்து, சுலபமாய் இறைவனுடன் தொடர்பு கொள்வோம்..


தொகுத்தளித்தவர்: திரு விஷ்வேஷ் பாபு, மதுரை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக