தலைப்பு

புதன், 25 மே, 2022

பாகிஸ்தான் ஊடுருவலை தடுக்க பாபா கனவில் சென்று திட்டம் தீட்டிய பாதுகாப்பு உஷார்!


பாபா கனவில் வருகிறார் என்றால் அது கனவல்ல நிஜம்... இன்றளவும் தனது கனவு அனுகிரகத்தை பாபா கருணையோடு நீடிக்கிறார்! அப்படி பக்தர்களுக்கு நேர்ந்த அனுபவக் கடலில் சிறு துளி இதோ...


கனவில் பாபா வருவது தூங்குகையில் நாம் அவரை நினைத்துக் கொண்டே உறக்கத்தில் சறுக்கி விழுவதால் அல்ல... அது முழுக்க முழுக்க பாபா சங்கல்பமே என பாபாவே தெளிவுபடுத்தி இருக்கிறார்! 

 இலக்கியத்தரமான மற்றும் பழம்பெரும் பல்சுவை பத்திரிகையான கலைமகளில் புகழ்பெற்ற எழுத்தாளர் ச.கு.கணபதி அவர்களின் மகள் கமலம்மாவுக்கு பாபா கனவு அனுகிரகம் நிறைய புரிந்திருக்கிறார்! அது சிறு விஷயமாயினும் பெரிய விஷயமாயினும் கனவிலேயே வழிகாட்டுகிறார்! திருப்பதி பல்கலைக்கழகத்தில் இசையிலே முதல் வகுப்பில் பட்டம் பெற்ற அவரின் சங்கீதத்திற்கு கனவிலேயே பாடம் எடுக்கிறார் பாபா... அது அப்படியே அவர்களது வாழ்வியலுக்கும் வழிகாட்டுகிறது!


ஒருமுறை பரமபக்தரான திருமால்ராவ் அவர்களின் தீராத வயிற்று வலிக்கு கனிவிலேயே அறுவை சிகிச்சை செய்கிறார் பாபா... கண்விழித்து அவர் பார்க்கையில் நிஜமான சிகிச்சை நடந்த தடயங்கள் இருந்து மிரண்டு போகிறார்... அவரின் வயிற்று வலியும் குணமாகிறது‌..


ஒரு முறை விமானத் தடவாளம் நிறைந்த வட எல்லையில் உள்ள ஒரு பகுதியில் பணியாற்றி வரும் செக்யூரிட்டி வார்டில் ஒரு சிறிய அதிகாரி... அந்தப் பகுதிக்கான பெயரை ஏர்ஃபோர்ஸ் ரகசிய பாதுகாப்பு கருதி நூலாசிரியர் பதிவு செய்யவில்லை... அது 1965 ஆம் ஆண்டு... அந்த சிறிய அதிகாரி ஒரு கனவு காண்கிறார்... அவர் தீவிர பாபா பக்தர்... அது மே 22 ஆம் தேதி.. அந்த நள்ளிரவு கனவில் பாபா அவர் முன் தோன்றி விமானத் தடவாளங்களில் 12 இடங்களைச் சுட்டிக் காட்டி அப்போது பணியமர்த்தப்படாத இடத்தில் ஆட்களைப் பணியமர்த்தச் சொல்கிறார்... பிறகு 'போஸ்ட்'களிலும் தளத்தைச் சுற்றியும் எத்தனை ஜவான்களை காவலில் நிற்க வைக்க வேண்டும் எனவும் பாபா ஒவ்வொன்றாக விளக்குகிறார்! "ஒரு ஜவானுக்கு கூட சிறு காயம் கூட ஏற்படாது! நான் காப்பாற்றுவேன்!" என்கிறார்...


பாபா மறைகிறார்... கனவு விலகுகிறது.. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை... எந்த ஆபத்துமே இன்றளவும் சூழாத போது ஏன் பாபா அவ்வாறு சொல்கிறார்? என அவரால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை! சரி நாம் இதனை ஒரு பேப்பரில் வரைபடமாக வரைவோம் என அப்போதே அதனை வரைந்து.. பாபா கனவில் சுட்டிக்காட்டிய இடங்கள் மற்றும் போஸ்டகள் இவற்றை ஜவான்களை நிறுத்துவது குறித்து வரைந்து விட்டு.. அந்தக் காகிதத்தை மேலதகாரிக்கு என்ன சொல்லி கொடுப்பது என யோசித்துவிட்டு... அவரின் அலுவலக மேஜைக்கு அடியில் அதை வைத்துவிட்டு வந்துவிடுகிறார்... 


சுமார் 3 மாதம் கடந்து... ஆகஸ்ட் மாத மத்தியில் சற்றும் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது! பாகிஸ்தான் காலாட்பிரிவில் 12,000 சிப்பாய்கள் படையெடுத்து நெருங்குவதாக அவர்கள் ரகசிய தகவல் கசிகிறது... இன்னும் ஓரிரு நாட்களில் தளத்தைச் சூழ்ந்து விடுவர்... படுபயங்கர நிலை... இவர்களோ 400 பேரே...அவர்களோ மூன்று மடங்கு... இத்தனை குறுகிய காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான சிப்பாய்களை நாம் திரட்டி அவர்களை முறியடிப்பது கடினம் என மேலதிகாரி கலவரம் அடைகிறார்!

அவர் விழி பிதுங்குகிற போது... என்ன சொல்கிறார் என அந்த பாபா பக்தரான சிறிய அதிகாரியிடம் கேட்கிறார்... அவருக்கு அப்போது தான் எல்லாம் புரிகிறது.. மின்விசிறிக் காற்றில் அவர் ஏற்கனவே வரைந்து வைத்து மேலதிகாரி மேஜையில் அடியில் 3 மாதம் வைக்கப்பட்ட அந்த வரைபடக் காகிதம் காற்றில் சுற்றி மிதக்கிறது... என்னவென்று மேலதிகாரி அதனை எடுத்து சோதிக்கையில்... பாபாவின் கனவு .. தான் வரைந்தது என ஒன்றுவிடாமல் அந்த சிறிய அதிகாரி விவரிக்க... பாபா ஆபத்பாந்தவன் சந்தேகமே இல்லை என உணர்ந்தபடி... பாபா சொல்லியவாறே அந்தந்த முக்கிய இடங்களில் ஜவான்களை நிறுத்துகிறார் மேலதிகாரி... அவர்கள் நெருங்கிவிடுகின்றனர்... அதற்கு முன் இந்திய விமானத் தடவாள ஜவான்கள் அலெர்ட்டாகி இருப்பதைப் பார்த்து... மிரள்கிறார்கள்... அதில் நம் ஜவான்கள் குறைவு தான்.. மிலிட்டரியில் அல்லாதோரும் நிற்க வைக்கப்பட்டிருந்தனர்... மொத்தம் 400 பேர்... அவர்கள் 1200 பேர்... இந்திய எதிர்தாக்குதலில் சுருள்கிறது பாகிஸ்தான்... பாபா நிற்க வைத்து இடம் எல்லாம் ஹாட் ஸ்பாட்... அவர்களால் முன்னேற முடியவே இல்லை... அதில் பாபாவே கனவில் சொல்லியவாறு யாருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை... பாகிஸ்தான் காலாட்படை மனரீதியாக மிரண்டு பின்வாங்குகிறது... இதனை 19 ஆண்டு கடந்து வி.கே.கோகாக் இந்த தாக்குதல் சம்பவத்தை அனைவரும் அறிய தெரிவிக்கிறார்! 

உலகின் இதயமாக விளங்கும் பாரதத்தை பாபாவே இமை போல் இன்றளவும் காப்பாற்றிக் கொண்டு வருகிறார்! காரணம் இந்தியா பல புனிதங்களையும் புனிதர்களையும் இன்றளவும் சுமந்து வரும் கங்கா தேசம்!


(ஆதாரம் : தீராத விளையாட்டு சாயி / பக்கம் : 83 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)


பாபா தனது திருச்செயலை முன்கூட்டிய சங்கல்பிக்கிறார்... அவரது இறை சங்கல்பம் அவர் சங்கல்பப்படியே ஒவ்வொன்றாய் நிகழ்கிறது... அது அது நிகழும் வரை பரம ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்திறது... அதுதான் சரியும் கூட... இன்று விதைத்து நாளை மனிதரால் ஆலமரத்தை காண இயலாது... இறைவன் நட்ட வீர்ய விதையோ யுகம் கடந்தும் வாழ்கிறது... அது முளை விடும் போது ஆச்சர்யப்படுகிறோம்... அது இலை விடும் போது ஆனந்தப்படுகிறோம்... அது மரமாகி நிழல் தரும் போது அதுவே வரவிருக்கும் ஸ்ரீ பிரேம சாயி பரமானந்தமாக முக்கிய முக்தியே எய்துகிறோம்!!


   பக்தியுடன் 

வைரபாரதி

1 கருத்து:

  1. ஸ்வாமியே நம்மை வாழ்விப்பதால்தான்..நாம் ஆனந்தமாக வாழ்கிறோம்.!!.எதிர்காலமும் அவரே நடத்தட்டும் என்று காத்திருப்போம்! நம் கையில் என்ன இருக்கிறது!

    பதிலளிநீக்கு