தலைப்பு

சனி, 7 ஜனவரி, 2023

NEW BOOK: சாயியுடன் ஒரு பயணம் (ஆன்மீக விழிப்புணர்வூட்டும் கனவுகளும், அனுபவங்களும்)

சாய்ராம் ! 

சாயியுடன் ஒரு பயணம் ஆன்மீக விழிப்புணர்வூட்டும் கனவுகளும், அனுபவங்களும்!


நூல் ஆசிரியர்: திரு S.R. ஹரிஹர கிருஷ்ணன்.

நூலை பற்றி அறிமுகம்: S.ரமேஷ்

Ex கன்வீனர் சேலம் சமிதி


திரு ஹரிஹர கிருஷ்ணன் புண்ணியங்கள் பல செய்த பாவங்கள் அற்ற உன்னத பிறவியாவார். நூலை வாசித்தால் இறுதியில் இதை நாம் உணர முடியும்


ஒருமுறை சுவாமியிடம் 

ஹரிஹர கிருஷ்ணன்: சுவாமி நான் செய்த எல்லா பாவங்களையும் தயவு செய்து மன்னித்து விடுங்கள் என்கிறார்.

சுவாமி:ஒரு முறை ராம நாமத்தை சொன்னாலே பாவங்கள் அழிந்து விடும் நீ எவ்வளவு முறை சொல்லி இருக்கிறாய். எங்கே வரும் பாவம்?. என்று கூறி ஆசிர்வதிக்கிறார்.


இந் நூலில் 27 அத்தியாயங்களில் பகவான் வழங்கிய 27 அனுபவங்களை மலர்களாக பகவானின் தாமரை பாதத்தில் சமர்ப்பித்துள்ளார்.


பொதுவாக சில மலர்கள் நறுமணம் மிக்கவை

சில மலர்கள் மருத்துவ குணமிக்கவை


சில மலர்கள் மட்டும் நறுமணமும் மருத்துவ குணமும் ஒருங்கே பெற்றிருக்கும்.


இவர் சமர்ப்பித்த மலர்கள் அனைத்தும் நறுமணமும் மருத்துவ குணமும் மிக்க ரோஜாவை போன்ற மலர்கள்.

என்றாலும் இவர் சமர்பித்த மலர்கள் என்றும் வாடா மலர்கள். யுகம் பல கடந்தும் மணம் பரப்பி நிற்கும்.


பகவானின் 

எங்கும் நிறை தன்மைையும்  

பிரமிப்பூட்டும் தெய்வீக லீலைகளும்

அளவிலா அன்பும் கருணையும் 


நூலெங்கும் பரவி வியாபித்துள்ள அதே வேளையில்

இந்த மானிட பக்தர்களின் மேன்மைக்காக நூலெங்கும் இனிய அமிர்தத்திற்கும் மேலான கருத்துக்களை மிக எளிமையாக பகவான் உணர்த்தியுள்ளார். அல்ல அவரே குழந்தைக்கு அமுதூட்டும் தாயாக ஊட்டி விட்டுள்ளார் என்பது நிச்சயம்.


ஆம்

தாயானவள் சாப்பிட மறுக்கும் குழந்தையை இடப்பக்கம் இடுப்பில் தூக்கி வைத்து கொள்வாள். குழந்தையை அணைத்துக் கொண்டிருக்கும் இடது கையில் அன்ன கிண்ணம் இருக்கும். சிறிது பிசைந்த அன்னத்தை வலது கையில் எடுத்துக்கொண்டு வாசல் பக்கம் வருவாள். அங்கு உள்ள செல்ல பிராணி நாயை அழைத்து சிறிது அன்னத்தை கொடுப்பாள். குழந்தை நாய்குட்டிக் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருக்கும் சமயம் பாரத்து, ஆ காமி என கூறி இது என் செல்லத்திற்கு என சிறிது அன்னத்தை விரைந்து ஊட்டி விடுவாள். குழந்தை தலையை பின்னால் இழுக்கும். தாய் குழந்தையின் வாயோடு அன்னத்தை வழிப்பாள். குழந்தை இதழில் ஒட்டி கொண்டிருக்கும் அன்னத்துடன் அழகாக சிணுங்கும். சுவாமி இந்த தாயை போல பல நல்ல செய்திகளை இந்நூலின் வாயிலாக நம் இதயத்திற்கு பதியவைக்கிறார்.



❤️உதாரணமாக நூலில் வரும் ஒரு நிகழ்வு:


2019 அக்டோபர் 27 தீபாவளி. முதல் நாள் ஹரிஹர கிருஷ்ணன் பண்டிகைக்காக புத்தாடைகளை (மனைவி, மகன், மகள், மருமகன், தனக்கு) வாங்கி பூஜை அறையில் சுவாமியின் பாதத்திற்கு கீழே வைத்திருந்தார். மறுநாள் தீபாவளி அன்று காலை புத்தாடைகளை மேஜை மேல் எடுத்து வைக்கலாம் என எடுக்கக் குனிந்த போது சுவாமி படத்திலிருந்து அழகான தமிழில் என்னுடைய துணி எங்கே? என்று கேட்கிறார். வெல வெலத்து போகிறார் ஹரிஹர கிருஷ்ணன். சுவாமி மேலும், நான் உன் அப்பா அம்மா இல்லையா? என்கிறார். ஹரிஹர கிருஷ்ணன் அழுது கொண்டே சுவாமி, எனது தாயான தந்தையான தெய்வமான உங்களுக்கு துணி எடுக்காமல் தீபாவளி கொண்டாடும் இந்த அறிவிலியை மன்னித்து விடுங்கள் என்றழுகிறார். சுவாமி மீண்டும் இல்லாதவர்களுக்கு கொடுத்தால் எனக்கு கொடுப்பதாகும் எனகிறார். குரல் முடிவடைகிறது. உடனடியாக புதுவேஷ்டி துணி வாங்கி சுவாமிக்கு அர்பணித்து பின்னர் சிறிது பணத்துடன் அத்துணிகளை குடியிருப்பு பாதுகாவலருக்கு வழங்கினார் ஹரிஹர கிருஷ்ணன். சாதரணமாக காவலருக்கு இதற்கு முன்பு சிறிது பணம் மட்டுமே கொடுப்பது வழக்கம் என்கிறார் ஹரி.


பிரேமையின் வடிவான நம் சுவாமி இந்த பக்தனுக்கு உரைத்தது நம் எல்லோருக்கும் பொருந்தும். ஏன் எனில் நம் அனைவருக்கும் தாய் தந்தை அவரே. இது போன்ற உன்னத நிகழ்வுகள் இந்த புத்தகம் முழுவதும் நிறைந்து மனதிற்கு மகிழ்வூட்டுகின்றன




இந்த அற்புதமான தெய்வீக நூலை பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்: 9566478943 


ஜெய்சாய்ராம்.


நேற்றைய தினம் (6.3.2023) சுவாமியின் பிரியத்திற்குரிய அன்பு பக்தையும், நமது போற்றுதலுக்கும் மதிப்பிற்கும் உரிய அன்பு சகோதரி கவிஞர் பொன்மணி அவர்கள் திரு ஹரிஹர கிருஷ்ணன் அவர்களின் சாயுடன் ஒரு பயணம் நூலுக்கு பொன்னால் மணி செய்து செந்தமிழ் நூல்கோர்த்து அற்புதமாக அறிமுக உரை வழங்கியிருந்தார். அவ்வளவு அருமை .அவருக்கு மிகவும் நன்றி.


Total Number of Pages: 297



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக