தலைப்பு

திங்கள், 14 மார்ச், 2022

அறுவை சிகிச்சை அறையில் தோன்றி டாக்டர்களையே வியக்க வைத்த பாபா! - இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி


01-03-1986ஆம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் (ஹைதராபாத் பதிப்பு) வெளிவந்த சுவாமி நிகழ்த்திய அதிஅற்புத மகிமை குறித்தான வியப்பு மிகு செய்தி இதோ...

திருப்பதியில் உள்ள தனியார்
நர்சிங் ஹோம் ஒன்றின் அறுவை சிகிச்சைக் கூடத்தில் புட்டபர்த்தி சாயிபாபா திடீரெனத்தோன்றினார்.
திருப்பதியில் உள்ள சாயிராம் தெருவில் அமைந்துள்ளது, டாக்டர் வித்யாசாகர் 
அவர்களது மருத்துவமனை. இங்கு அறுவை சிகிச்சைக்காக , ஸ்டேட் பாங்க் அலுவலர் வெங்கடேசன்(45) அவர்களின் மனைவி அனுமதிக்கப்பட்டு, 28.02.1986
வியாழக்கிழமையன்று ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அப்போது ஆபரேஷன் தியேட்டரில் திடீரெனத் தோன்றி, டாக்டர்களை வியப்பில் ஆழ்த்தினார் ஸ்ரீ சத்ய சாயி பாபா.

இந்த செய்தி காட்டுத் தீயாக பரவவே
பாபாவின் பக்தர்கள், அந்த அதிசய நிகழ்வை கேட்பதற்காக மருத்துவ மனையில் குவிய ஆரம்பித்தனர்.


இதுபற்றி அந்த செய்திக் குறிப்பில் மேலும் கூறியுள்ளதாவது..

திரு. வெங்கடேசன் குடும்பத்தினர் அனைவரும் பாபாவின் தீவிர பக்தர்கள்.
திருமதி. வெங்கடேசன் ஒரு நாட்பட்ட நோயால் பீடிக்கப்பட்ட நிலையில், டாக்டர்களால் அறுவை சிகிச்சைக்குப்
பரிந்துரைக்கப்பட்டார். அவர்கள் பாபாவின் தரிசனம் காண புட்டபர்த்தி சென்றபோது, பாபா கூறியதாவது
"கவலைப்படாதே. ஆபரேஷன் நாளன்று நான் அங்கு வந்து , அவளருகில் நின்று
ஆபரேஷன் வெற்றிகரமாக நிகழ ஆசீர்வதிப்பேன்."


அந்த ஆபரேஷன் ஒரு வியாழக்கிழமை அன்று முடிவு செய்யப்பட்டு, டாக்டர். லக்ஷ்மிநாராயணா மற்றும் வித்யாசாகர் குழுவினர் ஆபரேஷன் ஆரம்பிக்க இருந்த நிலையில், ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்கள் திடீரென ஆபரேஷன் தியேட்டரில் தோன்றினார். இதைக் கண்டு வியந்த டாக்டர்கள் அவரை அமரும்படி வேண்டிக் 
கேட்டுக் கொண்டனர். ஆனால் பாபா அந்த பிணியாளரை ஆசீர்வதித்துவிட்டு
சட்டென்று மறைந்துவிட்டார்.இந் நிகழ்ச்சியால் மனம் வியந்த டாக்டர்கள் 
உடனே இந்த விஷயத்தை வெங்கடேசன் அவர்களின் குடும்பத்தினருக்கு அறிவித்தனர். இச்சேதி கேட்டு கருணாகரன் என்ற (T.T.D. அலுவலர்) சாயிபக்தரும் , மற்றும் நூற்றுக் கணக்கான பக்தர்களும் மருத்துவ மனையின் முன் கூடி இந்த அற்புதத்தை அனைவருக்கும் கூறி வியந்தனர்.


🌻 இன்றளவும் பாபா 24/7 என சதா இயங்கிக் கொண்டே இருக்கிறார்... பேராற்றல் இறைவனான பாபாவால் நிகழ்த்த முடியாத தெய்வத் திருச்செய்கை எதுவுமே இல்லை... தன்னிடம் முழுமையாக சரணாகதி அடைந்து விட்ட தனது பக்தர்க்கு ஒன்றெனில் அவர்கள் அழைக்காத போதும் கூட ஓடோடி வருபவர்.. இதைப் போல் அதற்கான உதாரணங்கள் ஏராளம் ஏராளம்! பாபா மேல் முழுமையான நம்பிக்கை... பூரணமான சரணாகதி.. அது போதும்.. அதுவே நமக்கான ஒரே வாழ்க்கை! அவ்வாழ்க்கையே பிறவாமை எனும் இலக்கை அடையும்... அதுவே கோடி கேள்விகளுக்கான விடையும்...! 🌻


 தமிழில் தொகுத்தளித்தவர்: குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக