நமது சுவாமி தமது ஸ்தூல ஸரீரத்தை விடுத்து பக்தர்களின் நெஞ்சமென்னும் சன்னதியில் நிரந்தரமாக குடிகொண்ட தினம் ஏப்ரல் 24; இன்று தொடங்கி சரியாக 30 நாட்கள் உள்ளன. இந்த 30 நாட்களை ஸ்ரீ சத்யசாயி சாதனா என்ற விதமாக தெய்வீகமாக நடத்திச் சென்று ஸ்ரீ சத்யசாயி ஆராதனை மகோற்சவம் தினத்தில் (ஏப்ரல் 24, ஞாயிற்றுக்கிழமை) சுவாமியின் பாதத்தில் நம் பக்தியினைச் சமர்ப்பிக்கலாம்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மறைவுக்குப்பின்னர் அக்குலத்திற்கு ஏற்பட்ட வேதனைகளோ... இயேசு பிரானின் மறைவுக்குப்பின்னர் அவரின் சீடர்கள் அனுபவித்த துயரங்களோ... வார்த்தைகளில் வடிக்கமுடியதவை. ஆகையினால் நம் பகவானின் ஸ்தூல சரீர மறைவுக்குப் பின்னர் சிலருக்கு சில குழப்பங்களும் வருத்தங்களும் ஏற்பட்டிருக்குமாயின் அது புரிந்துகொள்ளக் கூடியவையே, வருத்தம் வேண்டாம்.
மறுக்கமுடியாத உண்மை என்னவென்றால்.... எந்த வித்தியாசமும் துளியளவும் இன்றி பகவானின் ப்ரேமையை, ஆனந்தத்தை இன்றளவும் பக்தர்கள் தங்களுக்குள் அனுபவித்துக் கொண்டுதான் உள்ளார்கள்.
அந்த ப்ரேமையின் ஆனந்தத்தை கொஞ்சம் கொஞ்சமாய்ப் பெருகச்செய்ய இந்த 30 நாட்களும்; குறைந்த பட்சம் ஒரு தெய்வீக சாதனா செய்ய சங்கல்பம் எடுத்துக்கொண்டு பக்தி சிரத்தையுடன் செய்து ஏப்ரல் 24 தினத்தன்று ஆராதனை மகோற்சவம் கொண்டாடி சமர்ப்பிப்போம்.
தங்கள் பஜனா மண்டலி (அல்லது) சமிதியை அணுகி இதன் தொடர்பான சாதனையில் கலந்து கொள்ளவும். அன்றாடம் ஒன்றுகூடி கூட்டு ஆன்மீக சாதனாக்களாக செய்ய இயலாதவர்கள் தனிப்பட்ட (அ ) குடும்ப சாதனாவாகவும் செய்யலாம். தயவுகூர்ந்து இந்த புனிதமான 30 நாட்களை நமது ஆன்ம முன்னேற்றத்திற்கான அரும்பெரும் சந்தர்ப்பமாக கண்டுகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
ஜெய் சாயிராம் 🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக