தலைப்பு

வியாழன், 3 மார்ச், 2022

ஹிரண்யகர்ப லிங்கம் தோன்றிய வரலாறும் -அதனால் நீடிக்கும் மகிமை சிகிச்சையும்!


பஞ்ச பூதத்தால் உருவாக்கப்படும் எந்த ஒரு பொருளின் அடிப்படை உருவமும் லிங்கம் என்ற நீண்ட உருளை வடிவமாகும். கோழி முட்டையின் வடிவம், மழைத்துளியின் வடிவம், நம் சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்களின் வடிவம், தாவரத்தின் விதை வடிவம் என எந்த ஒரு பொருளும் அடிப்படையில் கோள வடிவமாக இருக்கும். மனித உடலின் அடிப்படையாக செல் இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஒரு செல்லின் வடிவமும் அதன் உட்கருவின் வடிவமும் நீண்ட கோள வடிவமே....


1991ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா சிருஷ்டி செய்த தங்கத்தினாலான முட்டை வடிவ கோளத்தில் பல்வேறுபட்ட பெயர்கள் சின்னங்கள் மற்றும் குறியீடுகளால் செரிவுற்று இருந்தது. பாபா அதை ஹிரண்யகர்ப லிங்கம் (தங்கமயமான இதயத்தை கொண்ட லிங்கம் அதாவது ஆன்மீக உச்ச நிலையின் வெளிப்பாடு) என்று கூறி அதில் அண்ட சராசரமும் மிகவும் நுண்ணியமாக இருக்கிறது என்று கூறினார்... 



இது மும்மூர்த்திகளான பிரம்மா விஷ்ணு மற்றும் மகேஸ்வரர் என்னும் கடவுள் உருவங்களின் வெளிப்பாடு (படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் புரியும் கடவுளர்) என்பதோடு மட்டுமல்லாமல் முத்து மாலைக்குள் செல்லும் நூலைப் போன்று ஆன்மீக உணர்வின் வெளிப்பாடாகிய இதை ஆன்மீக இதயம் என்றும் விவரித்தார். மேலும் புட்டபர்த்தியில் இருக்கும் பாரம்பரியமான ஆன்மீக அருங்காட்சியகத்தில் லிங்கம் என்பது பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கும் விதை என்ற பாபாவின் மேற்கோளை இன்றும் நாம் காணலாம்....


பாபா இந்த லிங்கத்தை சிருஷ்டி செய்த பிறகு அதை தன் கரத்தில் பிடித்து மக்களிடம் காண்பித்தவாரே உங்களில் யார் யாருக்கெல்லாம் இப்புகைப்படம் கிடைக்கிறதோ அவர்கள் அனைவரும் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். அவர்கள் அனைவரும் தத்தம் இல்லங்களில் புனிதமான இப்படத்தை கண்டிப்பாக பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். என்னுடைய தெய்வீக சக்தியும் அற்புதமும் இப் படத்தின் மூலமாக நிச்சயம் வெளிப்படும் என்று கூறினார். இதற்கு முன்பு வரை யாருமே பாபா தன்னுடைய எந்தவொரு புகைப் படத்தைப் பற்றியும் இவ்வாறு கூறியதை கேட்டதே கிடையாது. 

மருத்துவர் திரு. துரைசிங்கம் அவர்களை நான் இதுவரையில் பார்த்தது கிடையாது. இப் புகைப்படத்தை எனக்கு அவர் இங்கிலாந்திலிருந்து அனுப்பி வைத்தார். அப்படத்தோடு இதைப் பற்றி நாலரை பக்க அனுபவம் ஒன்றையும் தன் கடிதத்தில் எழுதி அனுப்பியிருந்தார்.

பாபா த்ரயீ பிருந்தாவனத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த கோடைக் கால பயிற்சி முகாமிற்க்காக அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் நின்று கொண்டிருந்த போது தனது சங்கல்ப மாத்திரத்தில் இந்த ஸ்வர்ண லிங்கத்தை ஸ்ருஷ்டி செய்தார்... அப்போது பேராசிரியர் சம்பத் அவர்களிடம் இந்த லிங்கத்தை சிறிது நேரம் கையில் பத்திரமாக வைத்திருக்குமாறு பாபா கூறினார். ஏனெனில் அப்போது தான் அவரால் மாணவர்களின் கலை நிகழ்ச்சியை காண முடியும். பேராசிரியர் சம்பத் தென்னிந்தியாவிலுள்ள புட்டபர்த்தியின் சத்ய சாய் மேல்நிலைக் கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் ஆவார். பாபாவின் கட்டளையைக் கேட்ட அவர் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு மெய் சிலிர்த்து நின்றார்.

பாபா தந்த ஸ்வர்ண லிங்கத்தை தன்னிடம் பத்திரமாக வைத்திருந்த நேரம் முழுவதும் அவருள் ஒருவிதமான கதகதப்பும் அத்துடன் தெய்வீக பரவச நிலையையும் அனுபவித்தார்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சி முடிந்த பிறகு பேராசிரியர் சம்பத்திடம் நம் சுவாமி நகைச் சுவையாகப் பேசிக் கொண்டே அவரின் சட்டைப் பையை ஏதோ அங்கு ஒட்டிக் கொண்டிருந்த தூசியை துடைப்பது போல லேசாகத் தொட்டார். பிறகு அவர்கள் இருவரும் மகிழ்வுந்தில் ஒன்றாக பயணித்தனர். அப்போது பாபா பேராசிரியர் சம்பத்திடம் தான் அவரிடம் கொடுத்து பத்திரமாக வைக்கச் சொல்லியிருந்த ஸ்வர்ண லிங்கத்தைப் பற்றி கேட்டார். உடனே பேராசிரியர் சம்பத் அதை அவருடைய சட்டைப்பை, பேன்ட் மற்றும் மகிழ்வுந்தில் அமரும் இருக்கை என அனைத்து இடங்களிலும் தேடினார். ஆனால் அவரால் அந்த ஸ்வர்ண லிங்கத்தை கண்டு பிடிக்கவே முடியவில்லை. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பாபா கடைசியில் மிகவும் பலமாக சிரித்த வண்ணம் 'அந்த ஸ்வர்ண லிங்கத்தை எங்கிருந்து வரவழைத்தேனோ அந்த இடத்திற்கே திருப்பி அனுப்பி விட்டேன்' என்றார்.


'ஓம்' என்ற பேரதிர்வலைகளோடு தன் சங்கல்பப்படியே சுவாமி இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டி செய்தார் எனவும்... பேரண்டத்தின் மாதிரி வடிவத்தை.. பிரபஞ்சத்தின் விதையை சுவாமி ஹிரண்ய கர்ப்ப லிங்க வடிவமாய் சிருஷ்டித்தது மகிமைக்குரியது. சுவாமியின் பரப்பிரம்ம பெருஞ்சக்தியை முழுதும் தாங்கும் வண்ணம் ஹிரண்ய கர்ப்ப லிங்கத்தை சுவாமி சுட்டிக் காட்டும் இந்தப் புகைப்படம் திகழ்ந்து வருகிறது.



ஜூன் 7. 1991 ஆம் ஆண்டு சுவாமி தரிசனத்துக்காக நடந்து வரும் டாக்டர். துரைசிங்கம் சாலை ஓரத்தில் ஒரு குழந்தை இறந்து கிடப்பதைப் பார்க்கிறார். அந்த இறந்த சடலத்தின் அருகே அதன் தாய் அழுத படி அமர்ந்திருக்கிறார். சாலை விபத்தால் அந்தக் குழந்தை தூக்கி எறியப்பட்டிருக்கிறது. சடலத்தைப் பார்த்து அதன் அருகே சென்ற டாக்டர் .. ஹிரண்ய கர்ப்ப லிங்கம் தாங்கிய அந்தப் புகைப்படத்தை சடலத்தின் மேல் செலுத்தி ஓம் ஸ்ரீ சாயி ராம் ஓதி...சுவாமியிடம் பிரார்த்தனை செய்கிறார். அந்த சடலம் புத்துயிர் பெறுகிறது.. இதை அடுத்த நாள் நேர்காணலில் சுவாமி டாக்டர் துரைசிங்கம் தனது நண்பரோடு வர நிகழ்ந்த சம்பவத்தை தானே உறுதி செய்து தானே தரிசனத்திற்கு சென்ற டாக்டரை தடுத்து அந்த சடலத்தை ஹிரண்ய லிங்க புகைப்படத்தால் உயிர்ப்பெற வைக்கும் சிந்தனையை ஏற்படுத்தியதாக விளக்கம் அளித்தார்.

ஆசிரியர் கோனி ஷா

1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம். ஆசிரியர் கோனி ஷா அமெரிக்கா டெக்ஸாஸ் 'ஸில் பேசுகிற போது ஹிரண்ய கர்ப்ப லிங்க புகைப்படத்தின் பேராற்றலை விளக்குகிறார். அதில் பலதரப்பட்ட நோயாளிகள் இந்தப் புகைப்படத்தால் ஆரோக்கியம் பெற்றிருப்பதாகவும்.. அந்தப் புகைப்படம் தடவியபடியே குணமடைந்ததாகவும் பல சான்றுகளும் பல அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார். தலைவலி.. கிட்னி மில் கல் போன்ற உபாதைகளின் வலிகளை இந்தப் புகைப்பட ஸ்பரிசம் பெறுவதன் வாயிலாக ஆரோக்கியம் பெற்றதாகப் பகிர்ந்திருக்கிறார்.

1995ம் ஆண்டு டாக்டர் ஜான் டேவிஸ் என்பவர் தனது ஜனவரி மாத சுவாமியுடனான நேர்காணலில் டாக்டர் ஜானை ராம ராம என உச்சரித்து அவரிடம் உள்ள மெர்க்குரி லிங்கத்தின் மீது வட்ட வடிவத்தில் ஹிரண்ய கர்ப்ப லிங்க புகைப்படத்தை ஒன்பது முறை தடவியபடி செய்தால் அந்த மெர்க்குரி லிங்கம் குணமளிக்கும் ஆற்றலைப் பெற்றுவிடும் எனச் சொல்லி அவ்வாறே டாக்டர் செய்ய பல அற்புதங்களை நேருக்கு நேர் கண்டிருக்கிறார். உன்னுடைய கை குணமளிக்கும் கை (healing hand) என அந்த செய்முறையை செய்தவுடன் சுவாமி டாக்டருக்கு அனுகிரகம் புரிந்திருக்கிறார்.


ஓம் ப்ரேமாத்மனாய வித்மஹே ஹிரண்யகர்பாய தீமஹி தன்னோ சத்ய ப்ரசோதயாத்


🌻 தெய்வீக சக்தியால் செய்ய முடியாத காரியம் எதுவுமே கிடையாது. பூமியை விண்ணாகவும்...விண்ணைப் பூமியாகவும் அவை ஒன்றை வேறொன்றாகவும் மாற்ற இயலும். இதை சந்தேகப்படுவர்கள் மிகவும் பலவீனமான நிலையில் சர்வ வியாபியாக இருக்கும் ஒன்றின் மாபெரும் கம்பீரத்தை புரிந்து கொள்ள இயலாத நிலையில் இருப்பதனை நிரூபணம் செய்கிறது. 🌻


ஆதாரம்: From: Connie Shaw's Book: Wake Up Laughing: My Miraculous Life With Sai Baba

தமிழாக்கம் : திருமதி. வரலட்சுமி, குரோம்பேட்டை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக