தலைப்பு

வெள்ளி, 1 அக்டோபர், 2021

அதிநவீன இதயம் சார்ந்த நோய் தடுப்பு / உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு!

பகவானின் தெய்வீக சங்கல்பத்தால், இன்று காலை (14.10.2021) இதய நோயின் போது உயிர் காக்கும் அதிநவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் ஒன்று மக்களின் பயன்பாட்டிற்கு அற்பணிக்கப்பட்டது. ஸ்ரீ சத்ய சாயி மத்திய அறக்கட்டளையின் அறங்காவலர் திரு. R. J. ரத்னாகர், பிரசாந்தி நிலைய சத்ய சாயி அதிநவீன மருத்துவமனை இயக்குனர் Dr. குருமூர்த்தி மற்றும் சத்ய சாயி பொது மருத்துவமனை இயக்குனர் Dr. நரசிம்மன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  


சத்ய சாயி மத்திய அறக்கட்டளை வாங்கி உள்ள இந்த அதிநவீன அம்புலன்ஸில் இதய நோயின் போது உயிர் காக்கும் நடமாடும் மருத்துவ வசதி உள்ளது. வாகனம் முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டது. நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு இடையே பாதுகாப்பாய் அழைத்து செல்ல இது மிகவும் உதவியாக இருக்கும். 


மேலும் தகவல்களுக்கும், புகைப்படங்களுக்கும் -https://m.facebook.com/story.php?story_fbid=447196280101550&id=100044335462869
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக