தலைப்பு

வெள்ளி, 8 அக்டோபர், 2021

🇮🇹 இத்தாலிய நாட்டின் முன்னாள் பிரதமா் பெட்டினோ கிராக்ஸியின் புட்டபர்த்தி விஜயம்.


🌼 நான் எனது ஆன்மிக தலைவரை சந்தித்து அவரது ஆசிகளை பெறுவதற்காக வந்திருக்கிறேன் இத்தாலிய நாட்டின் பிரதமா் பெட்டினோ கிராக்ஸி... 

Bettino Craxi was an Italian politician, leader of the Italian Socialist Party from 1976 to 1993 and the 45th prime minister of Italy from 1983 to 1987. He was the first Italian Socialist Party member to become prime minister and the third from a socialist party to hold the office. He led the third-longest government in the Italian Republic and he is considered one of the most powerful and prominent politicians of the so-called First Republic.

சில ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியா நாட்டின் பிரதமா்  திரு.பெட்டினோ கிராக்ஸி, அவரது மனைவி திருமதி அன்னா கிராக்ஸி மற்றும் அவரது சகோதரா் திரு. அந்தோனியா கிராக்ஸி ஆகியோர் இந்தியாவுக்கு வருகை தந்தனர். அப்போதைய பிரதமா் திரு.ராஜீவ் காந்தி இவரது வருகை குறித்து கவலையில் ஆழ்ந்தாா். ஏனெனில் அவா் இத்தாலிய பிரதமரை இந்தியாவுக்கு அழைக்கவில்லை.ஒரு நாட்டின் பிரதமா் மற்றொரு நாட்டின் பிரதமரை அழைக்காதபோது மற்ற நாட்டினுள் நுழையலாகாது  என்பது பலநாடுகளிலும் கடைபிடிக்கதக்க சடங்கு முறையும்,மரியாதை முறைக்குரிய சம்பிரதாயமாகும்.  ஆனால் இங்கு இந்திய நாடு அழைக்காது இத்தாலிய பிரதமர் வருகை புரிந்திருந்தாா். மேலும் எந்த நாட்டின் பிரதமா்  பாரதத்திற்கு வருகை புரிந்தாலும் முதலில் டெல்லிக்கே வரவேண்டும்.ஆனால் இத்தாலிய பிரதமரோ நேரடியாக பெங்களூா் சென்றுவிட்டாா். திரு. ராஜீவ் காந்தி அவருடன் தொலைபேசியில் தொடா்புகொண்டு நான் அழையாது எவ்வாறு இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளீா்கள் என விசாரித்தாா். தயவு செய்து உங்களது நிகழ்ச்சி நிரல் என்ன என்பது பற்றி அறிய விரும்புகிறேன் என்றாா்.இத்தாலிய நாட்டு பிரதமா் இவ்வாறு பதிலுரைத்தாா். "நான் எந்தவிதமான அரசியல் காணங்களுக்காகவோ அல்லது பொருளாதார நடவடிக்கை காரணமாகவோ வரவில்லை.நான் எனது ஆன்மிக தலைவரை சந்தித்து அவரது ஆசிகள் பெறுவதற்கே. நான் புட்டபா்த்தி சென்று பகவான் ஶ்ரீ சத்திய சாயி பாபாவை சந்திக்கவே" என பதிலுரைத்தாா்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக