தலைப்பு

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

ரோடாமேவின் மார்பக புற்றுநோயை குணமாக்கிய ஸ்ரீ சத்யசாயி விபூதி!

எதன் மேலும் நம்பிக்கையே இல்லாத ஒரு ஆங்கிலேயப் பெண்மணியின் மார்பக புற்றுநோயை Man of Miracles புத்தக ஆசிரியர் மரஃபெட் அவர்களின் மனைவியை கருவியாக பயன்படுத்தி சுவாமி எவ்வாறு குணமாக்கினார் எனும் சுவாரஸ்ய அனுபவப் பதிவு இது.. இதில் சுவாமியை பூரணமாய் உணர்ந்த மர்ஃபெட்டின் நூதன சுவாமி அனுபவமும் இடம்பெறுகிறது இதோ...

வெளிநாட்டு பக்தர்களில் நூலாசிரியர் மர்ஃபெட் முக்கியமானவர். வசிப்பிடம் தான் வேறு வேறாக ஒவ்வொருவருக்கும் இருக்கிறதே தவிர சுவாமி தன் பக்தர்கள் அனைவரையும் சமமாகவே பார்க்கிறார். சுவாமிக்கு ஏழை/ பணக்காரன்.. ஜாதி / இன/ மொழி/ மதம்...  புண்ணியவான் பாவி என பேதமே இல்லை... ஆகவே தான் சுவாமி இறைவன். இந்த இறை குணங்களை நாம் வளர்த்துக் கொள்வதே நாம் சுவாமி பக்தர்களாக இருப்பதற்கான ஒரே  சாமுத்ரிகா லட்சணம்.

இவ்வாறு நடைபோடுகின்ற சன்மார்க்கத்தில் மர்ஃபெட்டும் வந்து சேர்ந்திருந்த காலம் அது!  

ஒருமுறை மர்ஃபெட் சுவாமியோடு பேசிக் கொண்டிருந்தபோது அவர் பிறந்த ஆண்டே சுவாமி கேட்க.. மர்ஃபெட்டோ "1906 ஆம் ஆண்டு.. ஸான் பிரான்ஸிஸ்கோ "என்கிறார். சுவாமி சிரித்துக் கொண்டே தங்க நாணயம் ஒன்றை சிருஷ்டித்து தருகிறார்... அது பத்து டாலர் நாணயம். நாணய சேகரிப்பாளரிடம் கூட இல்லாதது. 1906 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்திருக்கிறது. கிடைப்பதே அரிது. அப்போது அமெரிக்காவில் 13 மாகாணங்கள் தான் இருந்தன.. அதை எடுத்துக் காட்டுகின்ற வகையில் 13 நட்சத்திரங்கள் அந்த நாணயங்கள் இருக்கின்றன.. அமெரிக்க சுதந்திர தேவியின் முகமும் அதில் இருந்தது. 

இதை மர்ஃபெட் அவரது நண்பரான நாணய சேகரிப்பாளரிடம் காட்டுகிறார்.. அவர் இதை உற்றுப் பார்த்து "பார் இதில் S என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருக்கிறது.. இது சான் பிரான்ஸிஸ்கோ மாகாணத்தில் வெளியிட்டிருக்க வேண்டும். எத்தனை விலை கொடுத்தாலும் கிடைக்காது.." என்கிறார். மர்ஃபெட்'டும் "இதை எந்த விலைக்கு யார் கேட்டாலும் கொடுக்க மாட்டேன்" என பதில் சொல்கிறார்.


வேற்று கிரகத்தில் இருக்கின்ற பொருட்களை சிருஷ்டி செய்து தருவது கூட சுவாமிக்கு ஒரு பெரிய விஷயம் இல்லாத போது... 1906 ல் அச்சிடப்பட்ட நாணயத்தை சிருஷ்டித்து தருவதொன்றும் பெரிய விஷயமில்லை தான். இந்த சிருஷ்டிக்குப் பின் மறைந்திருப்பது சுவாமியின்  கருணையே.. அந்த பேரன்பை மர்ஃபெட் உணர்கிறார். தினந்தோறும் இந்த இயற்கையை தன் கருவியாக வைத்து சுவாமி அதிசயங்களை நிகழ்த்திய வண்ணமே இருக்கிறார். நம் எல்லா நிகழ்வுகளிலும் சுவாமியின் கருணையே மேலோங்கி இருக்கிறது!

இந்த கருணையின் நீட்சியாக ஒரு சிகிச்சை சம்பவம். மர்ஃபெட் தம்பதியர் ஆஸ்திரேலியாவில் குடியிருந்த சமயம். சிட்னி நகரிலிருந்து 50 மைல் தள்ளி இருந்தார்கள். அங்கு மர்ஃபெட் மனைவி ஐரிஸ் சுவாமி பஜன் நிகழ்த்துவார். ஒருமுறை ஆஸ்திரேலிய பெண்மணியான ரோடாமே ஐரிஸ் இடமிருந்து பிரசாதம் வாங்கிக் கொள்கிறார். அவருக்கு கடவுள் பக்தியே இருக்கவில்லை.. வேகமாக ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுவார்.. மது புகை என வெளுத்து வாங்குவார்.இப்படி மாடர்ன் என்று உலகத்தால் சொல்லப்படுகிற பெண்மணி...  பிறகு ஏன் சுவாமி பிரசாதம் பெற்றார்?  என கேள்வி எழலாம்... தான் தற்செயலாக வந்ததாகவும்...ஐரிசை பார்த்ததாகவும்... அப்போதும் மனதின் பெரும் சுமை நீங்கியது போன்ற உணர்வால் பிரசாதம் பெற்றுக் கொண்டதாகவும்... என அதற்கு அவரே இவ்வாறு பதில் சொல்கிறார்... 

மந்திர சிகிச்சை உங்களுக்கு தெரியும் எனக் கேள்விப்பட்டேன் அது உண்மை தானா? என கேட்கிறார் ரோடாமே. ஐரிஸ் திகைக்கிறார். அப்படி யாருக்கும் தான் சிகிச்சை அளித்ததில்லை என வெளிப்படையாக கூறுகிறார். ஆனால் சுவாமியை விடாப்பிடியாக பக்தி செய்து வருபவர்களை சுவாமி நல்ல வண்ணம் காப்பாற்றுவார் என அறிந்திருந்த ஐரிஸ் என்ன விஷயம் என தெளிவாகக் கேட்கிறார்.. தனக்கு ஒரு மார்பகத்தில் கட்டி ஒன்று வந்து அது புற்றுநோய் என மருத்துவர்கள் தெரிவித்ததையும்.. கீமோ தெரப்பி செய்து கொள்ள விருப்பமில்லை எனவும்.. அதில் பின்விளைவுகளும் அதிகம் எனவும் ஐரிஸிடம் தெரிவிக்க... ஒரு குழந்தைக்கு தாயும் 40 வயதுமான ரோடாமேவிடம் நீங்கள் உயிர் வாழ விரும்பவில்லையா? என ஐரிஸ் கேட்க..


நிச்சயம் விரும்புகிறேன் ஆனால் அறுவை சிகிச்சை வேண்டாம்.. உங்கள் பாபா என்னை காப்பாற்றுவார்.. எனக்கு நீங்களே சிகிச்சை அளியுங்கள்! என்கிறார் ரோடாமே. சுவாமி மேல் எவ்வளவு நம்பிக்கை பாருங்கள்!! அதுவரை அவர்கள் சுவாமியை வணங்கியது கூட இல்லை... சுவாமியின் சரிதம் கூட தெரியாது. அந்த பஜனையில் அவர்களது முதல் விஜயம்.. அதில் வீசிக் கொண்டிருந்த சுவாமி அதிர்வலைகள்.. அதனால் எழுந்த மனமாற்றம்... இப்படி அவர்கள் உள்ளார்ந்து பேசுவதற்கு அதுவே காரணமாகிவிடுகிறது! 

 மனிதர்கள் மருத்துவர்கள் மேலும் தங்களின் மகன்களின் மேலும் வைத்திருக்கும் நம்பிக்கையே அதிகம். கடவுளின் மேல் சந்தேகம் கலந்த நம்பிக்கையே வைத்திருக்கிறார்கள். வாழ்வில் அனுபவம் ஏற்பட.. அனுபவம் மனப் பக்குவத்தை ஏற்படுத்த மருத்துவர்களோ மகன்களோ யாரும் நிரந்தரமில்லை கடவுளே கதி என உணரும் நொடியில் பக்தி ஆழமாகிறது... 


ஐரிஸ் சுவாமியின் மேல் பாரத்தை போட்டுவிட்டு நம்பிக்கையுடன் நாத்திகர் என்பதால் ரோடாமே இதுவரை பயன்படுத்தாத சிலுவையை சுவாமி படத்தில் அணிவித்து பூஜை செய்யத் தொடங்குகிறார்... தினமும் சுவாமியின் விபூதி பிரசாதம் எடுத்து அவர்களின் மார்புப் பகுதியில் தடவிவிடுகிறார்... நான்கு வாரங்கள் ஆயின.... அந்த கட்டி இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடுகிறது.

    ரோடாமேவின் வாழ்வில் புதிய ஒளி வீசுகிறது.. சுவாமி மேலான நம்பிக்கை அவருக்கு ஆழமாகிறது! மாடர்ன் என சொல்லப்படுகிற ஆரோக்கியக் கேடான விஷயங்களை விட்டு ஒதுங்கி விடுகிறார்.. அதற்குப் பிறகு சுவாமியின் தீவிர பக்தையாக பரிமளிக்கிறார்!!

(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் : 176/ ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்)


நிலையில்லாத நபர்களிடம்/ பொருட்களிடம் வைக்கின்ற நம்பிக்கையும் பற்றும் தான் மனிதன் படுகின்ற துயரங்களுக்கு எல்லாம் ஒரே காரணம். தகுந்த ஆன்மீக சாதனை வழியாகவே இந்த மூட நம்பிக்கையை தகர்க்க முடியும்.. அதற்கு சுவாமி நிச்சயம் அருள்வார். மனிதனை பரிபக்குவமாக பரிணமிக்க வைப்பதற்கே சாயி அவதாரங்கள் ஒன்று இரண்டு மூன்று என புண்ணிய பூமியில் நிகழ்வதற்கான காரணமே!!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக