தலைப்பு

புதன், 20 அக்டோபர், 2021

நான் உங்கள் சத்யா அல்ல நான் சாயிபாபா!


1940 ம் ஆண்டு, சாயி அவதாரத்தின் ஒரு மைல் கல் . இந்த ஆண்டுதான் சத்யா, தாம் சாயிபாபா என்பதைத் தொடர் நிகழ்வுகள் பல நிகழ்த்தி, அக்டோபர் 20ம் அதை உலகிற்கு அறிவித்தார். இந்நாள் உலகின் சரித்திரத்தில் ஒரு பொன் நாளாக, சாயி பக்தர்களின் திருநாளாக பொலிகிறது. பதிவின் சில நிகழ்வுகள், சத்யம் சிவம், சுந்தரம்( தமிழ்) புத்தகத்தில் உள்ள நிகழுவுகளின் ஆதாரத்தோடு பகிரப்படுகிறது.


🌹பூர்ணா அவதார சத்யசாயி ராமா:

1940ன் தொடக்கம். சத்யா தான் சாயி அவதாரம் என்பதை உலகிற்கு அறிவிக்க திருவுளம் கொண்டபோது, படப்படியாக சில நிகழ்வுகளை அரங்கேற்றம் செய்தார். கருந்தேள் கொட்டிய நிகழ்ச்சி, அதற்கான நிவாரணங்களை பெற்றோர் மேற்கொண்ட நிகழ்ச்சி இவைகள் கடந்தபின், அந்த ஆண்டு மே மாதம் 23 ம் நாள், சத்யா வழக்கம்போல் படுக்கையை விட்டு எழுந்தார். வீட்டிலுள்ளவர்களை அழைத்து தமது தெய்வீக சக்தியால் கற்கண்டும் மலர்களும் சிருஷ்டித்து கொடுத்தார்(பக்கம் 57). கோபத்துடன் இதைப் பார்த்த தந்தை வெங்கப்பராஜு , கையில் பிரம்புடன் உரத்த குரலில் கேட்டார் "நீ யார்,கடவுளா, பிசாசா, பைத்தியமா?"

"நான் சாயிபாபா" என்று வெகு நாளாய் சொல்லாது வைத்திருந்த உண்மையை அன்று பாபா தமது தந்தையிடம் கூறினார்.(பக்கம் 58). அதன்பின் ஒரு வியாழக்கிழமை, ஒரு கிராமத்தான் அவர் சாயிபாபா என்று நிரூபிக்குமாறு கூற, கைகளில் மல்லிகையை எடுத்து வீச அது, சாயிபாபா என்ன பெயராக கீழே விழுந்து பரிமளித்தது( பக்கம் 59 ,60)

அவதார சரித்திரம் என்னும் சொக்கட்டானில் அடுத்ததடுத்த காய்களை நகர்த்திய பாபா, உறவகொண்டாவில் தமது கடைசி காட்சியை அரகங்கற்றி அவதாரப் பிரகடனம் செய்தார். தமயன் சேஷமராஜு, எப்படியும் சத்யாவை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற முயற்சியில், உரவகொண்டா பள்ளியில்

அவரைச் சேர்த்தார். சில காலம் பள்ளிக்கு சென்ற பாபா, ஒருநாள் (1940 - அக்டோபர் - 20) பள்ளிக்கூட வாசல்வரை சென்று  உடனே திரும்பி வீட்டிற்கு வந்துவிட்டார். வீட்டு வாயிற்படியில் நின்றுகொண்டு, தம் புத்தகப் பையை வீசி எறிந்துவிட்டு "நான் இனிமேல் உங்கள் சத்யா அல்லன். நான் சாயிபாபா" என்று உரக்கக் கூறினார். 

அவரது அண்ணியார் அங்கு வந்து பார்த்தபோது "நான் போகிறேன்... நான் உங்களைச் சேர்ந்தவன் அல்ல.மாயை ஓடிவிட்டது. என்னுடைய பக்தர்கள் என்னை அழைக்கிறார்கள். எனக்கு வேலை இருக்கிறது. நான் இங்கு இருக்க முடியாது" எனக் கூறிவிட்டு, தம்மை தெய்வம் என்று அறிந்து வணங்கி வந்த எக்சைஸ்  இன்ஸ்பெக்டர் வீட்டுத் தோட்டத்திற்கு சென்று, அங்கிருந்த பாறைமீது சென்று அமர்ந்து கொண்டார். 

'மானச பஜரே குரு சரணம்... துஸ்தர பவசாகர தரணம்' என்ற பாடலை பாபா அப்போது பாட அனைவரும்  தொடர்ந்து பாடினர்.  அப்போது அங்கு எழுந்த தெய்வீக ஒலி அலைகள் விண்ணை எட்டி. அந்த இடத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் பஜனையும், நாம சங்கீர்தனமும் நடந்தன. அவரது தாயார் அவரைக் காண வந்தபோது "மாயை வந்துவிட்டது" என்று கூறி,  வீட்டிற்கு வர மறுத்து விட்டார். தாயாரின் வற்புறுத்தலுக்குப் பின், அனைத்துப் பதார்த்தங்களுயும் சேர்த்து பிசைந்த சாதத்தில் மூன்று கவளங்கள் உண்டார். பிறகு "மாயை நீங்கிவிட்டது" எனக் கூறி புன்னகைத்தார். 

பாபாவை புகைப்படம் எடுக்க வந்த ஒருவர், பாபா அருகில் இருந்த ஒரு கல்லை அப்புறப் படுத்தி வைக்குமாறு  கூற , பாபா அதற்கு உடன்படாமல், அப்படியே புகைப்படம் எடுக்குமாறு கூறினார். போட்டோ பிரிண்ட் போட்டபிறகு , நடந்த அற்புதம் தான் என்ன? போட்டோவில்  அந்தக்கல் இருந்த இடத்தில் ஷீரடி பாபாவின் உருவம் பதிவாகி இருந்தது.


🌻இவ்வாறு பாபா, படிப்படியாக தமது தெய்வீகத்தை வெளிப்படுத்தி. இறுதியில் அக்டோபர் 20 ந்தேதி அவதாரப் பிரகடனம் செய்தார். பாபா அமர்ந்து பஜன் செய்த கல் இருந்த இடம் இப்போது உறவுகொண்டாவில், சத்ய சாயி மையமாகத் திகழ்கிறது. இங்கு வந்து தரிசிக்கும் அனைவரும் பாபாவின் ஆன்மீகப் பெருங்கருணையை உணர்கின்றனர். 


Source: Kasturi, N. (n.d.). Sathyam Sivam Sundaram, Volume One. SSSST Publications Division

தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக