தலைப்பு

புதன், 24 மார்ச், 2021

எனக்கு சேவை செய்வது உனக்கான நல்லதிர்ஷ்டம்!


ஒரு முறை ஸ்வாமி மாணவர்களிடம் கேட்டார்.."ஒருவருக்கு கிடைக்க கூடிய மிகச் சிறந்த பாக்கியம் அல்லது நல் அதிர்ஷ்டம் எது?"

மாணவர்கள் அளித்த பல்வேறு விடைகளுக்குப் பின் ஸ்வாமி அக்கேள்விக்கு பதிலளித்தார்... 

"மனிதர்களுக்கான மிக சிறந்த நல்லதிர்ஷ்டம் என்பது அவதாரத்தின் சமகாலத்தில் பிறப்பது. அதனினும் சிறந்தது அவதாரத்தை அறிந்து கொள்வது. அதனினும் சிறந்தது அவதாரத்தை பக்தி செலுத்துவது. அதனினும் சிறந்தது அவருக்கு சேவை செய்வது / அவரது அவதார பணியில் இணைந்து சேவை புரிவது".

ஆதாரம்: The Kodaikanal Experience - Rendezvous with Prof. Anil Kumar

அவரது அவதார பெரும்பணியில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்த நாம் உண்மையில் அசீர்வதிக்கப்பட்டவர்கள், பாக்கியவான்கள்!!!


அவதாரம் என்பது இறைவன் புரிவது. அது இறைவன் மட்டுமே புரிய முடியும். மனிதப் பிறவிகள் ஆன்மீக மேல் நிலைக்கு உயர வேண்டி மட்டுமே இறைவன் பூமியின் கீழ் இறங்கி வருகிறான். பொருளாதார முன்னேற்றம் பெறவே மனிதன் மாயையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் இருட்டான காலக்கட்டத்தில் அவனை பக்குவப்படுத்தி அருளாதார முன்னேற்றத்தை அள்ளி வழங்குவது அவதாரங்களால் மட்டுமே முடியும். அங்கே செல் என மகான்கள் நல்வழி காட்ட மட்டுமே முடியும் . ஆனால் அந்த வழியில் இலக்காக இருந்து பேரனுபவம் தர கருணை காட்டுவது இறை அவதாரங்கள் மட்டுமே. இந்த கலியுகத்தில் இறைவன் சத்ய சாயி அப்பேர்ப்பட்ட பரிபூரண அவதாரம். சுவாமியை சாட்சாத் இறைவன் என ஆழமாய் உணர்ந்து அனுபவிப்பவர்கள் சத்தியத்தின் இலக்கை நெருங்கிவிட்டவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம். இதை உணராதவர்கள் உணரவும்.. உணர்ந்தவர்கள் உய்யவும் நாம் நம் சுவாமியின் கருணைப் பார்வை அவர்கள் மேல் பட வேண்டும் என வேண்டிக் கொள்வோமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக