தலைப்பு

புதன், 24 மார்ச், 2021

மெக்சிகன் நாட்டு முதல் குடிமகளிடம் 45நிமிடம் புதுவித பாஷையில் பேசிய இறைவன் சாயி!


இறைவனால் எது முடியாது? எது இயலாது? அவர் அறியாத மனித மொழி ஏது? அவர் எவருள் இல்லை? அந்த இறைவனே சத்யசாயியாக நம்மை கருணை காட்டி... காப்பாற்றி... பக்குவப்படுத்தி காவல் புரிந்து ஆன்மீக வாழ்வில் மேம்படுத்துகிறார் என்றால் அவரின் தயைக்கு ஈடு இணை எதுவுமில்லை என்பதை உணர்த்தும் உன்னதப் பதிவு இதோ...

மெக்சிகோ நாட்டின் அப்போதைய அதிபராக இருந்த மேதகு ஜோஸ் லோபஸ் போர்டில்லோ அவர்களின் துணைவியார் திருமதி. கார்மென் ரோமானோ அவர்கள் 1981ஆம் ஆண்டு இந்தியாவிற்கு அதிகாரபூர்வமாக வந்திருந்தார். அவர் புட்டபர்த்தி சென்று ஶ்ரீ சத்ய சாயிபாபாவை தரிசிக்க விரும்பினார். முதற் குடிமகளின் இந்த அவாவை, மெக்சிகோ தூதர் இந்திய அயலுறவுத் துறை அமைச்சத்தின் நெறிமுறைத் தலைவரிடம் தெரிவித்தார். மிக்க மரியாதையுடன், நெறிமுறைத் தலைவர் பதிலளித்தார், “திரு தூதர் அவர்களே! இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை தாங்கள் அறிவீர்கள். ஆகவே, சத்ய சாயிபாபாவைச் சந்திப்பதற்கான அதிகாரபூர்வ நிகழ்ச்சியை எங்களால் சேர்க்க முடியாதற்கு மிக வருந்துகிறேன்”, என்றார்.


இந்தப் பதிலில் இருந்த அபத்தத்தையும், இதில் மதச்சார்பின்மைக்கு என்ன தொடர்பு? என்றும் வியந்து போன தூதரோ, தன்னுடைய வேண்டுதலில் உறுதியாக இருந்தார். 
இந்த பதிலால் மிக வருத்தப்பட்ட தூதர், உடனடியாக லத்தீன் அமெரிக்க அயலுறவுத் துறையின் இணைச் செயலரைத் தொடர்பு கொண்டு, “என்னுடைய நாட்டு முதல் குடிமகளுக்கு, ஶ்ரீ சத்ய சாயி பாபா அவர்களுடன் சந்திப்பை ஏற்படுத்த முடியவில்லை எனில், அது என் வாழ்க்கையில் படிந்த ஒரு கறையாகும். எனவே நீங்கள் எனக்கு உதவ வேண்டும்” என்று கூறினார்.


இணைச்செயலர் “மேதகு தூதர் அவர்களே! நீங்கள் கூறுவது சரியே. இந்தியாவில் மதச்சார்பின்மை குறித்து வினோதமான கருத்து நிலவுகிறது. எனவே, இந்த அதிகாரபூர்வ நிகழ்ச்சியில், பாபாவுடனான சந்திப்பைச் சேர்க்க முடியாது. ஆனால் நீங்கள் வருத்தப்பட வேண்டாம். நான், இதற்கான ஒரு தீர்வினை ஏற்படுத்த முயல்கிறேன். உங்கள் முதல் குடிமகளின் நிகழ்ச்சிகளில், பெங்களூரைச் சேர்த்துள்ளோம். அவர் பெங்களூர் வந்து சேர்ந்தவுடன், உடல்நலன் சரியில்லை என்று கூறி, இந்துஸ்தான் வானூர்தி மற்றும் இந்தியத் தொலைபேசி தொழிற்சாலை நிகழ்ச்சிகளை ரத்து செய்யட்டும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அவருக்கு புட்டபர்த்தி சென்று பாபாவைச் சந்திக்க ஒரு காரை மட்டும் தயார் செய்வதுதான்” என்று கூறினார்.

இப்போதுதான் தூதர் நிம்மதி அடைந்தார். “இது அற்புதமான யோசனை. நீங்கள் என் வேலையைக் காப்பாற்றி விட்டீர்கள். நான் எப்போதும் உங்களுக்கு நன்றி உடையவனாக இருப்பேன்” என்று கூறினார்.

 🇲🇽 மெக்சிகோ அதிபரின் துணைவியார் வருகை குறித்து பிரபல இந்திய விஞ்ஞானி டாக்டர். பகவந்தம் கூறுவதை கேட்போம்..

மெக்சிகோ அதிபரின் துணைவியார் புட்டபர்த்தி வந்ததும், அவரது மகளும்... மெக்சிகன் அம்பாசகடரும் உடன் இருந்தார். தான் பாபாவை யாரும் இல்லாமல் தனிமையில் சந்திக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். தங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா என? கேட்ட விஞ்ஞானம் பகவந்தம் அவர்களுக்கு அம்பாசிடர் மூலமாக கிடைத்த பதில் "வெரி லிட்டில்" என்பதே. அந்த லிட்டில்'லில் அவர்களுக்கு ஆங்கிலம் சரளமாகப் பேச வராது என்பதை புரிந்து கொண்டார் விஞ்ஞானி. அம்மையாரும் அதே பதிலை அளிக்க.. மேலும் யாரும் மொழி பெயர்க்க அங்கே இருக்க கூடாது எனவும் சொல்லிவிட்டார். உங்கள் மகள் கூட இருக்கக் கூடாதா என கேட்கப் போக ஆம் என்பதாகவே.. அது தன் அந்தரங்கமான பிரச்சனை ஆகவே பிறர் அறிந்து கொள்ள விரும்பவில்லை என அம்மையார் சொல்ல.. பகவந்தமோ சுவாமிக்கு இவர்கள் பேசும் ஸ்பானிய மொழி தெரியாது.. இவர்களுக்கோ ஆங்கிலம் வராது.. எந்தப் பொது மொழியில் பேச முடியும்? என குழம்பிக் கொண்டிருந்தார்.
கீழே இறங்கி வந்த சுவாமி தனக்கு அனைத்தும் தெரியும் என்பது போல் அம்மையாரை நேர்காணலுக்கு அழைத்துவிட்டு யாரும் வரத் தேவையில்லை என்பதாக சொல்லிவிட்டு நேர்காணல் அறைக்கு சென்றார்.

பிரபல இந்திய விஞ்ஞானி டாக்டர். சூரி பகவந்தம்

அய்யோ சுவாமி விபரம் புரியாமல் அவர்களை அழைத்துவிட்டார்... அவர்களிடம் என்ன மொழியில் பேசி அவர்களைப் புரிய வைப்பாரோ.. அதைச் சொல்ல வந்த என்னையும் தடுத்து விட்டாரே.. என்ன செய்வது என கைகளை பிசைந்து கொண்டிருந்தார்.

விஞ்ஞானிகள் பெரும்பாலும் இப்படித்தான் தனக்கு தெரியாத ஆன்மீக பிரிமாணங்களை இவர்களே ஒன்று கற்பனை செய்து அவை எல்லாம் இல்லை என்பவர்கள். "கற்பனையை விட உண்மை எப்போதுமே நம்புவதற்கு அப்பாற்பட்டது.. அதி ஆச்சர்யம் மிகுந்தது".

45 நிமிடம் நேர்காணல். நேர்காணல் முடிந்து கண்களின் நீரை துடைத்தபடி பயபக்தியோடு வெளியே வருகிறார் அந்த அம்மையார். அம்பாசிடரிடம் பேசிவிட்டு புறப்படுகிறார். என்ன ஆயிற்று அவர்களுக்கு சந்தோஷமா எனக் கேட்க .. அம்பாசிடரோ அவர்களுக்கு பரம சந்தோஷம் எனச் சொல்லிவிட்டு.. நன்றி கூறி இருவரும் விஞ்ஞானியிடமிருந்து விடை பெறுகிறார்கள்.


விஞ்ஞானி பகவந்தத்திற்கோ என்ன மொழியில் பேசினர் இருவரும் என்பதை அறிந்து கொள்ளாமல் இருந்தால் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது. சுவாமியிடம் அன்று மாலை கேட்கிறார். சுவாமி அதற்கு அவர்களே சொல்லி இருப்பார்களே, என்கிறார். ஆம் சுவாமி அவர்களுக்கு சந்தோஷமாம்.. என்ன நிகழ்ந்தது என மேலும் விஞ்ஞானி ஆராய்ச்சி கணை தொடுக்க.. சுவாமியோ அவர்கள் தன் பிரச்சனையை சொல்வதற்கு முன்பே சுவாமியே அனைத்தையும் சொல்லிவிட்டேன்.. ஐந்து வருடம் முன் அவர்களுக்கு நேர்ந்த விபத்து.. அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் என ஒன்று விடாமல் சொல்லி.. லாக்கட் சிருஷ்டி செய்து அந்த அருட் பரிசை காவலாக வழங்கினேன் என்கிறார் சுவாமி.
அது சரி சுவாமி.. ஆனால் நீங்கள் என்ன மொழியில் பேசினீர்கள் என அந்த நாள் முழுதும் உறுத்திக் கொண்டிருந்த கேள்வியை கேட்டார் விஞ்ஞானி பகவந்தம்.
சுவாமியோ மிக மிக கூலாக அவரின் முதுகைத் தட்டியபடி "பங்காரு.. மனிதர்களாகிய உங்களுக்கு தான் பிறரோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம் போன்ற மொழிகள் தேவை.. சுவாமிக்கு அது தேவையே இல்லை.. நான் அவளோடு பேசியது இதய மொழியில்" என்கிறார் இறைவன் சத்யசாயி! 

ஆதாரம்: ஆதாரம்: பிரபல விஞ்ஞானி டாக்டர். சூரி பகவந்தம் அவர்களின் நேர்காணல் வீடியோ 


🌻 சுவாமி நம்மோடு தொடர்பு கொள்வது இதயத்தோடு மட்டுமே. காரணம் அவர் அந்தர்யாமி. இதயத்தை நாம் தூய்மைப்படுத்திக் கொள்வதே நாம் அவருக்காக செய்ய வேண்டிய வழிபாடு. வழிபாட்டின் சாரமே இதயத் தூய்மை தான்.. இதயத் தூய்மை இன்றி செய்கின்ற எந்த செயலாலும் எந்த பயனும் நமக்கும் இல்லை.. நம்மால் இந்த உலகத்துக்கும் இல்லை. 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக