தலைப்பு

வெள்ளி, 5 மார்ச், 2021

பத்மபூஷண் M. பாலமுரளி கிருஷ்ணா போற்றிடும் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணன்!

Legendary vocalist M Balamuralikrishna, One of the greatest Indian musicians of our times. 

கர்நாடக இசை மேதை, இசை அமைப்பாளர், இசைக்கருவிகள் பலவற்றை திறம்பட இசைத்தவர், பாடலாசிரியர், குணசித்ர நடிகர் இத்தனை சிறப்புகளும் ஒருங்கே பெற்ற பால முரளி கிருஷ்ணா அவர்களை அறியாதவர் யார். அவர் புகழ் பாட "இன்றொரு நாள் போதுமா" அவர் பெற்ற விருதுகள் பல. அவை எண்ணிலடங்கா. அவற்றில் சில. சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி விருது, திரைப்பட விருது,சங்கீத கலா சிகாமணி விருது இதற்கும் மேலாக  விருது. இவர் தம் வாழ்நாளில் உலகெங்கும் 27000க்கு மேற்பட்ட இசைக் கச்சேரி  நிகழ்த்தி வானளாவிய புகழ் பெற்றவர். 

அசையும் பொருளில் இசையும் நானே என்கிறார் ஆண்டவன். அப்பரம்பொருளே இசையின் வடிவம்தானே. கோவிந்தன் குழல் கொண்டு ஊதியபோது , ஆவினங்கள் மேய்ச்சல் மறந்து நின்றன அல்லவா?. நம் பாபாவும் தம் இசைப்பாடல்களால் நம்மை வசப்படுத்தி வழி நடத்துகிறார் அல்லவா? அற்புதமான இசையை அள்ளி அள்ளி வழங்கிய பாலமுரளி கிருஷ்ணாவின் பாபா உடனான அநுபவம் என்ன? அவரது கூற்றிலே கேட்போம்.


🌹ஆண்டவன் எழுதிய பாராட்டு மடல்:

பாலமுரளி கிருஷ்ணாவின் புகழ் பரவத்தொடங்கிய காலம். ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதினர். அதில் ஒரு கடிதம் வித்தியாசமாக உள்ளத்தைத் தொடும்படி இருந்தது. அதன் வாசகம்.. "நாநா..( அருமை மகனே) உன் கச்சேரிகளை நான் கேட்டேன். மிகவும் அருமையாகவும் உணர்வு பூர்வமாகவும் இருந்தது." இது ஏதோ ஒரு வித்வானின் பாராட்டு என நான் நினைத்தேன். பிறகு தான் தெரியவந்தது அதை எழுதியவர் சத்யசாயி பாபா என்று. இக்கடிதற்கு பதில் எழுதிய பின்னர், எங்களுக்குள் பலகாலம் கடித பரிமாற்றங்கள் தொடர்ந்தன. பாபாவின் அழைப்பின பேரில் நான் புட்டபர்த்தி சென்று பாபா முன்னிலையில் மூன்று முறை இசைக் கச்சேரி செய்யும் நல் வாய்ப்பும் கிட்டியது. அப்போது அவர் கூறியதாவது. "இனி நீ அழைப்பின்றி எங்கு சென்றும் பாடவேண்டாம் அது பிரசாந்தி நிலயமாக இருந்தாலும் கூட." இந்த அறிவுரையை பிறகு நான் எப்போதும் கடைபிடித்தேன். 


🌹பால முரளிகிருஷ்ணாவின் இசைக் கச்சேரிகளில் முதல் வரிசையில் அமர்ந்து ரசித்த சாயி:

அனேகம் பக்தர்கள் கேட்பதுண்டு, நீங்கள் ஏன் ஸ்வாமியின் முன்னிலையில் அடிக்கடி இசைக் கச்சேரிகள் செய்வதில்லை என்று. அதற்கு என் பதில்.. ஸ்வாமியின் அறிவுரைப்படி நான் நடக்க கடமைப் பட்டுள்ளேன். இது பகவானின் சித்தம். பாபாவிடமும் இந்த கேள்வி கேட்கப் பட்டபோது அவர் கூறியதாவது.. "நான் எப்போதும் பாலமுரளி கச்சேரியை முதல் வரிசையில், முதலாவதாக அமர்ந்து கேட்கிறேன்." எங்கும் நிறை பரம்பொருளான பாபாவின் சர்வ வியாபகத் தன்மையை உணரும் அடியார்களுக்கு இது ஒரு வியப்பல்ல. "பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணானந்தமே" என தாயுமானவரும் கூறுகிறார். 


பாலமுரளி கிருஷ்ணா மேலும் கூறுகிறார். என் வாழ்விலும் பல்வேறு ஏற்ற இறக்கங்களும், குழப்பங்களும் சூழ்ந்திருந்த சமயம், பகவானைப் பற்றிய இந்த நேர்முகத்தில் பேசும் போது , என் மனக்குழப்பங்கள் விலகி ஒரு யானை பலத்துடன் என் இடர்களை எதிர் கொள்ளும் மனத்திடம் வந்துள்ளது. பகவானின் விருப்பம் அது என்றால் நான் அவரது மஹாசமாதியின் முன் ஒரு இசைக் கச்சேரி நிகழ்த்துவேன். பகவான் பாபா ராமரைப் போன்றும் கிருஷ்ணரைப் போன்றும் ஒரு அவதார புருஷர். உலக நியதிக்கு தம்மையும் உட்படுத்தி அவர் தம் உடலை நீத்துள்ளார். இவ்வுலகில் அனைத்தும் பகவானின் திருஉள்ளப்படி நடக்கின்றன. இதை உணர்ந்தால் நம் மனம் பண்பட்டு கவலைகள் மறைந்தொழியும். 

ஆதாரம்:  திரு. பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் ரேடியோ சாயிக்கு அளித்த நேர்காணல். 
மொழிமாற்றம்: திரு, குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 

இறைவன் சத்யசாயியை அவதார புருஷன் என உணர்ந்து கொண்ட பாடகர் பாலமுரளி கிருஷ்ணா தன் இதயம் எனும் தங்க ரதம் கொண்டு உலக வீதியில் உலாவி இருக்கிறார். அவர் சின்ன கண்ணனாக அழைத்தது இறைவன் சத்ய சாயி கண்ணனை அல்லவா... இன்றும் தான் பாடிய ஆத்மார்த்த பாடல்கள் வழி அழைத்துக் கொண்டே இருக்கிறார்...

யசோதை அன்று கண்ணனை கட்டிய கயிறு அன்பெனும் கயிறு அன்றோ? தம் சாயி அவதாரத்தில் அந்த அன்பெனும் கயிற்றுடன் வந்த நம் ஐயன்,  நம் அனைவரையும் அன்பால் பிணைத்து அரவணைக்கிறார் அன்றோ. சாயியின் அடிபணிந்து அவன் வழி நடப்போம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக