தலைப்பு

திங்கள், 29 மார்ச், 2021

பாபாவின் பாதவிரல்களிலிருந்து கங்கை நீர்பெருக்கு!


சுவாமியின் பாதம் மட்டுமே பக்தனுக்கு போதுமானது. காரணம் அதுவே பக்திக்கு முக்தி அளிக்கக் கூடியது. பூமியையே தாங்குவது ஆதி சேஷன் என்கிறது பாகவதம். அந்த ஆதி சேஷனையே தாங்குவது சுவாமி பாதம் தான். சுவாமி பாதம் நமக்காக ஒன்றே ஒன்றையே விரும்புவது.. அதுவே சரணாகதி.. அத்தகைய பாதம் என்னவெல்லாம் செய்ய வல்லது என்பதை உணர்த்தும் பதிவு இதோ...

கோடையில் சித்ராவதி நதி வற்றிவிடும். கோடை காலங்களில் நதி நீர் குறைவது இயற்கை. சூரியனால் அது உறியப்படும். ஆனால் பக்குவமில்லாத மனிதர்களால் ஆளப்படுகிற பூமி மரங்களை இழப்பதிலும் அடிநீர் வரத்தும்.. மழை நீர் வரத்துவமே பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. ஆகவே தான் மனிதர்களுக்கு இறைவனின் அவதாரம் தேவைப்படுகிறது.

 புட்டபர்த்திக்கு வரும் பக்தர்கள் கிணறுகளை தேடி அலைய வேண்டி இருந்தது. சிறிய குக் கிராமமான அன்றைய புட்டபர்த்தி சுவாமி அவதரித்ததால் மட்டுமே இன்றைக்கு திவ்ய ஷேத்திரமாகி இருக்கிறது. ஒரு நாள் மாலை பக்தர்கள் உஷ்ணத்தால் மிகவும் தாகம் எடுத்து தண்ணீருக்குத் தவித்தனர்.


புட்டபர்த்தியின் வெய்யில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. சூரிய பகவான் இறைவன் சத்ய சாயியை தரிசிக்க இன்னும் சற்று அருகிலே தான் அங்கே பிரவேசிப்பார். எத்தனை முறை சுவாமியை தரிசித்தாலும் அவரின் ஒளி வெள்ளத்தில் தன் ஒளியை நினைத்து கதிரொளி வெட்கப்படவே செய்யும். இறைவனின் பேரழகுக்கு முன் இயற்கையின் அழகு ஒன்றும் அத்தனை பேரழகல்ல..

சுவாமி பக்தர்கள்  அவர்கள் கொண்டு வந்த சிறிய பித்தளை குடம் நீரும் காலியாகிவிட்டது. தங்களது பாபாவிடம் தெரிவித்தனர். சுவாமியால் எது தான் செய்ய இயலாது. அவர் சித்ராவதி நதியின் மணல் படுகையில் ஆற்றாத லீலைகளே இல்லை. சுவாமியின் பாதம் படாத இடமே சித்ராவதியில் இல்லை. பாபா தன் கால்களை இங்குமங்கும் நகர்த்தினார். அவரது இரு கட்டை விரல்களிலிருந்து நீர் கிளம்பி பெருகலாயிற்று. இவ்வாறே ஷிர்டியில் தனது முந்தைய அவதாரத்தில் சுவாமி செய்திருக்கிறார்.
 இறைவனின் தோற்றம் மட்டுமே வேறாக இருக்கிறதே தவிர லீலைகளில் எல்லாம் கிருஷ்ணாவதாரத்தில் இருந்து ஒன்றுமையே மேலோங்கி இருக்கிறது.


பக்தர்கள் தங்களது பாத்திரங்களில் புனித நீரை பிடித்து பருகினர். நீர் மிகவும் சுவையாக இருந்ததை உணர்ந்தனர். அது கங்கைநீர் என பாபா வெளிப்படுத்தினார்!!!
ஷிர்டி சாயியாக தான் வாழ்ந்த போதும் பாதங்களில் பொழிய வைத்தவர்... சத்யசாயி கிருஷ்ணராக வாழ்கையிலும் அதே மகிமையை ஆற்றியிருக்கிறார்.
சிவசக்தி அம்சமான சுவாமி தன் ஒரு அம்சத்து கங்கையை தன் பாதம் வழி பிறப்பித்தது பெரிய விஷயம் இல்லை. அவரால் எதுவும் இயலும்.


ஆதாரம்: R. Balapattabi Nectraine leeals of Bhagawan Sri Sathya Sai Baba, Page no 47

🌻 கங்கையும் சித்ராவதியும் வேறு வேறு அல்ல‌.. இப்போதும் சித்ராவதி நதியையும் சித்ராவதி நதியின் மணல் படுகையையும் நாம் போற்றி வழிபட வேண்டும். வெறும் பொழுது போக்குவதற்காக பக்தர்கள் அவ்விடத்திற்கு வேடிக்கை பார்க்க செல்லாமல்.. அந்த புண்ணிய நதியான சித்ராவதி நதியின் மணலை பயபக்தியோடு வணங்க வேண்டும். அங்கே அமர்ந்து சுவாமி நாமம் ஜபிப்பதும். நதியை பார்த்தபடி தியானிக்கவும் வேண்டும். "கங்கா ஆரத்தியை போல் சித்ராவதி ஆரத்தியும் அரங்கேறி அன்றாடம் நிகழ் வேண்டும்." எந்த வர்த்தகமும் அழியும்.. எந்தவிதப் பொழுது போக்கும் சலித்துப் போகும்.. ஆனால் ஆன்மீகம் அழியாது!! தெய்வீகம் சலிக்காது!! 🌻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக