தலைப்பு

வியாழன், 4 மார்ச், 2021

சகலமும் அறிந்த சாயி இறைவன்!


சுவாமியின் எங்கும் நிறைந்த தன்மையையும்‌... அதை பக்தரிடம் அறிவிக்கும் நேயத்தையும்...எந்த இடத்தில் தன் எந்த பக்தர்க்கு விபத்து நிகழ்ந்தாலும் அதை தடுத்து அவர்களின் உயிரையே காப்பாற்றும் கருணையையும்.. ஒருவர் பக்தி செய்தாலும் அவரின் குடும்பத்தையே தன் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரும் காருண்யத்தையும் நினைந்து உருக வைக்கும் பதிவு இதோ!!

ஒரு முறை பிரசாந்தி நிலையத்துக்கு நாங்கள் குழுவாகச் சென்றிருந்தோம். தரிசனப் பகுதியில் சுவாமி எங்களோடு உரையாடினார். ஒரு பணித்திட்டத்தைப் பற்றிச் சகோதரர் ஒருவர் சுவாமியிடம் கூறிக்கொண்டிருந்தார். சுவாமியின் பார்வையோ அவரருகில் உட்கார்ந்திருந்த மற்றொரு சகோதரர் மீது இருந்தது. சற்றும் எதிர்பாராமல் அருகிலிருந்த சகோதரரிடம் சுவாமி அவருடைய பைக்கைப் பற்றிக் கேட்டார்.

அந்தச் சகோதரர் மட்டுமல்ல நாங்கள் எல்லோருமே சற்று ஆச்சரியப்பட்டுப் போனோம். குழம்பிய போதும் அந்த சகோதரர், என்னுடைய பைக் நன்றாக  இருக்கிறது சுவாமி" என்று பதிலளித்தார். இந்த உரையாடலின் உள்ளே பொதிந்திருந்த பொருள் என்ன ? என்று நாங்கள் சிந்தித்தோம். இந்த பையனின் பைக்கைப் பற்றி சுவாமி ஏன் கேட்டார்?எங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டு சுவாமி நேர்காணல் அறைக்குள் போய்விட்டார். எங்களுக்குத் தெளிவு கிடைக்காவிட்டாலும், நாங்கள் அன்றைய வேலைகளைத் தொடர்ந்து செய்தோம்.அன்று மதியம்  சகோதரர் ஊருக்கு போன் போட்டுப் பேசியபோது, அவருடைய சகோதரர் ஹைதராபாத்தில் ஒரு பைக் விபத்தில் மாட்டிக்கொண்டது தெரியவந்தது. சுவாமி  எங்களுக்குப் பிரசாந்தி நிலையத்தில் குறிப்புக் காட்டியப்படியே , பைக் மிகவும் சேதப்பட்டிருந்தது. அந்தப் பையனிடம் பகவான் பர்த்தியில் பேசிய அதே சமயத்தில்தான் பைக் விபத்துக்கு உள்ளானது என்பதை  சொல்லவும் வேண்டுமா!


நம்மிடையே நடந்து கொண்டிருக்கும் அவர்.. எல்லாவற்றைப் பற்றியும் எல்லாமும் அறிந்த பரமாத்மா எவ்வளவு ஆச்சிரியமான விஷயம். அவர் நம்மோடு ஒரு மனிதரைப் போலப் பேசி, நடந்து கொள்கிறார் என்று நினைத்தோம்; ஆனால் அவரோ இந்த பிரபஞ்சத்தின் நாயகன்! சுவாமி நீங்கள்  வாழும் காலத்திலேயே வாழ்வதற்குக் கிடைத்த பாக்கியத்திற்கு நாங்கள் நன்றி உடையவர்களாக இருக்கிறோம். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, நாங்கள் கடைத்தேருவதற்கான பலமும் புத்தியும் எங்களுக்குக் கொடுத்தருளுங்கள் என்று பிரார்த்திக்கிறோம். நன்றி சுவாமி!                   

ஆதாரம்: 90 Divine Interactions of Bhagawan with youth


🌻ஜீவ ராசிகள் கடைத்தேறுவதற்காக மட்டும் ஸ்ரீ சத்யசாயி எனும் நாமரூபத்தில் கடவுள் இறங்கி வந்திருப்பது எவ்வளவு கொடுப்பினை. எவ்வளவு கருணை.. எவ்வளவு பெரிய பாக்கியம்.. 
நாம் கடைத்தேற ஸ்ரீ சத்ய சாயி கடவுளின் ஒரு கடைக்கண் பார்வையே போதுமானது. 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக