தலைப்பு

சனி, 13 மார்ச், 2021

டாக்டர்கள் கைவிரித்த ஒரு தீவிர இஸ்லாமிய பெண்மணிக்கு மகப்பேறு அளித்த சாயி அல்லா!


தாய்மைப்பேறு உனக்கு இல்லை என மருத்துவர்கள் கையை விரித்த ஒரு தீவிரமான முகமதிய மதத்தைப் பின்பற்றும் ..‌ இறைவன் சத்ய சாயி மேல் நம்பிக்கையே துளியும் இல்லாத ஒரு இஸ்லாம் சகோதரிக்கு அன்னை பேறு வழங்கிய  ஸ்ரீ சத்யசாயி அன்னை என்பதன் பேராச்சர்ய அனுபவப் பதிவு இதோ.. 

பேராசிரியர் அப்துல் ரசாக் இளமையில் வறுமையில் வாடினார். இளம் வயதில் தந்தையை இழந்ததால், தனது பள்ளிப்படிப்பை முடிக்க சினிமா கொட்டகையில் மாலை நேரத்தில் வேலை செய்தார். ரசாக் படிப்பில் மிகவும் கெட்டிக்காரர். அரசு உதவித்தொகையுடன் கல்லூரியில் பயின்று வக்கீல் ஆனார்.

அவர் மன அமைதி இன்றி இருந்தார். மன அமைதிக்காக அவர் பல்வேறு இடங்களுக்குச் சென்றார். ஒருமுறை புட்டபர்த்தி சென்றபோது தனது மனம் மிகுந்த மகிழ்ச்சியையும் மன அமைதியையும் பெறுவதை உணர்ந்தார். பகவானின் தன்னலமற்ற அன்பும் சேவையும் அவரை மிகவும் கவர்ந்தது.
அவர் பகவானின் கல்லூரியில் விசிட்டிங் புரபசர் ஆக பணிபுரிந்தார். 

ஒருமுறை பேராசிரியர் ரசக் அவர்களிடம் பகவான் பாபா அவரது  துணைவியாரை  அழைத்துக்கொண்டு புட்டபர்த்தி வருமாறு கூறினார். அவரது துணைவியார், இஸ்லாமிய மார்க்கத்தில் பற்றாளர் எனவே அவர் புட்டபர்த்தி வர மறுத்தார். ரசாக் அவரை வற்புறுத்தி புட்டபர்த்தி அழைத்துவந்தார். தரிசனத்தின்போது பகவான் ரசாக் அவர்களை நேர்காணலுக்கு அழைத்தார்.

ரசாக்கின் மனைவிக்கு பகவான் மீது துளியும் நம்பிக்கை இல்லை . நம்மில் பலரைப் போல அவர் பகவானை சாதாரண மனிதராகவே கருதினார்.
 எனவே நேர்காணல் அறையில் தாம் பகவானுக்கு நமஸ்தே கூறுவதோ அவர் காலை வணங்குவதோ முடியாது எனத் தெரிவித்து விட்டார். சரி என்று கூறி மனைவியை அழைத்துக்கொண்டு ரசாக் நேர்காணல் அறைக்குச் சென்று பகவானுக்காக காத்திருந்தார். சிறிது நேரத்தில்  நேர்காணல் அறைக்கு பகவான் வந்து நாற்காலியில் அமர்ந்தார்.


கீழே அமர்ந்திருந்த ரசாக் பகவானுக்கு வணக்கம் கூறி பகவானின் பாதத்தை வணங்கினார். ரசாக்கின் மனைவி அமைதியாக இருந்தார். சுவாமி புன்சிரிப்புடன் ரசாக் இடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் சடாரென திரும்பி ரசாக்கின் மனைவியிடம், "பங்காரு உன் பெயர் என்ன?" என கேட்டார்.

பகவான் எல்லோரையும் பங்காரு என்றுதான் அழைப்பார். பங்காரு என்றால் தங்கம் என்று பொருள்.

அவள் நசீம் என பெயரைக் கூறியதும், பகவான் அவளிடம், "உனக்கு எத்தனை குழந்தைகள்?" என்று கேட்டார். அவள் நான்கு குழந்தைகள் என்றாள்.பகவான் மீண்டும் அவளிடம் உனக்கு எத்தனை குழந்தைகள்? என்றார். அவளும் நான்கு குழந்தைகள் என்றாள்.

பகவான் அவளிடம், ரசாக்கின் முதல் மனைவியின் குழந்தைகளைப் பற்றி தான் கேட்கவில்லை... உனக்கு எத்தனை குழந்தைகள்? என்று கேட்டார். அவள் மெல்ல விசும்பி அழ தொடங்கினாள்.

ரசாக் பகவானிடம் அவளுக்கு குழந்தைகள் இல்லை என்றும், தங்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லை என்றும்,  புனே, பம்பாய், சோலாப்பூர் போன்ற இடங்களில், பெரிய ஆஸ்பத்திரிகளில் பரிசோதனைகள் செய்து கொண்டதாகவும், அங்கிருந்த டாக்டர்கள் குழாய்களில் அடைப்பு, O-R எதிர்மறை ரத்தம் போன்ற காரணங்களால் அவளுக்கு இனி குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என கூறி விட்டதாகவும் தெரிவித்தார். தனது முதல் மனைவியின் மூலம் தனக்கு நான்கு குழந்தைகள் இருப்பதாகவும் ரசாக் கூறினார்.

ரசாக்கின் மனைவி கடவுளின் கருணை தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறி அழுதாள்.

பகவான் மென்மையாக அவளிடம், "பங்காரு! நீ கவலைப்படாதே, கடவுளின் கருணை உனக்கு உண்டு. நான் ஆசீர்வதிக்கிறேன்! உனக்கு  இரண்டு ஆண் குழந்தை பிறக்கும். முதல் மகன் இந்த நாட்டின் புகழ்பெற்ற தேசத் தலைவர் பிறந்த நாளில் பிறப்பான். இரண்டாவது மகன், புகழ்பெற்ற இந்த தேசத்தின் தலைவி பிறந்த நாளில் பிறப்பான்.", எனக்கூறி அவளை ஆசீர்வதித்து அனுப்பினார். தன்னையறியாமல் பகவானின் பாதங்களை வணங்கி, சாயி நமாஸ் செய்து வெளியே வந்தாள்.

பகவான் வாக்கு சத்திய வாக்கு! பகவான் கூறியபடி 1993 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அது காந்திஜி யின் 125 ஆம் ஆண்டு விழா கொண்டாட்ட நாளாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பகவான் கூறியபடி, அவளுக்கு இரண்டாவது மகன் 1994 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி பிறந்தான். அது இந்த தேச தலைவியான  இந்திரா காந்தியின் பிறந்த நாளாகும்.


சுவாமி, அன்புடன் முதல் குழந்தைக்கு தாமே பெயரிடும் விழாவை நிகழ்த்தி, 
"சாய் பர்ஷ்" என்ற பெயரை இட்டார். அதாவது "சாயியின் பரிசு" என்று பொருள். இரண்டாவது குழந்தைக்கு பெயரிடும் விழா, ரசாக் வீட்டில் நடைபெற்றது. சுவாமி தேர்ந்தெடுத்த பெயரான "சாய் கலாம்" என்ற பெயர் சூட்டப்பட்டது.

பேராசிரியர் ரசாக் அவர்களும், அவரது துணைவியாரும், பகவானுக்கு தினம்தோறும் சாயி நமாஸ் செய்து தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.


சாயி இறைவனிடம் கையேந்துங்கள்..
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை...

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்...
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை...

 ஆம்! சத்யசாயி காமதேனு! கற்பகவிருட்சம்!

 ஜெய் சாய்ராம்!

ஆதாரம்: Sai Sathya Sakha by Abdul Razak korbu
தமிழாக்கம்: S. Ramesh, Ex-Convenor, Salem Samithi

☝️ இறைவன் ஒருவனே .. அவனுக்கு கலியுகத்தில் சத்ய சாயி என்று பெயர் .. அதே இறைவனுக்கு வரப்போகின்ற சத்ய யுகத்தில் பிரேம சாயி என்று பெயர்.. சத்ய சாயி அல்லா நினைத்துப் பார்க்காதவற்றை எல்லாம் நிறைவேற்றுபவர்.‌ எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவர். அந்த சாயி அல்லாவை துதித்து அவர் அருளில் அகம் ததும்பி ஆத்ம சாதனை செய்து பிறவிப்பயன் அடைவோமாக! 

👉 பேராசிரியர் அப்துல் ரசாக் அவர்களின் தனிப்பட்ட அனுபவத்தை வாசிக்க... 1 கருத்து: