இறைவன் ஸ்ரீ சத்ய சாயி எல்லோரின் வேண்டுதலுக்கும் செவி சாய்ப்பவர். மனிதர்கள் மட்டுமல்ல சர்வ ஜீவராசிகளுக்கும் இது பொருந்தும். நாம் எந்த தெய்வ வடிவங்களை அழைத்தாலும் நம் பரபிரம்ம சுவாமி அறிந்து விடுவார். வாசல் காவலாளியிடம் பேசுவதை மாடியில் அந்த வீட்டு முதலாளி கவனிப்பது போல் தான் இதுவும். எவ்வாறு பராமரிப்பற்ற ஒரு குடும்பத்தையே சுவாமி கவனித்துக் கொண்டார் என்பதை அறிந்தால் உடல் புல்லரிக்கும் இதோ...
புத்திர சோகம் என்பது எந்தத் தாயும் தாங்கிக்கொள்ள முடியாது! அதையே மாற்றி தன் கருணையால் அவர்களை சமாதானப்படுத்தி, மனதை அமைதியுறச் செய்தது, விவரிக்க இயலாத ஒரு சம்பவம்!!
தன்னை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத ஒரு தாயாரின் வாழ்வில் நடந்த சம்பவமே - உதாரணம்!!
இரண்டாவது உலக மகா யுத்தத்தில் கேப்டனாக இருந்த ஒரு ராணுவ வீரர் 1949 காலமானார். ஒரு மகனும், இரண்டு மகள்களும் ஆக மனைவியை விட்டுச் சென்றார்! அப்பையன் பெயர் வெங்கட்ராமன். தனது 18 வயதில் பச்சையப்பன் கல்லூரியில் முதல் வகுப்பில் BSc பரீட்சையில் தேறி, பெங்களூர் கன்டோன்மென்ட் மிலிட்டரி பணி சேர்ப்பு அலுவலகத்தில், இருந்து, வேலை கிடைக்க செல்ல கடிதம் கிடைக்கப் பெற்றார்.
இக்குடும்பம், பரம்பரை பரம்பரையாக, திருப்பதி கோவிலுக்கு அதிக அளவில் வாங்கி விளக்கேற்ற நெய் காணிக்கை கொடுப்பர். வேலைக்குச் சேரும் முன் நெய் வாங்கி திருப்பதியில் சேர்த்து விட்டு உடனே திரும்பி வர வேண்டியவர், நாலு நாட்கள் ஆகியும் வரவில்லை! பயத்தோடு திருப்பதிக்கு தன் இரண்டு மகள்களுடன் சென்று பார்த்ததில், பெரிய சோக செய்தி காத்திருந்தது. நெய்யை வாங்கி வைத்துவிட்டு, குளத்தில் குளிக்கச் சென்ற வெங்கட்ராமன் தவறி குளத்தில் வழுக்கி விழுந்து மூழ்கி விட்டார். இரண்டு நாட்கள் காத்திருந்த அலுவலர்கள் உடலை போட்டோ எடுத்துக் கொண்டு எரித்து விட்டனர்.
அழக் கூட தோன்றாத அந்த அன்னை கனத்த மனதோடு சென்னை திரும்பினார். ஒரு ஆண்டு முடிந்ததும் மீண்டும் திருப்பதி வந்து இறந்த மகனது ஆத்மாவிற்கு சடங்குகள் செய்ய திருப்பதி சென்றார். குளத்தில் இறங்கி குளிக்கும் பொழுது தானும் மூழ்கிவிட எண்ணினார். ஆனால் இரு பெண் குழந்தைகளை உத்தேசித்து கரையேறி வந்தார். அன்று இரவு பாபா அவரது கனவில் எல்லையில்லா கருணையுடன் தோன்றினார். அதற்கு முன் பாபாவை அந்தப் பெண்மணி பார்த்ததில்லை. "உனக்கு என்னை தெரியாது! ஆனால் உன்னை எனக்குத் தெரியும். நாளை உன் குழந்தைகளுடன் புட்டபர்த்தி என்னும் கிராமத்திற்கு வா. என் காலடி தவிர உனக்கு நிம்மதி எங்கும் கிடைக்காது. நானே உன்னை வழி நடத்துபவன்" என்றார். அந்தப் பெண்மணி கொஞ்சம் சமாதானமும் அமைதியும் அடைந்தார்.
மறுநாள் புட்டபர்த்தி செல்லலாம் என்றால் வழியே தெரியவில்லை! ஒரு வயதான பிராமணர் தானும் பர்த்தி செல்வதாகவும், அவர்களை கூட்டிச் செல்வதாகவும் கூறி அழைத்துச் சென்றார். பர்த்தியை அடைந்ததும் அவர் மறைந்து விட்டார்.
பர்த்தியை அடைந்ததும் மாலையில் அவர்களை சந்தித்து பாபா பேசினார். தனது உள்ளங்கையை காண்பித்து, வெங்கட்ராமனின் கடைசி நிமிடங்களை காட்சியாக காண்பித்தார். குளத்தில் மூழ்கும் சமயம் "நாராயணா, சத்யநாராயணா என் குடும்பத்தை காப்பாற்று", என்று கூறியவாறு இறைவனடி சேர்ந்த காட்சி, அந்த அன்னைக்கு மட்டும் தெரிந்தது.
பாபா வெங்கட்ராமனின் முந்தைய பிறவி பற்றி விவரங்கள் கூறி, அன்னையையும், சகோதரிகளையும் தெய்வீக பாதையில் செல்ல, கருவியாக செயல்பட்டிருக்கிறாரன் என்றார்.
"நீங்கள் மூவரும் இங்கேயே தங்குங்கள். உங்கள் மகனுக்கு பதில் என்னை உங்கள் மகனாக நினையுங்கள். நான் காப்பாற்றுகிறேன்", என்றார்.
என்னே கருணை! என்னே கருணை!
ஆதாரம்: Baba Sathya Sai - Part 1 - P 255
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம்.
🌻 இறைவன் சத்ய சாயியை வணங்குபவர்கள் சகல, தெய்வங்களையும் வணங்குபவர்கள். இறைவன் சத்ய சாயியிடம் சரணாகதி அடைந்தவர்கள் முக்தி மார்க்கத்தில் நடப்பவர்கள். அவரை பிடித்துக் கொள்வதே சத்தியத்தை பிடித்துக் கொள்வது. பிள்ளையார் சிவசக்தியை சுற்றி சுலபமாய் கனி பெற்றதைப் போல் நாம் சிவசக்தி அம்சனை சுற்றி ஆத்மசாதனையை சுலபமாய் அடைந்துவிட வேண்டும்!! 🌻
AumsriSairam
பதிலளிநீக்கு