பஜனின் முக்கியமான உள்ளார்ந்த அர்த்தத்தை ஒரு முறை பகவான் பாபா எடுத்துக் கூறினார்.அதனை ஒரு எளிய உதாரணத்துடன் விளக்கினார். ஒரு மரத்தடியில் நீங்கள் எல்லாம் கூடி உரத்த குரலில் கத்தினால் ,மரக் கிளைகளில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு பறவையும் பறந்தோடிவிடும்.
மனித வாழ்க்கை என்பதும் ஒரு மரம்தான். அதன்மேல் பல வகைப் பறவைகள் உட்கார்ந்து தம்மை திசை திருப்பும் ஒலிகளை எழுப்புகின்றன. அத்தகைய பறவைகள் காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம், மாத்சர்யம் இவையெல்லாம் சேர்த்து எழுப்பும் கலவையான ஒலியில் அவை உங்களது மன அமைதியையும் சம நிலையையும் கெடுக்கின்றன.
நீங்கள் உரத்த குரலில் ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா என்று பாடினால் அத்தகைய தீய பறவைகள் பறந்துவிடும்.உங்கள் மனம் தூய்மையாகவம். இதயம் அமைதியயும்.நா ம் பகவான் பாபா பஜன் பற்றிக் கூறியதின் உட்பொருளைப் புரிந்துகொண்டு பஜன் செய்வதனால் கிடைக்கும் நன்மையைப் பெறுவோம்.
ஆதாரம் : தபோவனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக