தலைப்பு

செவ்வாய், 16 நவம்பர், 2021

கல்வியுடன் ஞானமும் புகட்டும் கண்கண்ட தெய்வம் பாபா!

பர்த்திபுரியில் பயின்ற மாணவர்களாக இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் நம் அனைவரின் மனதிலும் நிழலாடுவது உண்டல்லவா. ஏனென்றால், பாபா.   மாணவர்களிடம் காட்டிய அன்பு, அன்யோன்யம், பரிவு, பாசம் மற்றும் அவர்களிடம் பேசும்போது வர்ணஜாலமாக மாறும் குதூகல முகபாவம்! அப்பப்பா! என்ன தவம் செய்தனர் என்று எண்ணத் தோன்றும்... 


மாணவர்கள் மனதில் ஏற்கும்படி சத் விஷயங்களை எப்படி பதிய வைக்க வேண்டும் என்பதை, பகவான் சில தனித்துமான வழிமுறைக்களைக் கொண்டு புரியவைப்பார். இந்த வழிமுறைகளை ஆசிரியர்களும், பெற்றோர்களும் தமதுசெயல்பாட்டில் கொண்டு வந்தால், மாணவர்கள் விருப்பத்துடன் கல்வியைக் கற்கண்டாய் ஏற்பர் அல்லவா?  குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கலாம். ஆனால் அன்னை அதன் கவனத்தை கதைகளில் திசை திருப்பி,  தன்கையால் அமுது ஊட்டி, குழந்தைகளின் வயிற்றை நிரப்பி மகிழ்கிறாள் அல்லவா? அதையே தான் ஆயிரம் அன்னைக்கு இணையான பர்த்தீசனும் செய்கிறார்.

பகவானின் ஒவ்வொரு அசைவும் நமக்குப் பாடமாக விளங்குகிறது. அது பாபாவின் பேட்டி  அறை. அங்கு பாபாவைச்சுற்றி அமர்ந்திருந்த மாணவர்களில்  சிலர், பகவானின் பொற்பாதங்களை தமது கரங்களால் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பகவான் கேட்டார். "பாத பூஜை என்றால் என்ன?" அதற்கு ஒரு மாணவனின் பதில் "ஸ்வாமி இப்போது நாங்கள் செய்து கொண்டிருப்பதுதான்  பாதபூஜை" ஸ்வாமி இந்த பதிலால் திருப்தி அடையாமல் இருக்கவே, அடுத்துள்ள மாணவன் கூறினான்.

"ஸ்வாமி. உங்களைப் பார்த்து பரவசப்பட்டு நாங்கள் சிந்தும் கண்ணீரானது, "பழம்,மலர் மற்றும் நன்னீர்" ஆகியவை போன்ற ஆராதனைப் பொருட்கள் ஆகும்.

எங்களுடைய நற்செயல் மற்றும் அல்லாத செயல்களை நாங்கள் உங்கள் பொற்பாதத்தில் சமர்ப்பிப்பதே பாத பூஜை ஆகும்" இந்த பதிலையும் பாபா முழுமையாக அங்கீகரிக்கவில்லை.பிறகு பாபாவே  பதிலைக் கூறினார். "மனித உருவில் அவதரித்த ருக்கும் இறைவன் நடந்த வழித்தடத்தில் நடப்பதுதான், உண்மையான பாதபூஜை"


🌻 சாய்ராம்... என் வாழ்வே ,நான் காட்டும் வழி என்று பகவான் கூறிய அற்புதவாசகத்தை, எத்தனை எளிமையாக   அவர் போதிக்கிறார் பாருங்கள். ஆகவே பாபாவின் விழித்தட தீட்சை பெற்று, அவரது வழித்தடத்தில் நடந்தால், வாழ்க்கையில் இனிய  புதுத்தடம் தோன்றுமல்லவா? 🌻


தமிழில் தொகுத்தளித்தவர்:  திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக