தலைப்பு

வெள்ளி, 26 நவம்பர், 2021

90 ஆண்டை நிறைவு செய்கிறது சுவாமியின் பூர்வ அவதார சரித புத்தகம்!

 

திரு. ஸ்ரீ.ஹேமத் பந்த் எழுதிய

 “ஸ்ரீ சாய் சத்சரித்ரா” வின் முதல் பதிப்பை திரு.ஸ்ரீ.ராமச்சந்திர ஆத்மாராம் தர்காட் அவர்கள் 1930 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி வெளியிட்டார்கள். சாயியின் புனித சத் சரிதம் வெளிவந்து இன்றுடன்(26.11.2021) 90 ஆண்டுகள் நிறைவடைகிறது.



நமது பகவான் சாயி நாதரின் புனித சரிதம் நமக்குக் கிடைத்த நாளை நாம் அனைவரும் சாயி சத்சரிதத்தை பாராயணம் செய்து கொண்டாடி மகிழ்வோம். நம் சுவாமி கலியுகத்தில் எடுத்த முதல் அவதாரம்... எளிமையே மகிமை என உணர்த்திய ஆதார விஜயம்... சமதர்மமே சுபீட்சம் என தண்ணீரால் இதய விளக்கேற்றிய வியன்மிகு இறைவனின் முதல் திரு வருகை... அவரின் பேரற்புதச் சுவடுகளை பக்கம்தோறும் சுமந்து கொண்டிருக்கும் சத்சரிதம் நமக்கு கிடைத்ததற்கு காரணமாக இருந்த அனைத்து அறிஞர்களையும், அவர்தம் சந்ததியினரையும், வணங்கி வாழ்த்தி மகிழ்வோம். 

 ஜெய் சாய்ராம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக