தலைப்பு

சனி, 27 நவம்பர், 2021

இந்தப் பிரபஞ்சம் முழுமைக்கும் காரணமான ஆதார சக்தி நானே!


சுவாமி ஆகாயம் போன்றவர்... ஆகாயத்தை வேர்களால் எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும்? ஆகவே தான் ஆதார ஆகாயமான சுவாமி மழையாய் அவதரிக்கிறார்.. அப்போதே கருணை ஈரத்தை... ஞான நீரூற்றை அருந்தி மனித வேர்களால் சுயதிருப்தி அடைய முடியும் எனும் பேருண்மை ஞான விசும்பு நிழலாய் இதோ...

இந்த முழு பிரபஞ்சத்தையும் தன்னுள் அடக்கியிருக்கும் அளவற்ற சக்தியின் வடிவம் பரப்பிரம்மமான பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா. அவர் மனித வடிவில் நம்மிடையே அவதாரம் செய்திருக்கிறார். பக்தி வழியோ , கர்ம வழியோ, ஞான வழியோ அன்றி வேறெந்த வழியிலும் சுவாமியின் தெய்வீகத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது. ஆன்மீகப் பாதையில் ஒருவனது முன்னேற்றத்தை உறுதிப்படுத்தி உதவுவதற்காக சுவாமியே எத்தனையோ முறை தனது தெய்வீகத்தின் அம்சங்களை வெளிப்படையாகவே விளக்கிவருகிறார்.


அப்படிப்பட்ட சந்தர்பத்தின்போது , பாபா கூறினார், "நான் எனக்காக அல்ல உங்களுக்காகத்தான், உங்களின் மத்தியில் வளைய வருகிறேன். உங்களுடன் பேசுகிறேன். உங்களுடன் உணவு அருந்துகிறேன் இவ்வாறு நடந்துகொண்டு உங்களுக்குச் சமமாக நடந்து வருவதால் உங்களால் என்னைப் புரிந்து கொள்ள  முடியும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறேன். உங்களிடையே உங்களில் ஒருவர் போலவே எந்த ஒரு வித்தியாசமும் இன்றி பழகி உங்கள் அனைவரது அசையாத நம்பிக்கையையும் பெற்றிருக்கிறேன். உங்களது அன்பு, கீழ்ப்படிதல் எல்லாம் நான் பெறுவது உங்களை தெய்வீகத்தை நோக்கி அழைத்துச் செல்வதற்குத்தான். ஆன்மீகத் தேடல்களுக்கு உங்களை ஈடுபாடு கொள்ளச் செய்வதுதான் எனது முக்கிய நோக்கம். 


"ஆரம்பத்தில், உங்களினுள் உறையும் தெய்வீகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.அதன் பிறகு ,மிக உயர்ந்த சத்தியத்தை உணர்ந்து கொள்வதற்கான நிலைக்கு உயரச் செல்லலாம். இந்தப் பிரபஞ்சம் முழுமைக்கும் காரணமான ஆதார சக்தி நானே. நானே அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணமாக அமைகிறேன்.

நான் அனைத்தையும் உணர்ந்தவன்(ஞானி) 

நானே அந்த முழு உண்மை(ஞானம்) 

நானே அதனைப் புரிந்து கொள்பவன் (ஞானேய)."

ஆதாரம் : தபோவனம்


🌻ஒரு தேரில் அச்சாணியே இறைவன் என்பது போல் மனித வாழ்வின் ஆழ்ந்தகன்ற அஸ்திவாரமே சுவாமி... அந்த சுவாமியிடமிருந்து வெளிப்படும் கருணைப் பிரவாகத்தில் சிறு கீற்று நம் மேல் தழுவினாலே போதுமானது... ஞானம் நமக்குள் கரைபுரண்டு ஓடுகிறது... மகா ஞானத்தை சுவாமியிடம் யாசிப்பவர்களே பாக்கியசாலிகள்... அழியாத இறைவனிடம் அழியாத பொருட்களையே யாசிக்க வேண்டும்... அப்போதே மனித ஆன்மா அழியாத நிலைக்குள் பிரவேசிக்க முடியும்!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக