தலைப்பு

செவ்வாய், 23 நவம்பர், 2021

🎂 நவம்பர் 23 - 1926 றும்... நவம்பர் 23 - 2021 றும்.. ஒன்றே!!

மிகப் பெரிய விசேஷ நாள் இது... அப்படி ஒரு நிகழ்வு சுவாமி அவதரித்த போது ஏற்பட்ட அதே ஒருங்கிணைந்த புனிதங்கள் இந்த அவதாரத் திருநாளிலும் அரங்கேறி இருக்கின்றன... இது அதிசயம்.. இது அபூர்வம்... நினைத்துப் பார்க்க முடியாத மெய் சிலிர்ப்பு... அது என்ன ஒற்றுமை என்பதையும்... இந்த அவதாரத் திருநாள் பக்தர்களை எவ்வாறு பேரன்பிற்கு தயார்படுத்துகிறது என்பதையும் வியப்புடன் விவரிக்கப்படுகிறது இதோ...


சுவாமி அவதரித்த நாளான நவம்பர் 23 1926 ... அப்போது சங்கட ஹர சதுர்த்தி, செவ்வாய் கிழமை... திருவாதிரை என புனிதம் பொங்கி வழிந்தது... பிறகு நாம் நவம்பர் 23 ன்றை ஆங்கில தேதிப்படி கொண்டாடும் போது இவை அனைத்தும் சேர்ந்து நிகழவில்லை..

ஆனால் நவம்பர் 23 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டாகிய இன்றோ அவை யாவும் மீண்டும் ஒருங்கிணைந்து இந்த விசேஷ அவதார வைபவ நன்நாளை மேலும் புனிதப்படுத்துகிறது... வாராது வந்த வைபவ பெரு நாளாய் இதிகாச திரு ஏட்டில் பொறிக்கப்பட வேண்டிய சுபநாள் இன்று... அதிலும் சுவாமியின் 96 ஆம் அவதாரத்திரு நாள்... ஆகவே இந்த நாளை தொடரும் ஆண்டையே தனது ஸ்ரீ சத்ய சாயி அவதார நிறைவுக்காக தேர்ந்தெடுத்தார் எனவும் தோன்றுகிறது... 

தனது பெருநிறை அவதாரமான பிரேமையை நோக்கி பிரியமுடன் பக்தரை நகர்த்துவார் எனவும் பெருநிறைவாய் உணரமுடிகிறது... வருங்காலங்கள் வெளிச்ச காலங்களாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை...

பெரும் தெய்வீக நிகழ்வு பிரேமையுடன் அரங்கேறி நம்மை எல்லாம் பரவசப்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை...

அந்த பெரும்பரவச நிகழ்வுக்காக இந்நாள் ஆன்மீக ஆதார பீடமாக அமையட்டும் என எல்லாம் வல்ல பேரருட் பரம்பொருளான நம் சுவாமியை இதயக் கரம் குவித்து கண்மூடி கொண்டாடி வழிபடுவோமாக!!

ஜெய் சாயி ராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக