தலைப்பு

சனி, 20 நவம்பர், 2021

எம கண்டத்தில் துவக்கப்பட்ட செர்னோபில் அணுஉலை ஏற்படுத்திய பேரழிவு!

இறைவன் பாபா காலாதீதன். கால நேரங்களுக்கு அப்பாற்பட்டவர். ஆனால் அவர் ஆரம்பிக்கும் எந்த நற் செயல்களையும், இராகுகாலம்  எமகண்டம்,போன்ற நேரங்களில் ஆரம்பிக்க மாட்டார். இது நமக்கு அவர் தரும் நேரடிப் பாடம்(Practical Lesson).


🌹செர்னோபில் அணுஉலை விபத்து:

அணு விஞ்ஞானத்தில்  ஒருமுன்னணி நாடாகத் திகழ்ந்த ரஷ்யாவில், செர்னோபில் அணு உலையின் நான்காவது அலகு, 1986 ம் ஆண்டு வெடித்து சிதறியது. அதிலிருந்து வெளிப்பட்ட , அணுக் கதிர் வீச்சால் ஆயிரக்கணக்கோர் மாண்டனர். இச் செய்தியின் தாக்கம் அனைவராலும் பரவலாக  விவாதிக்கப்பட்டது.

ஆனால் பகவான் பாபா இதுபற்றி எந்தவித கருத்தும் வெளியிடவில்லை. ஆனால் அந்த ஆண்டு ஸ்வாமி கோடைக்கானல் சென்றபோது, மாணவர்களைப் பார்த்து "செர்னாபில் அணுஉலை விபத்தின் காரணம் என்ன" என ஒரு கேள்வியைக் கேட்டார். அமர்ந்திருந்த மாணவரில் சிலர் தாங்கள் பத்திரிகையில் படித்ததைக்கூற சிலர் அது நிர்வாகக்கோளாறாலும், கட்டுமான தவறாலும் ஏற்பட்டது என வாதித்தனர். 


🌹சர்வம் பாபா அர்ப்பணம் பெறுவாய் "ஸ்வாமி," ரக்ஷணம்:

அனைத்தையும் பொறுமையுடன் கேட்ட பாபா கூறினார். "அந்த அணு உலையின் கட்டுமான சமயத்தில், அடிக்கல் நாட்டிய நேரம்  எமகண்டம் ஆகும். ஆகவே எமனைப் போல பல உயிர்களைப் பறித்து விட்டது." இதைக் கேட்டு, அருகில் இருந்த ஒரு வெளிநாட்டு பக்தர் வியப்புடன் சொன்னார். "ஸ்வாமி நான் பல திட்டங்களை மேற்பார்வை செய்திருக்கிறேன், ஆனால் அவைகளை ஆரம்பிக்கும் போது  ராகு காலம், எம கண்டமோ பார்த்ததில்லை."

இதைக் கேட்ட பாபா  "ஒருவர் அறியாமல் விஷம் அருந்தினாலும், அதன் விளைவு களிலிருந்து தப்ப இயலாது." என்றார்.

பக்தர். "ஸ்வாமி கால, நேர நியதிகளைப்பற்றி நான் அறியேன். ஆனால் நான் தொடங்கும் அனைத்துப் பணிகளையும் உங்களைப் பிரார்த்தனை செய்து, அர்ப்பணித்த பிறகு தான் தொடங்குகிறேன்". இதைக் கேட்ட ஸ்வாமி மிக மகிழ்ந்து "நீ அப்படிச் செய்தால் இன்னல்கள் எதுவும் நேராது" என்றார்.


ஆதாரம்: இந்த உரையாடல் நடைபெற்ற போது அருகில் இருந்த ஒரு முன்னாள் மாணவனின் அனுபவப் பக்கங்களிலிருந்து....

தமிழில் தொகுத்தளித்தவர் : திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 


🌻 கால நேரம் பார்த்து திட்டங்களைத் தொடங்கவேண்டும் என்ற பொது விதியை வலியுறுத்தும் ஸ்வாமி, செய்யும் செயல்கள் அனைத்தையும் பகவத் அர்ப்பணம் செய்து ஆரம்பித்தால் தீங்குகள் நேராது என்ற தமது பாதுகாப்பு இன்ஷூரன்ஸ் பாலிசியையும் அளித்து  நம்மை வழி நடத்துகிறார். பரிபூரண சராணகதி அடைந்தவர்களை பாபாவின் அருட்காப்பு எப்போதும் ரட்சித்துக் காக்கும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறதல்லவா.🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக