தலைப்பு

திங்கள், 29 நவம்பர், 2021

யூடியூப் தளத்தையே மிரள வைத்த சத்ய சாயி பஜன் வீடியோ!!


எவ்வாறு சுவாமியின் ஒரே ஒரு பஜன் பாடல் இப்போது அகில உலகத்தையே ஆண்டு வருகிறது எனும்  சுவாரஸ்ய அனுபவம் குறித்தும்.. அதன் ஆச்சர்யப் பின்னணி குறித்தும்... திகட்டாத தெள்ளமுதத்தை சுவைக்கப் போகிறோம் இதோ‌...


சர்வ தர்ம சுவாமியின் பஜனைப் பாடல் முதன்முறையாக ஒரு இஸ்லாமிய அன்பர் மியூசிக் சேனலில் (Salim Sulaiman) சுவாமி அவதாரத் திருநாள் அன்று வெளியாகி ஆறு நாட்களில் 50 லட்சம் பார்வையாளர்களை தாண்டி யூடியூப் தளத்தையே மிரளச் செய்திருக்கிறது.. சுவாமியை ஒரு வட்டத்திற்குள் மட்டும் அடைக்க முடியாது என்பது இதன் மூலம் நிதர்சனமாகப் புலனாகிறது... இதைப் பார்த்து பிரம்மித்தவர்கள் அனைவரும் சுவாமியை உணர்ந்து வருகிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை...

தாய்லாண்ட், சிங்கப்பூர், இந்தோனேஷியா, வடஇந்தியா என டாப் 5 YouTube Trending கில் இடம்பிடித்து பெரும் வரவேற்பையும்... உலக ஈர்ப்பையும் பெற்றிருக்கிறது இந்தப் பாடல்...
சுவாமி தனது பேரருள் மகிமையை பெரும்புயலாய் பரவச் செய்து வருகிறார்... அதற்கு இது ஒரு ஒப்பற்ற சான்று!!


SAI NARAYANA BY  SALIM SULAIMAN & TEAM

ஒருமுறை ஒரு சுவாமி பக்தர் இந்த சாயி பஜனை கேட்டுப் பாருங்கள் என தந்திருக்கிறார்.. ராஜ்பண்டிட் அதனை கேட்டு கரைந்து போயிருக்கிறார்.. பக்தி ரசம் சொட்டச் சொட்ட சுவாமி மாணவர்களால் மெட்டமைக்கப்பட்ட இந்தப் பாடல் அவரின் இதயத்தை உருக்கி இருக்கிறது... தினமும் இரவு "சாயி நாராயணா" என்ற இந்த சுவாமி பஜன் பாடலை கேட்காமல் அவர் தூங்குவதில்லை அன்று முதல்... அது இதயத்தை அமைதிப்படுத்துகிறது என தன் அனுபவத்தையும்...இந்த ஊரடங்கு சமயத்தில் எவ்வாறு அந்த சுவாமி பஜனைப் பாடல் பெருந்துணையாகி இருக்கிறது என்பதையும்... அவர் மனம் திறந்து பேசியும் பதிவு செய்திருக்கிறார்.. இதனை நாம் அரங்கமேறிப் பாடலாம் என ஒரு சிந்தனை உதித்து .. அதனை தனது இணை தயாரிப்பாளரும் அருமைப் பாடகருமான சலீமிடம் பகிர்கிறார்.. சலீமும் இந்தப் பாடலைக் கேட்டு உருகிப் போகிறார்...


சுவாமியே அனைத்தும் என இப்படி எழுதி மெட்டமைத்திருக்கிறார்களே.. சுவாமி மேல் சுவாமி மாணவர்களுக்கு எத்தனை பக்தி என வியந்து போகிறார்கள் இருவரும்... இந்தப் பாடலினுடைய அடிநாதம் பாதிக்காதவாறும்.. இதனை மீள் இசைத்து அரங்கேற்றம் செய்ய வேண்டும் என இந்தப் பாடலின் மேல் பேரன்பு கொண்டு... பக்தி ரசம் குறையாமல் தனது ஆன்மாவை கரைத்திருக்கிறார் பாடகர் ராஜ்பண்டிட் மற்றும் சலீம் - சுலைமான்... இந்த மீள் வடிவம் இப்போது யாழ் வடிவமாய் உலக இதயங்களை உருக வைத்துக் கொண்டிருக்கிறது!!


Mahadeva Maheshwara Sai Narayana  by Swami Students (Original tune) 


🌻சாயி பஜன் என்பது நோயுற்றவர்களுக்கு மருந்து.. நேயமுற்றவர்களுக்கு விருந்து... பக்தி பெற்றவர்களுக்கு பரமபதம்... பரந்து விரிந்த உலகத்தவர்க்கு பரம இதம்.. ஆக நாம் ஒவ்வொரு நாளும் சுவாமி பஜனோடு வாழ்ந்து .. சுவாமி பஜன் பாடி ஆழ்ந்து போக வேண்டும் என்பதற்கு இந்தப் பாடல் உத்வேகம் தருகிறது... 🌻




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக