தலைப்பு

ஞாயிறு, 14 நவம்பர், 2021

கடைசி வரிசை மாணவன் அளித்த சிறு புல்லின் பூவை ஏற்றுக் கொண்டு பூரித்த பரமதயாள சுவாமி!


சுவாமிக்கு எதை அளிக்கிறோம் என்பது முக்கியமே இல்லை... எப்படி அளிக்கிறோம் என்பதே முக்கியம்... பொன்னோ, வெள்ளியோ, பித்தளையோ, மண்ணோ எதில் ஏற்றினாலும் தீபம் ஒளிர்கிறது... அதைப் போல் பக்தி இதயம் எதை அளித்தாலும் சுவாமி பூரிக்கிறார் எனும் சத்தியம் சுவாரஸ்ய சம்பவமாய் இதோ...

ஒரு சமயம் ஸ்வாமி மும்பையிலுள்ள தர்ம க்ஷேத்திரத்துக்கு விஜயம் செய்தார். பாலவிகாஸ் ஆசிரியர்களும், மாணவர்களும் அவரை வரவேற்க சிறந்த ஏற்பாடுகள் செய்திருந்தனர். மாணவர்கள் சீரான வரிசையில் உட்கார்ந்திருந்தனர். ஒவ்வொருவரும் சுவாமியிடம் சமர்ப்பிக்க ஒரு ரோஜா மலரைக் கையில் வைத்திருந்தனர். ஸ்வாமி வருவதை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து அவர்கள் முகங்கள் பொலிவுற்று விளங்கின.

அவர்களிடையே ஒரு சிறு பையன் இருந்தான்.பால விகாஸ் நிறுவனத்தில் முறையாகச் சேர இயலாத சிறுவன். இருந்தாலும் அவன் மற்றவர்களுடன் தவறாது வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தான்.அவன் பல ஸ்லோகங்களை மனனம் செய்திருந்தான்.மிகவும் சிறியவனாக இருந்ததால் அவனை முதல் வரிசையில் உட்கார்த்தி வைக்க இயலவில்லை.

ஆசிரியர் அவனை பின் வரிசையில்உட்கார்த்தி வைத்தார்.அவன் கையில் ரோஜா மலர் கொடுக்கப்படவில்லை. இவ்வாறு தான் வேறுபடுத்தப்பட்டது அவனுக்குத் துன்பத்தைக் கொடுத்தது என்பது அவனது தொங்கிய முகத்திலிருந்தே தெரிந்தது. பிறரைப் போல தானும் ஒரு மலரை ஸ்வாமிக்கு சமர்பிக்க வேண்டுமென்று அவன் மிகவும் ஆசைப்பட்டான்.ஆனால் யாரும் அவனுக்கு ஒரு மலரும் தரவில்லை.

ஸ்வாமி குறித்த நேரத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் மலர்களைக் கையில் வைத்திருந்த பையன்களின் வரிசைகள் வழியாக நடந்து வந்தார்.அவர் மென்மையாக அவருக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஒவ்வொரு மலரையும் தொட்டு ஒவ்வொரு மாணவனையும் ஆசிர்வதித்தார். அந்த சிறு பையன் ஸ்வாமி மெதுவாக நடந்து வரும்போது அவரது ஒவ்வொரு அடியினையும், ஒவ்வொரு சைகையினையும் கவனமாகப் பார்த்துக் கொண்டே இருந்தான்.அவன் மெதுவாக நுழைந்து முதல் வரிசையில் உட்கார்ந்து விட்டான். ஸ்வாமி அப்போது அவனருகில் வந்து கொண்டிருந்தார்.

அந்தக் கணத்தில் அந்த சிறுவன் தன்னெதிரே ஒரு புல்லின் பூவைக் காண நேரிட்டது. அதை உடனே பறித்து, நெஞ்சம் விம்ம, ,கையில் வைத்துக் கொண்டிருந்தார். ஸ்வாமி அவனுக்கு நேரே வந்த போது , அவன் தனது சின்னஞ்சிறு கைகளை உயர்த்தி,அன்பு நிறைந்த மனதுடன் மலரை, ஆனால் வித்தியாசமான தொன்றை பகவானுக்கு சமர்ப்பித்தான்.

ஸ்வாமி இனிமையாகச் சிரித்து சிறுவன் சமர்ப்பித்த எளிய பொருளை ஏற்றுக்கொண்டு, சிறுவனின் பிஞ்சு விரல்களை அழுத்தினால.சி றுவனின் அன்பைப் பாராட்டும் வகையில்,ஸ்வாமி அவனைத் தட்டிக்கொடுத்து, அவனுடன் சில வார்த்தைகள் பேசினார்.ஸ்வாமி பிறர் கொடுத்த மலர்களை வெறுமனே தொட்டார்.இந்த சிறு பையன் அன்புடன் அளித்த புல்லின் பூவை கையில் சுமந்து சென்றார்.

அதற்குப்பின் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்கள் மூன்று மணி நேரங்கள் நீடித்தன. அவை முடிந்தபின் ஸ்வாமி வெளியே வந்து அங்கு கூடியிருந்த அனைவரையும் ஆசிர்வதித்தார். ஆனால் அன்புடன் அளிக்கப்பட்ட அந்த புல்லின் பூ ஸ்வாமியின் கையில், மூன்று மணி நேரத்திற்கு முன் இருந்தது போலவே புத்தம் புதியதாக இருந்தது.

பகவான் சத்யசாயி ஒவ்வொரு பக்தனின் இதயத்தின் ஆழத்தில் புதைந்திருக்கும் தாபத்தையும் துன்பத்தையும் கவனித்து அவற்றைத் தீர்க்கிறார்.

ஆதாரம் : தபோவனம்


🌻கொடுத்த அதே புல்லின் பூவை சுவாமி அப்படியே கையில் வைத்திருந்ததில் அந்த சிறு புல்லே போதிமரமாகி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை... சரணாகதி மனதோடு பக்தன் படைப்பதை சுவாமி பூரணமாய் ஏற்று பக்தியை மேலும் பரிபூரணமாக்குகிறார்... சுவாமி இதை செய்தால் சுவாமிக்கு நான் அதை செய்வேன் என்பதல்ல பக்தி... சுவாமி எந்த நிலையில் வைத்திருந்தாலும் அது சுவாமி சங்கல்பம் என திருப்தி கொள்ளும் மனநிறைவு இருக்கிறதே... அதற்கு இந்த உலகமே கொடுத்தாலும் ஈடாகாது!!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக