பிறப்பில் அதிசயம்..
வாழ்வில் அற்புதம்...கருணாமூர்த்தியே !!!
சத்ய சாய் பகவானே!!!! நன்றியுடன். உனை வணங்கி. இந்நிகழ்வினை சமர்ப்பிக்கிறேன்....
மனம் எனும் புயல் காற்று பின்நோக்கி தள்ளியது.. வருடங்கள் நகர்ந்தன..எனினும் பகவானின் அனுக்கிரக புயலானது. இன்னும் ஓயவில்லை... பிறப்பிலிருந்தே பகவானின் பக்தையான நான் நன்கு படித்து. திருமணவயதில் மணமும் புரிந்தேன்... ஸ்ரீ பகவானின் சங்கல்பத் தால் நானும் தாயானேன்... எனக்கு மகளும் பிறந்தாள். சாதாரண குழந்தையாக அல்ல..""வெள்ளைவெளேர் என்ற நிறத்துடனும்... மஞ்சள் நிற முடியுடனும்.நீலநிற விழிகளுடனும்.(மருத்துவத்தில்..ALBINO BABY) என்று சொல்வார்கள்.. மழலைப் பிறந்த ஆனந்தம் மாறவில்லை ...
வருடங்கள் உருண்டோடின.. மகளும் வேகமாக வளர்ந்தாள்... கொள்ளை வனப்புடனும்..,பொருமையில் பூமா தேவியாகவும் , குணக்குன்றாகவும் வளர்ந்த மகளை சரஸ்வதி தேவியும் ஆட்கொண்டாள்... படிப்பில் M.E. வரை முடித்து.. தேர்ச்சியும் பெற்றாள்..... ஒரு கல்லூரியில் பேராசிரியையாகவும் தேர்வு செய்யப்பட்டாள்.. வளர்ந்தது பெண் குழந்தை அல்லவா?? திருமண நேரமும் நெருங்கியது.
புறப்பட்டோம் குடும்பத்துடன் புட்டபர்த்திக்கு.....
எங்களது மகளும் பகவானின் தீவிர பக்தையாயிற்றே. !!!!
நேரில் சென்று பாத நமஸ்காரம் செய்து தரிசித்தோம் அந்த கருணாமூர்த்தியை...
கண்களிலிருந்து முத்து முத்தாக நீர்த் திவலைகள் உதிர்ந்தன ..
கனவிலும் நினைத்துப் பாராத ஒரு அதிசயம்......!!!!! பரிபூர்ண சரணாகதியுடன் அவரது புனித பாதங்களில் வீழ்ந்தோம்... ""ஸ்வாமி.எங்கள் மகளுக்கு தாங்கள் தான் ஒரு நல் வாழ்க்கை அமைய அனுகிரகஹிக்க வேண்டும்."". என்று மனம் புலம்பியது...
அக்கணமே உயிர் பறவை பறந்து விடாதா என்று ஒரு மனக்குமுறல்.. ஆசீர்வாதம் அருவியாக வீழ்ந்தது ....
அக்கணமே உயிர் பறவை பறந்து விடாதா என்று ஒரு மனக்குமுறல்.. ஆசீர்வாதம் அருவியாக வீழ்ந்தது ....
பிறகு சென்னை திரும்பினோம்......
அவ்வளவு தான்....எங்களது குடும்ப நண்பர் மூலம் ஒரு நன்னடத்தையுடன்,
நல்ல வேலையிலும் (துபாய்) நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மகன்.எங்களுக்கு மருமகனான அமைந்தார். எனது மகளுக்கும் ஒரு வருடம் கழித்து ஒரு மகவு "தங்கவிக்ரஹம் போல்,'' சொல்லொணா அழகுடனும்,, பூரண ஆரோக்கியத்துடனும் எனக்கு பேரனாகப் பிறந்தது.. அவனுக்கு
'ஸாய் ப்ரனேஷ் 'என்றுபெயரிட்டு ஸாய் பக்தனாகவே வளர்த்து வருகிறோம்..

எங்களது மகள் சகலவித சௌபாக்கியங்களுடன் ஒரு சிறந்த வாழ்க்கை வாழ்கிறாள். .........
நம்பினோரை கைவிடாத அந்த பரமாத்மாவிற்கு நன்றிச் சொல்லச்சொல்ல மனம்மெழுகாக உருகுகிறது...!!!!! சாய்ராம்......🙏🙏🙏
-திருமதி. ரவிசந்திரிகா, குரோம்பேட்டை...சென்னை.
தொகுத்தவர் : சரஸ்வதி வெங்கட், புட்டபர்த்தி.
தொகுத்தவர் : சரஸ்வதி வெங்கட், புட்டபர்த்தி.
🌻 ஏதேனும் ஓர் குறை இருக்க திருமணம் தள்ளிப் போகும் இந்த காலத்திலும் தனது பக்தரை குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் திருமணம் நிகழ்த்தி வைப்பது இறைவன் சத்ய சாயியின் மாபெரும் அருட் கருணையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக