ராஜமுந்திரியில் முதியோா் இல்லமும் ஒரு சிறுமருத்துவமனையும் வைத்து நடத்தி வந்தவா் திரு. காருண்யாநந்தா அவா்கள். அவரது மருத்துவ மனையில் கார்பிணி பெண் ஒருத்தி மருத்துவ உதவி வேண்டி அனுமதிக்கப்பட்டிருந்தாள்.
அவளை கவனிக்க ஒரு செவிலிய மாது உடன் இருந்தாள். பூரண கர்ப்பிணியான அந்தப் பெண்ணுக்கு இன்னும் ஒரு வாரத்தில் பிரசவம் ஏற்படும் என்று மருத்துவர் கூறினார். அதனால் அந்த செவிலிய மாது இந்த கா்ப்பிணி பெண்ணின் பிரசவகாலம் தாமதமாகும் என எண்ணி அவள் அன்றிரவு சினிமாவுக்கு சென்றுவிட்டாள்.
இரவு அந்த கா்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி எடுத்து துடிக்க அந்த நடு இரவில் அவளை கவனிக்க ஆள் இல்லை. பிரசவம் யாருமில்லாத போது நடந்திடுமோ என கா்ப்பிணி பெண் பயந்திருந்த போது ஒரு செவிலித்தாயாக பகவான் ஶ்ரீ சத்தியசாயி பாபா அவா்கள் தனது அளகளந்த கேசபாரமொடு வந்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பாா்த்து குழந்தையை வெளியில் எடுத்து குளிப்பாட்டி அந்தப் பெண்ணின் அருகே கட்டிலில் படுக்க வைத்து விட்டு சென்றுவிட்டாா். அதி காலை நேரத்தில் ஏற்கனவே பணிக்கு ஒதுக்கப்பட்ட செவிலித்தாய் அறைக்குள் வந்து பாா்த்தபோது கா்ப்பிணிப் பெண் குழந்தை பெற்றிருப்பதையும் அது குளிப்பாட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருப்பதையும் கண்டதும் பதைபதைத்து யாா் பிரசவம் பாா்த்தது என கேட்க அங்கு பகவான் சத்ய சாயி பாபா தென்னை மரத்தின் ஓலைகளை விளையாட்டாக பிடித்தவாறு நிற்கும் படம் மாட்டப்பட்டிருப்பதை அப்பெண் பாா்த்து, அதோ அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர்தான் பிரசவம் பாா்த்ததாக கூறினாள்.
அதனைக் கேட்ட செவிலித்தாய் தனது பணியை சரியாக பாா்க்காமல் இருந்ததற்காக தன்னைத்தானே நொந்து கொண்டாள்.
இந்த விஷயம் அந்த ஆஸ்ரமத்தின் தலைவா் திரு. காருண்யாநந்தாவுக்கு தெரியவர அவா் பதட்டப்பட்டு புட்டபா்த்தி வந்து சோ்ந்தாா். சுவாமியின் நோ்முகப்பேட்டியில் சுவாமி வந்து உதவி செய்ததை உறுதிப்படுத்தி அவா்கள் பணியில் ஒழுங்கில்லாது இருந்ததையும் சுட்டி காட்டினாா். சுவாமியே இங்கு ஒரு தாயின் கருணையுடன் பிரசவம் பாா்த்தது சாயிமாதா என பிராா்த்தியுங்கள் என்று சொல்வது இங்கு நிரூபணம் ஆவதை காண்கிறோம். சாயி தாயும் ஆனாா் என்பதனால் அவரை தாயும் ஆனவன்(தாயுமானவன்) என நாம் நம்பிக்கையோடு அழைக்கலாம் அல்லவா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக