தலைப்பு

புதன், 11 செப்டம்பர், 2019

'ஸ்ரீ சத்யசாயி்' - என் வாழ்க்கையின் தலைமை நிர்வாக அதிகாரி || திரு. N. T அருண்குமார்

திரு. N. T அருண்குமார்
CMD & Head of Innovation | Board Director | Digital, Technology, Global Business Services, Telstra 🇦🇺
CMD & Head of Innovation | Board Director | Digital, Technology, Global Business Services

திரு. அருண்குமார் அவர்கள் UBS இன்வெஸ்ட்மென்ட் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனராக(Manging director) பணியாற்றி இருக்கிறார். அதற்கு முன்னதாக D&B ட்ரான்ஸ்யூனியன் அனலைசிங் and  பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும்(CEO) இருந்திருக்கிறார்.

2008 ஆம் வருடம் திரு. அருண்குமார் அவர்கள் ரேடியோ சாயிக்கு  அளித்த ஆங்கில பேட்டியின் தமிழாக்கம் கீழ்வருமாறு.. 

எங்கள் நிறுவனத்துடன் சுவாமி எப்பொழுதும் எல்லா சமயங்களிலும்
துணையிருந்தார். சென்ற வருடம் எங்கள் அலுவலகத்தின் சென்னை பகுதி ஒரு தனி நிறுவனமாக்கப் பட்டபோது என்னை அதன் முக்கிய செயல் அதிகாரியாக அறிவித்த போது, நான் ஆச்சரியமடைந்தேன். ஏனென்றால் அதுவரை அந்த பதவிக்கு அந்த அலுவலகத்தின் நிர்வாக குழுவினிடம்  பேச்சுவார்த்தைகளோ அல்லது சிபாரிசுகளோ இல்லை. இந்த நிகழ்வுகள் எல்லாம், என்னை முக்கிய செயல் அதிகாரியாக ஏற்கனவே நிர்ணயித்தது போல் இருந்தது. அப்பொழுதுதான் சுவாமியின் சர்வ வல்லமையையும் சர்வ வியாபக தன்மையையும் முழுமையாக உணர முடிந்தது.  2004ஆம் வருடம் சுவாமி என்னிடம் இதை முன்னதாகவே கூறினார். மார்ச் 26, 2004 அன்றைய தினம் நமது பேரன்பிற்குரிய சுவாமி போலரிஸ்(polaris) நிறுவனத்தில் இருந்த எங்கள் பதினோரு பேர்களை வரவழைத்து நாங்கள் தயார் செய்திருந்த அறிக்கையிலிருந்து அதன் உரைகளை என்னிடம் படிக்கச் சொன்னார்.

பிறகு வாசலில் இருந்த என்னை அழைத்தார். 
அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, 

சுவாமி: நீங்கள் போலரிஸ் அருண் தானே? 
நான்: "ஆம் சுவாமி "என்றேன். 
சுவாமி: தலைமை நிர்வாக அதிகாரி(CEO)? 
நான்: "இல்லை சுவாமி"... 
சுவாமி: ஓ! அதுவேறு அருண் என்றார், தனக்கே உரித்தான கண்சிமிட்டலுடன்! 
அதன்பின் பல நேரம் பேச்சுவார்த்தைகலும், சாயி லீலைகளும் தொடர்ந்தன. சுவாமி விபூதி வரவழைத்து "உங்கள்  பணிக்கு என் ஆசீர்வாதம்" என்றார்.


எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. நான் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்ற போகிறேன் என்பதை சுவாமி முன்கூட்டியே சொல்லி இருந்தார். சுவாமி இப்படி விளையாட்டாக சொல்லும் சொல் கூட என்றாவது ஒரு நாள் அது வேதவாக்காக மாறும் என்பதை நான் பின்னர்தான் உணர்ந்தேன். சுவாமி இதை சொன்ன சமயம் நான் வேலையை விட்டு ராஜினாமா அறிவிப்பு காலத்திலிருந்தேன். அன்று சிலரிடம் நான் இந்த விவரங்களை கூறியபோது, திரு. தேவகவுடா பற்றிய ஒரு நிகழ்வினை கேட்டறிந்தேன். திரு.தேவகவுடா கர்நாடகத்தின் முதலமைச்சராக பணியாற்றிய போது, சுவாமி அவரை, நமது பிரதமர் என்று ஒரு சொற்பொழிவின் போது குறிப்பிட்டாராம். இது நடந்து சில மாதங்கள் கழித்து, எதிர்பாராத விதமாக  திரு. தேவகவுடா பாரத பிரதமர் ஆனார்.


நானிருந்த இக்கட்டான சூழலில் இது பற்றி பெரிதாக எதையும் உணர முடியவில்லை. சுவாமியின் ஆசீர்வாதங்களாலும், அன்பினாலும் நான் பேரானந்தத்தில் இருந்தேன். நான் தற்சமயம் D&B நிறுவனத்தில் இருந்த பதவி, சுவாமியால் அன்று தீர்க்கதரிசனமாக கூறியது என்பதினை, நூற்றுக்கு நூறு நான் இதயப்பூர்வமாக உணர்ந்ததை மறுக்க முடியாது. இது சுவாமியின் அளவிடமுடியாத கருணையும் தயாள குணமுமாகும். சென்ற ஆறு மாதங்களில் எங்கள் நிறுவனம் பல சூழ்நிலைகளில் நம்பமுடியாத வகைகளில் மாற்றங்களை சந்தித்து இருக்கிறது. இவை அனைத்தும் சுவாமியின் சர்வ வியாபக தன்மையை தான் குறிக்கிறது. சென்றவருடம் பல கஷ்டமான சூழ்நிலைகளில் சுவாமி என்னை தனது அன்பு கரங்களினால் அரவணைத்து சென்றதை மனப் பூர்வமாக உணர்ந்தேன்.

ஆதாரம்: Radio Sai | Swami & me Volume 6 - Issue 03 | MARCH - 2008
மொழிபெயர்ப்பு: டி. சதாசிவ குமார், சென்னை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக