தலைப்பு

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

இறந்தவர் மீண்டார்!



1988, வியாழக்கிழமை அக்டோபர் 20 ஆம் நாள் சுவாமி பக்தர்களை மீண்டும் ஒரு முறை வியப்பில் ஆழ்த்தினார். அன்று விஜயதசமி தினம், திடீரென்று இதற்குமுன் அவர் எப்போதும் செய்திராதபடி, தனது சொற்பொழிவை இடையில் நிறுத்தி விட்டார். பூர்ணசந்திரா அரங்கத்தில் மேடையிலிருந்து
படிகள் வழியாக கீழே இறங்கி வி..பி பகுதிக்குச் சென்றார். நீண்ட கால
பக்தரான பிரியகேடியர் போஸ் அங்கு இருந்தார். அவர்தான் பிரசாந்தி நிலையத்தில் பெரிய சர்வதர்ம ஸ்தூபியை நிறுவியர். சுவாமி அவருக்குக் கொடுத்த புதிய ஆடையை அணிந்து கொண்டு, விழாவை நன்கு ரசித்துக்கொண்டிருந்தார். பிறகு தீடிரென்று அவர் நாற்காலியிலிருந்து விழுந்து விட்டார். உடனே மருத்துவர்கள் அழைக்கப்பட்டு சோதனை செய்தலில் அவர் இறந்து விட்டதாகத் தெரியவந்தது. 

சுவாமி அவர் பக்கம் விரைந்தார். தனது உள்ளங்கையை அவர் தலை மீது வைத்து அழுத்தி, ''எழுந்திரு'' என்று உத்தர விட்டார்.

ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்தவர்போல போஸ் கண்களைத் திறந்தார். சுவாமி மறுபடியும் ''எழுந்து நில்'' என்று ஆணையிட்டார். அவர் அவரது இறைவனை நோக்கி கைகளைக்கூப்பி அன்புடனும், நன்றியுடனும் எழுந்து நின்றார். ' இப்பூவுலகைவிட்டு போஸ் நீங்கும் நேரம் இதுவல்ல' என்று சுவாமி முடிவு செய்திருக்கிறார் போலும்! 

பிறகு சுவாமி மேடைக்குத் திரும்பி, தனது அருளுரையைத் தொடர்ந்தார்.

சாய்ராம்

ஆதாரம் : புத்தகம் - இதோ நமது தெய்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக